தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 september 2014

கொழும்பு பிரபல பாடசாலை மாணவி மாணவா்களுடன் துர்நடத்தை…

கம்பஹா மாக்கேவிட்ட பிரதேசத்திலுள்ள பாழடைந்த வீடொன்றில் மாணவியொருவர் உட்பட மூன்று மாணவர்களை கம்பஹா பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பிலுள்ள பிரபல மகளிர் கல்லூரி மாணவியொருவரும், பிரபல ஆண்கள் பாடசாலை மாணவர்கள் மூவரெனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்ட மாணவன் ஒருவனிடமிருந்து கஞ்சா சரையொன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாழடைந்த வீட்டில் குறித்த மாணவியும், மாணவர்களும் தங்கியிருப்பதாக பிரதேசவாசிகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே பொலிஸாரினால் பாழடைந்த வீடு சுற்றி வளைக்கப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் ஜி.சீ.ஈ சாதாரண தரத்தில் கல்வி கற்று வருகின்றவர்கள் எனவும் மாணவியின் தாய் வெளிநாட்டில் தொழில் புரிந்து வருகின்றவர் எனத் தெரியவந்துள்ளது.
எனினும் 16 வயதுடைய குறித்த மாணவி தற்போது தந்தை மற்றும் உறவினர்களுடன் கொழும்பில் வசித்து வருகின்றார் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்கள் தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/82748.html

Geen opmerkingen:

Een reactie posten