[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 07:18.35 AM GMT ]
2014 ஆம் ஆண்டுக்கான அரச செலவுகளில் 67 ஆயிரத்து 782 கோடி ரூபாவை ராஜபக்ஷ குடும்பத்தினர் பொறுப்பில் இருக்கும் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டது.
எவ்வாறாயினும் இந்த மதிப்பீட்டை விட செலவுகள் அதிகரிப்பது வழமையானது.
2014 ஆம் ஆண்டில் ஜனாதிபதியின் செலவுகளுக்காக வரவு செலவுத் திட்டத்தில் 857 கோடி ரூபா ஒதுக்கப்பட்டது. இந்த நிதி போதுமானதாக இருக்கவில்லை என்பதால், மேலும் 34 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், அடுத்த வருடத்திற்கான ஜனாதிபதியின் செலவுகளுக்காக 857 கோடியே 95 லட்சத்து 50 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பொறுப்பின் கீழ் இருக்கும் நிதியமைச்சுக்காக 18 ஆயிரத்து 92 கோடியே 54 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பொறுப்பின் கீழ் இருக்கும் மற்றுமொரு அமைச்சான பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்காக 28 ஆயிரத்து 502 கோடியே 20 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பொறுப்பில் இருக்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்காக 11 ஆயிரத்து 300 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதியின் பொறுப்பில் இருக்கும் துறைமுகம் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சுக்காக 20 ஆயிரத்து 33 கோடியே 50 லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJRbKViw5.html
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் நியூயோர்க்கிலும், கொழும்பிலும் ஆரம்பமா? மனோ கணேசன்
[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 07:31.27 AM GMT ]
இந்த பிரச்சாரத்தின் அடுத்த கட்டம் அரச ஆசீர்வாதங்களுடன் மியன்மாரின் சர்ச்சைக்குரிய பௌத்த மதகுரு விராது அவர்களை அழைத்து வந்து, பொதுபல சேனா கொழும்பில் நடத்தும் மாநாட்டின் மூலம் ஆரம்பித்து வைக்கப்படுகிறது.
இந்த இரண்டு கருத்தோட்ட முன்னெடுப்புகளின் மூலம் அரசாங்கத்தின் தேர்தல் பிரச்சாரம் முழுக்கவும் சிங்கள பெளத்த அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட போகின்றது என்று தோன்றுகிறது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
கட்சி தலைமைமையகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஜனநாயக இளைஞர் இணைய வாராந்திர அரசியல் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
பல இனங்கள் வாழும், பல மதங்கள் கடைபிடிக்கப்படும், பல மொழிகள் பேசப்படும் இந்த நாட்டின் பன்மை தன்மையை நிராகரித்து, இந்த நாட்டை ஒரு சிங்கள பெளத்த ராஜ்யமாக அறிவிக்கும் கொள்கை நிலைப்பாட்டை பொதுபல சேனா அதிகாரப்பூர்வமாக முன்னெடுகின்றது.
இது இஸ்லாமிய பேரரசை உருவாக்க போகிறோம் என்று கூறி செயற்படும் ஐஎஸ்-ஐஎஸ் அடிப்படைவாதிகளின் போக்குக்கு சமானமானது. ஒரு இனம், ஒரு மதம், ஒரு மொழி என்பது ஏனைய இனங்களையும், மதங்களையும், மொழிகளையும் பிரித்து வைக்கும் கொள்கையாகும்.
ஒரு இனம் என்றால் இரண்டு நாடு ஆகிறது. பல இனங்கள் என்றால் ஒரே நாடு ஆகிறது. ஆகவே ஒரு இன, மத அடிப்படையில் செயற்படும் பொதுபல சேனாவின் கொள்கை பிரிவினைவாத கொள்கை ஆகும். ஒரு காலத்தில் தமிழர்களை பிரிவினைவாதிகள் என்று சொல்லியவர்கள், இன்று தாமே பிரிவினை கொள்கையை முன்னெடுக்கின்றார்கள்.
அதேவேளை தமிழர்கள் ஐக்கிய இலங்கை கொள்கையை முன்னேடுக்கின்றோம். சர்வதேச விசாரணைதான் கட்டாயமாக வேண்டும் என்று சொல்லும் தரப்புகள் இந்நாட்டில் இருக்கின்றன.
ஆனால் நாங்கள் ஒருபோதும் சர்வதேச விசாரணைதான் கட்டாயமாக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கவில்லை. ஆனால், சர்வதேச விசாரணை வேண்டாம். நாம் உள்நாட்டில் நம்பக தன்மை வாய்ந்த விசாரணைகளை முன்னெடுக்கின்றோம் என்று நீங்கள்தான் ஐநா செயலாளர் நாயகத்துக்கு எழுத்து மூலம் உறுதி சொன்னீர்கள்.
அதுதான் இன்று பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. இப்போது சர்வதேச விசாரணை வேண்டாம் என்ற கோஷத்தையும், சிங்கள பெளத்த பேரரசு என்ற கோஷத்தையும் முன்வைத்து கொண்டு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை அரசாங்கம் சந்திக்க திட்டமிடுமானால், அது இந்த நாடு சந்திக்கும் மிகப்பெரும் தூரதிஷ்டமாகும்.
இது எதிரணிக்கு மட்டுமல்ல, அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கும் அனைத்து தமிழ், முஸ்லிம் மற்றும் ஜனநாயக சக்திகளுக்கும் சவாலாகும். இந்நிலையில் இதற்கு எதிராக இந்நாட்டின் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று திரள வேண்டியது வரலாற்று கட்டாயமாகும்.
http://www.tamilwin.com/show-RUmsyJRbKViw6.html
கற்பிட்டி தீவுகள் தனியாருக்குத் தாரை வார்ப்பு: குமுறும் மீனவர்கள்
[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 07:44.30 AM GMT ]
சுற்றுலாத் துறை அபிவிருத்தி என்ற பெயரில் நட்சத்திர ஹோட்டல்களை நிர்மாணிப்பதற்காகவே இங்குள்ள நான்கு தீவுகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. ரிசோட் லங்கா நிறுவனம் இவற்றை குத்தகைக்கு பெற்றுள்ளது.
இந்த தீவுகள் இதுவரை காலமும் மீனவர்களின் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளதுடன், இப்பகுதியில் அவர்களின் குடியிருப்புகளும் அமைந்திருந்தன. எனினும் தற்போது அவர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளனர்.
அரசியல் நட்புறவின் அடிப்படையிலும், பெருந்தொகை கமிஷன் பணத்துக்காகவும் அரசியல்வாதிகள் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை கற்பிட்டி பிரதேச மீனவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருப்பதாக மீனவர் அமைப்புகள் ஆதங்கம் தெரிவித்துள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyJRbKViw7.html
Geen opmerkingen:
Een reactie posten