தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 september 2014

விடுவிக்கப்பட்ட பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்படுவர்!!??

மங்கள அரசாங்கத்தில் இணைகிறார்? சிங்கள இணையத்தளம்
[ புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2014, 02:47.11 PM GMT ]
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியை வழங்கினால், கட்சியில் உள்ள சஜித் எதிராளிகளுக்கு இருக்க இடமில்லாது அவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க கடந்த காலங்களில் கட்சிக்குள் மேற்கொண்டு வந்த க்வின்டன் டெரன்டினோ கொள்கையானது முடிவை நோக்கி வந்துள்ளது.
இதனடிப்படையில் சஜித் எதிராளிகள் அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க வேண்டும். அல்லது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்றிய புதிய கட்சியை தொடங்க ஆதரவு வழங்க வேண்டும்.
சஜித் பிரேமதாசவை கடுமையாக எதிர்ப்பவரும் ஐக்கிய தேசியக் கட்சியை மீளகட்டியெழுப்பு பணிகளை தொடங்கியவருமான மங்கள சமரவீரவை (மெங்கி) அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு அரசாங்கத்தின் மிக உயர்ந்த இடத்தில் இருந்து அழைப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
க்வின்டன் டெரன்டினோ படத்தை நன்றாக பார்த்துள்ள மங்கள (மெங்கி) கில் பில் 3 திரைப்படத்தின் வேலைகளை ஆரம்பிப்பாரா எனவும் அந்த இணையத்தளம் கேள்வி எழுப்பியுள்ளது.
சில சிங்கள இணைத்தளங்கள் சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக நியமிப்பது தொடர்பில் கடும் எதிர்ப்பு பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் மங்கள சமரவீர ஆகியோர் சஜித் பிரதித் தலைவராக நியமிக்கப்படுவதை கடுமையாக எதிர்ப்பதாக அந்த இணையத்தளங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
எது எப்படியிருந்த போதிலும் இந்த தகவல்கள் குறித்து மங்கள சமரவீரவோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியோ எந்த உத்தியோகபூர்வமான அறிக்கைகளையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUkv7.html

நீண்டகால நல்லிணக்கத்துக்கு சமூக- பொலிஸ் உறவு அவசியம்: பிரித்தானியா
[ புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2014, 02:59.42 PM GMT ]
நீண்டகால நல்லிணக்கத்துக்கு, சிவில் நிர்வாகத்துக்கும் உள்ளூர் சமூகத்துக்கும் இடையிலான நம்பிக்கை அவசியமானது என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.
வன்னி புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்துக்கு விஜயம் செய்து திரும்பிய பின்னர் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரங்கீன் இந்த கருத்தை அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளார்.
நேற்று புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்துக்கு சென்ற ரங்கீன், பிரித்தானிய நிதியுதவின் கீழ் செயற்படும் சமூக பொலிஸ் நிகழ்ச்சித்திட்டம் குறித்து கலந்துரையாடினார்.
பொலிஸ் மற்றும் சமூகத்துக்கு இடையிலான உறவை புதுப்பிக்கவே இந்த நிகழ்ச்சி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தாம் குறித்த நிகழ்ச்சித் திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு உள்ளூர் சமூகத்தினருக்கும் பொலிஸாருக்கும் அழைப்பு விடுத்ததாக ரங்கீன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டத்தின்கீழ் சமூகத்துக்கு பொலிஸ் மீது நம்பிக்கை ஏற்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தமுடியும் என்று ரங்கீன் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பின் பிரித்தானிய உயர்ஸ்தானிகரக நிதியுதவியின் கீழ் மேற்கொள்ளப்படும் சமூக பொலிஸ் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 142 பொலிஸ் நிலையங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் தமிழ் தெரிந்த பொலிஸாரை அதிகரிப்பதற்கும் சிறுபான்மை சமூகத்தினரின் நம்பிக்கையை வெல்வதற்குமான அம்சங்கள் மேற்கொள்ளப்படுவதாக ரங்கீன் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUkwy.html
விடுவிக்கப்பட்ட பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்படுவர்
[ புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2014, 03:13.01 PM GMT ]
பூஸா தடுப்பு முகாமில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்ட இலங்கையில் அரசியல் அடைக்கலம் கோரிய பாகிஸ்தானியர்கள் விரைவில் நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்
பூஸாவில் இருந்து விடுவிக்கப்பட்ட 60 பாகிஸ்தானியர்களும் தற்போது தற்காலிக முகாம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே பாகிஸ்தானியர்கள் சிலர் நாடுகடத்தப்பட்ட நிலையில் அதற்கு எதிராக நீர்கொழும்பில் தங்கவைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானிய பெண் ஒருவர் இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
எனினும் நீதிமன்றம் அதனை நிராகரித்து நாடு கடத்தலுக்கான அங்கீகாரத்தை கடந்த வாரம் வழங்கியது.
எனினும் உள்ளுர் மனித உரிமை அமைப்புக்களும் யுஎன்எச்சிஆர் அமைப்பும் இலங்கையின் நடவடிக்கையை கண்டித்துள்ளன.
குறித்த பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்பட்டால் அவர்களுக்கு பாகிஸ்தானில் உயிரச்சுறுத்தல் ஏற்படும் என்றும் அந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இலங்கையில், பாகிஸ்தானில் இருந்து வந்த அஹமதியா, கிறிஸ்தவர்கள் மற்றும் சியா முஸ்லிம் பிரிவினரே அரசியல் அடைக்கலம் கோரியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUkwz.html

Geen opmerkingen:

Een reactie posten