தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 6 september 2014

யசூசி அகாசி கொழும்பில்- யாழ்ப்பாணம் செல்ல அனுமதியில்லை ?

மூன்று நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு கொழும்புக்கு சென்றுள்ள ஜப்பான் தூதுவர் யசூசி அகசி இன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார். இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள சந்திப்பில் வடக்கு கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் வடமாகாண சபை செயற்படுவதற்கு அரசாங்கம் தடையாவுள்ளமை போன்ற பல்வேறு விடயங்கள் உரையாடப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
அதேவேளை வடக்கு கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு ஜப்பான் நேரடியாக உதவியளிக்க வேண்டும் என கோரவுள்ளதாகவும் மகஜர் ஒன்று கையளிக்கப்படும் என்றும் கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை யசூசி அகாசி யாழ்ப்பாணம் செல்வதற்கு கோரியபோதும் அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என கொழும்பு தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. அனாலும் யாழ்ப்பாணத்திற்கு செல்ல வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளதாகவும் அது தொடர்பாக அரசாங்கம் பரிசீலிப்பதாகவும் கூறப்படுகின்றது.
2002ஆம் ஆண்டு நேர்வேயின் ஏற்பாட்டில் அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையே பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டபோது அன்றில் இருந்து யசூசி அகாசி ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான சமாதான தூதுவராக நியமிக்கப்பட்டிருந்தார். இது அவரது இலங்கைக்கான 24 ஆவது பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.athirvu.com/newsdetail/940.html

Geen opmerkingen:

Een reactie posten