[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 05:02.44 PM GMT ]
துறைமுகங்கள் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சினால் 65 மில்லியன் ரூபாய் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட, இந்த அலுவலகம் மட்டக்களப்பு யாட் வீதியில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாணப் பணிப்பாளர் ரி. தர்மரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், துறைமுகங்கள் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் நிர்மல கொத்தலாவல பிரதம அதிதியாக கலந்துகொண்டு அலுலகத்தினை திறந்து வைத்தனர்.
பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம். எல்.ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறுக், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்புத் தொகுதி அமைப்பாளர் அருண் தம்பிமுத்து மற்றும் பணிப்பாளர் நாயகம் டபிள்யு. எ. எஸ். வீரசிங்க, அமைச்சின் செயலாளர் ஆர். டபிள்யு. ஆர். பேமசிறி, பணிப்பாளர் (பராமரிப்பு) பி.கே. டி. திஸ்ஸர மற்றும் மட்டக்களப்பு அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரெட்ண ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகங்களைக் கொண்டதாக இந்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கட்டிடத்தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUis2.html
மனைவிக்கு மயக்க மாத்திரை ஊட்டி கொலைசெய்ய முற்பட்ட கணவன் கைது! - மட்டக்களப்பில் சம்பவம்
[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 07:29.44 PM GMT ]
கைதுசெய்யப்பட்டவரை களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
40ம் கிராமத்தைச் சேந்த 24 வயதுடைய தங்கராசா- நிசாந்தன் என்பவர் கடந்த 2008ம் ஆண்டு தனது வேலையின் நிமித்தம் அரேபிய நாட்டிற்கு சென்று அண்மையில் நாடு திரும்பியிருந்தார்.
கடந்த சில காலமாக கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று குறித்த நபர் வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்த ஒரு வகையான மயக்க மாத்திரைகளை மனைவிக்கு வற்புறுத்தி ஊட்டி கொலை செய்ய முற்பட்டதாக அவரின் மனைவியான 21 வயதுடைய குவேந்தினி வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்திருந்ததாகவும் செல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையினை தொடர்ந்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டு களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது மனித கொலை செய்ய எத்தணித்தமை என்ற குற்றசாட்டின் பெயரில் விசாரணைகளுக்காக 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/show-RUmsyJTaKUis3.html
ஐ.நா சர்வதேச விசாரணையில் சாட்சியம் அளிப்போர் தொடர்பில் ஆராயப்படும்: இலங்கை அரசாங்கம்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 செப்ரெம்பர் 2014, 01:11.00 AM GMT ]
அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச விசாரணைகளில் பங்கேற்போர் தொடர்பில், நடவடிக்கை எடுக்கும் முன்னர் அது தொடர்பான நிலைமைகள் ஆராயப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
எதிர்ப்பார்ப்பின் அடிப்படையில் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது.
எனினும் சர்வதேச விசாரணைகளுக்கு சாட்சியமளிப்போர் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு என்ன நடைமுறையை பின்பற்றுவது தொடர்பாக ஆராய வேண்டியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச விசாரணைக்கு செல்வோரை தடுப்பது குறித்து நிலைமைகளை பொறுத்து தேவையேற்பட்டால் ஆராயப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் குறித்த சர்வதேச விசாரணையில் சாட்சியமளிக்கப்போவதாக அறிவித்துள்ள நிலையிலேயே அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு வெளியாகியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTbKUis5.html
Geen opmerkingen:
Een reactie posten