[ ஞாயிற்றுக்கிழமை, 07 செப்ரெம்பர் 2014, 01:19.46 AM GMT ]
வன்முறைகளில் இருந்து விலகியிருக்குமாறு அரசியல் கட்சித் தலைவர்கள், தமது ஆதரவாளர்களுக்கு வலியுறுத்த வேண்டும்.
இந்தநிலையில் ஊவா மாகாணத்தின் குறிப்பாக மொனராகலையில் வன்முறைகளை தடுக்க பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் உரிய பணிப்புரைகளை விடுக்க வேண்டும் என்று தேசப்பிரிய கேட்டுள்ளார்.
இதற்கிடையில் தேர்தல் வன்முறைகளை கட்டுப்படுத்தும் முகமாக அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடங்கிய சட்டத்தரணிகளை கொண்டு குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJ
வடக்கில் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தும் மேற்குலக நாடுகளின் ராஜதந்திரிகள்!
[ ஞாயிற்றுக்கிழமை, 07 செப்ரெம்பர் 2014, 01:29.04 AM GMT ]
மேற்குலக நாடுகளின் ராஜதந்திர அதிகாரிகள் வட பகுதிக்கு இரகசிய விஜயங்களை மேற்கொள்கின்றனர்.
இவ்வாறு இரகசிய விஜயங்களை மேற்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து இரகசிய பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பிரதி தூதுவர் உள்ளிட்ட ஐந்து அதிகாரிகள் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.
அமெரிக்க தூதரக அதிகாரிகள் யாழ்ப்பாணம் கைதடியில் கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.
எனினும், இந்தக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இரண்டு மாகாணசபை உறுப்பினர்களும் பங்கேற்றிருந்த காரணத்தினால் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.
வட மாகாணசபை உறுப்பினர் ஆனந்தி சசிதரனுடன் இந்தப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அண்மைய நாட்களாக மேற்குலக நாடுகளின் தூதுவர்கள், இராஜதந்திரிகள் அதிகளவில் வடக்கிற்கு விஜயங்களை மேற்கொள்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக் குழுவின் விசாரணைகளுக்கு உதவும் வகையில் இவர்களின் விஜயங்கள் அமைந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் சுட்டிக்காட்யுள்ளனர்.
இரகசியமான முறையில் சாட்சியங்கள் திரட்டப்பட்டு ஜெனீவாவிற்கு அனுப்பி வைக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
பிரிட்டன், ஜேர்மன், அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்குலக நாடுகளின் ராஜதந்திரிகள் அண்மையில் வடக்கிற்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJTbKUis7.html
Geen opmerkingen:
Een reactie posten