[ வெள்ளிக்கிழமை, 05 செப்ரெம்பர் 2014, 06:20.28 AM GMT ]
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து ஊவா மாகாணத்தில் தேர்தல் வன்முறைகள் படிப்படியாக அதிகரித்து வந்துள்ளதாகவும் அண்மைய காலமாக வன்முறைகள் உச்சத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஊவா மாகாணத்தில் இடம்பெறும் தேர்தல் வன்முறைகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தி, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு செய்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய, பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மற்றும் அந்த கட்சியின் சட்ட பிரிவு தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTZKUjt5.html
வடமாகாண சபையை இயங்கவிடாமல் அரசாங்கம் முட்டுக்கட்டை!- யாழ். ஆயர்
[ வெள்ளிக்கிழமை, 05 செப்ரெம்பர் 2014, 06:26.35 AM GMT ]
யாழ்.ஆயர் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதி பிரதம திட்டப்பணிப்பாளர் அன்ரூ மன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு யாழ்.ஆயர் இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இச்சந்திப்பை தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை, ஆளுநர் பதவியில் இருந்து மாற்றாமல் தொடர்ந்து அவரை இரண்டாவது தடவையாக நியமித்து வடமாகாண சபையின் செயற்பாடுகளை செய்யவிடாமல் அரசாங்கம் முட்டுக்கட்டையாக இருப்பதாக அவருக்கு எடுத்துக்கூறினேன்.
தமிழ் மக்கள் மத்தியில் திருப்பம் ஒன்று கட்டாயம் வேண்டும். தமிழ் மக்கள் சந்தோஷமாக வாழ்வதற்கு ஏற்ற வழிவகைகளை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என அவரிடம் கேட்டுக்கொண்டேன்.
வடமாகாண சபைக்கு இருக்கும் முட்டுக்கட்டைகளை தான் ஏற்றுக் கொள்வதாகவும், இது தொடர்பில் வடமாகாண முதலமைச்சரும் தன்னிடம் எடுத்துக் கூறியதாகவும் அன்ரு மன், தனக்கு தெரிவித்ததாக ஆயர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTZKUjt6.html
Geen opmerkingen:
Een reactie posten