தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 26 september 2014

தேர்தல் கண்காணிப்பாளர்கள் மீது அமைச்சர் டிலான் குற்றச்சாட்டு



இலங்கை வரும் சீன நீர்மூழ்கி கப்பல்கள்: வலுக்கும் சீனாவின் ஆதிக்கம்
[ வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2014, 12:19.04 PM GMT ]
சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் சில இலங்கைக்கு வரவுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீன ஜனாதிபதி ஷீ ஜிங்பிங் கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்த போது சீனாவின் டீசல் மற்றும் இலத்திரனியல் நீர்மூழ்கி கப்பல் கொழும்புக்கு வந்தது.
இது இந்து சமுத்திர பகுதிக்கு வந்த முதல் சீன நீர் மூழ்கி கப்பல் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜிங்பிங்கின் வருகையின் போது பணிக்குழுவுக்கு உதவும் நோக்கில் சோங்ஷிங் என்ற பாரிய நீர் மூழ்கி கப்பல், சீனாவின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு துறைமுகத்திற்கு தெற்கு முனையத்திற்கு வருகை தந்தது.
இந்த நடவடிக்கையானது இந்திய பெருங்கடலில் சீனா தனது பலத்தை மேற்கொள்ள எடுத்த முதல் படியான செயற்பாடு என கருதப்படுகிறது.
இந்த கப்பல் சீனாவில் வடிவமைக்கப்பட்ட இரண்டாம் தலைமுறை நீர் மூழ்கி கப்பல் என கூறப்படுகிறது.
திசை அறியும் கருவி, வானொலி, ரேடார் எச்சரிக்கை பெறும் கட்டமைப்பு என்பன பொருத்தப்பட்ட முதல் சீன நீர்மூழ்கி கப்பல் இது என தெரியவருகிறது. அத்துடன் இதில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களும் உள்ளன.
இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் எதிர்வரும் ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதம் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyJRaKVis4.html

பலஸ்தீனத்திற்கு ஒரு மில்லியன் டொலர்களை கையளித்த மஹிந்த
[ வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2014, 12:33.44 PM GMT ]
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க்கில் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர், அங்கு வருகை தந்திருந்த பலஸ்தீன ஜனாதிபதி மொஹமட் அப்பாஸை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
பலஸ்தீனுக்கு வழங்குவதாக ஜனாதிபதியினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை, இந்த சந்திப்பின் போது பலஸ்தீன் ஜனாதிபதியிடம் இலங்கை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக கையளித்து இருந்தார்.
இந்தச் சந்திப்பின் போது ஜனாதிபதியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவும் கூட இருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRaKVis5.html
தேர்தல் கண்காணிப்பாளர்கள் மீது அமைச்சர் டிலான் குற்றச்சாட்டு
[ வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2014, 12:49.07 PM GMT ]
கடந்த ஊவா மாகாண தேர்தலின் போது தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஒருபக்க சார்பாக நடந்துகொண்டதாக அரசாங்க அமைச்சர் டிலான் பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்
தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவாக செயற்பட்டதாக அமைச்சர் டிலான் பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.
சிஎம்இவி கபே மற்றும் பெப்ரல் ஆகியவற்றின் தகவல்படி தேர்தலுக்கு பின்னர் 9 வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இவை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆதரவாளர்களால் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தக்குற்றச்சாட்டு அமைச்சர் டிலான் பெரேரா மீதும் சுமத்தப்பட்டிருந்தது.
அவரின் தேர்தல் தொகுதியான ஹாலிஎலையில் வைத்து ஐக்கிய தேசியக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்ணான்டோவின் வாகன அணி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டே அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.
எனினும் அந்த சம்பவத்தில் தமக்கு தொடர்பில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRaKVis6.html

Geen opmerkingen:

Een reactie posten