தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 5 september 2014

அப்பாவி மக்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்: முஸ்லிம் பேரவை கண்டனம்!

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் அப்பாவி மக்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தி வருவதாக இலங்கை முஸ்லிம் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது.
ஊடகவியலாளர்கள், அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள், அப்பாவி பொதுமக்கள், தொண்டர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை.
கடந்த செவ்வாய்க்கிழமை மற்றுமொரு அமெரிக்க ஊடகவியலாளரை தீவிரவாதிகள் படுகொலை செய்திருந்தனர்.
ஊடகவியலாளர்  ஸ்டீவன் ஸ்கொட்லோப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் இழிவான ஓர் செயலாகும்.
இஸ்லாத்தின் பெயரால் அப்பாவி பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் கொடூரங்களை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
சித்திரவதைகள், கொடுமைகள், எதிரிகளின் கொலைகளைக் கூட இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை.
ஊடகவியலாளர்கள், அப்பாவி பொதுமக்கள், அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்களை கொலை செய்யுமாறு இஸ்லாம் மார்க்கமோ அல்லது நபிகள் நாயகமோ ஒருபோதும் கோரவில்லை.
பிரச்சார நோக்கில் மனிதர்கள் மீது மேற்கொள்ளப்படும் கொடூரமான தாக்குதல்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என இலங்கை முஸ்லிம் பேரவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTZKUjt3.html

Geen opmerkingen:

Een reactie posten