தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 6 september 2014

சர்வதேச விசாரணைக்கு இலங்கை அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும்: மனித உரிமைகள் ஆணையாளர்!



தமிழரசுக் கட்சி அரசாங்கத்திற்கு டிசம்பர் 31ம் திகதி வரை காலக்கெடு - புதிய தலைவராக மாவை சேனாதிராஜா
[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 04:09.09 PM GMT ]
அரசாங்கம் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் மேற்கொண்டுவரும் தனது அடக்குமுறை நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டுமென இலங்கைத் தமிழரசுக் கட்சி காலக்கெடு விதித்துள்ளது.
தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாடு வவுனியாவில் நேற்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், நாளைய இறுதி அமர்வில் மாநாட்டுத் தீர்மானங்கள் வெளியிடப்படவிருக்கின்றன. அதில்,
“அடுத்த மூன்று மாதத்துக்குள், அதாவது இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் அடக்கு முறை நடவடிக்கைகளை நிறுத்தி, நிலைமையைச் சீர்செய்வதற்கு இலங்கை அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அவ்வாறு செய்யத் தவறுமானால், அடக்குமுறை நடவடிக்கைகள் தொடருமானால், தைத் திங்கள் முதலாம் திகதி தொடக்கம் தமிழர் தாயகம் எங்கும் அஹிம்சைப் போராட்டம் தொடர்ந்து கட்டவிழும்.
அந்தப் போராட்டத்துக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் முழு ஆதரவு தரவேண்டும்” என இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவிக்கவிருக்கின்றது.
அங்கு அறிவிக்கப்படவிருக்கும் பதினைந்துக்கும் குறையாத தீர்மானங்களில் கடைசித் தீர்மானம் அஹிம்சைப் போராட்டம் பற்றிய அறிவிப்பாக இருக்கும் என்று தெரிய வருகின்றது.
“பிளவுபடாத - ஐக்கிய - இலங்கைக்குள் இணைந்த வடக்கு, கிழக்குப் பிரதேசத்துக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் வழிமுறையில் தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஓர் அரசு தமிழினத்துக்கு அதற்கேயுரிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் கிட்டும் வரையில் தொடர்ந்து போராடுவோம் என எமது மக்களுக்கு உறுதி கூறுகின்றோம்" - என்ற அடிப்படையிலான தீர்மானம் ஒன்றும் நாளை தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் நிறைவேற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளன.
தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜா, செயலாளராக துரைராஜசிங்கம் தெரிவு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15வது தேசிய மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் ஆரம்பமாகியது.
கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் காலை 9.30க்கு ஆரம்பமான நிகழ்வுகளில் 160 பொதுச்சபை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது தமிழரசுக் கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட கட்சியின் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.
இதனையடுத்து நாளை இடம்பெறவுள்ள கட்சியின் மாநாட்டில் வெளியிடப்படும் தீர்மானங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது.
இன்றைய நிகழ்வுகளில் தமிழ்த் தேசியத்தின் பதிவுகள் என்ற தலைப்பிலான புகைப்பட கண்காட்சியும் இடம்பெற்றிருந்ததுடன் மாலை 02.00 மணிக்கு தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி மாநாடும் இடம்பெறவுள்ளது.
இரண்டாம் இணைப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்சியின் சம்மேளனக் கூட்டத்துக்கு முன்னதான புதிய மத்திய அமைப்புக் கூட்டத்தில் இதற்கான பிரேரணை முன்மொழிய, ஏகமனதாக மாவை சேனாதிராஜா தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
இந்தநிலையில் கட்சியின் செயலாளராக கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர் துரைராஜசிங்கம் நியமிக்கப்பட்டார்.
இதுவரை காலமும் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனே தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் செயற்பட்டு வந்தார்.
இந்த தலைமைத்துவ மற்றும் கட்சியின் பொறுப்பு மாற்றங்கள் குறித்து அறிவிப்பு நாளை நடைபெறவுள்ள பேராளர் மாநாட்டில் பகிரங்கமாக அறிவிக்கப்படவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUis0.html
சர்வதேச விசாரணைக்கு இலங்கை அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும்: மனித உரிமைகள் ஆணையாளர்
[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 04:41.43 PM GMT ]
இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இலங்கையின் அதிகாரிகள் அதற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 27வது அமர்வு எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் அவருக்கு ஆணையாளர் பொறுப்புகள் வழங்கப்படவுள்ளன.
இந்தநிலையிலேயே ஆணையாளர் செய்ட்டின் ஆரம்ப அறிக்கை வெளியாகியுள்ளது.
இலங்கையில் மனித உரிமை காப்பாளர்கள் மற்றும் சாட்சிகளுக்கு எதிராக பயமுறுத்தல்கள் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து செய்ட் தமது கவலையை வெளியிட்டுள்ளார்.
தமது முதல் அறிக்கையில் இலங்கையில் சிறுபான்மை முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைகள் குறித்து ஆணையாளர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை புதிய ஆணையாளர், நவநீதம்பிள்ளையை போலல்லாது இலங்கையுடன் உரிய புரிந்துணர்வுடன் நடந்து கொள்வார் என்று இலங்கை அரசாங்கம் முன்னதாக நம்பிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUis1.html

Geen opmerkingen:

Een reactie posten