கொழும்பு செல்லக் காத்திருந்த பஸ் நொருங்கியது
சனிக்கிழமை தனியார் பஸ் ஒன்றின் மீது இடம்பெற்ற கல்வீச்சில் பெண் ஒருவர் காயம் அடைந்தார். அத்துடன் பஸ் வண்டியின் கண்ணாடிகளும் உடைந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக நேற்றுமுன்தினமிரவு பண்ணையில் இருந்து புறப்பட இருந்த பஸ்களை மறித்து, கொழும்பு பயணத்தை மேற்க்கொள்ள விடாது தடை செய்யக்கோரி வழித்தட அனுமதிப்பத்திரமற்றவர்கள் பஸ்களை வீதியின் குறுக்கே நிறுத்தி போராட்டம் ஒன்றை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக நேற்று பகல் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையே நடந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் – கொழும்பு பாதையில் சேவையில் ஈடுபட்ட நாற்பது பஸ்களுக்கு அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபடக் கூடாது என்ற அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதன் எதிரொலியாக நேற்று மாலையில் பண்ணையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்படவிருந்த தனியார் பஸ் மீது கல்வீச்சு இடம்பெற்றுள்ளது இது சம்பந்தமாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து தனியார் பஸ் உரிமையாளர்கள் மூவரை பொலிஸார் தேடி வருகின்றனர் எனவும் பாதிக்கப்பட்டுள்ள பஸ் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
http://www.jvpnews.com/srilanka/80878.html
தமிழர்களுக்கு இலங்கையை விட்டால் வேறு கதியில்லை மகிந்தர் நக்கல்
வேறு நாடுகள் தமிழ் மக்களைப் பாரமெடுக்கப் போவதுமில்லை. அதனை மனதிற்கொண்டு நாம் பிறந்த இந்த தாய்த் திருநாட்டை நாம் அனைவரும் இணைந்து பாதுகாக்க வேண்டும். அதற்காக பொறுப்பும் அனைவருக்கும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/80883.html
Geen opmerkingen:
Een reactie posten