மஹிந்தவுக்கு எதிரானார் கருணாநிதி
இதில் பேசிய கருணாநிதி, ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண அனைவரும் ஒன்றாக போராட வேண்டும் என்று அழைப்புவிடுத்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் கடந்த மாதம் 26ஆம் திகதி டெசோ அமைப்பின் கூட்டம் நடைபெற்றது.
அதில் ஈழத்தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வை உடனடியாக உருவாக்க வேண்டும். இலங்கை ஜனாதிபதி மற்றும் அந்த நாட்டு பிரதிநிதிகளை ஐ.நா சபையில் பங்கேற்க அனுமதிக்க கூடாது.
இலங்கை அரசு பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் படகுகளை உடனடியாக திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.நா விசாரணை குழு விசாரணையை தமிழ் நாட்டில் நடத்த அனுமதிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இத் தீர்மானங்களை வலியுறுத்தி டெசோ அமைப்பு சார்பில் இன்று போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதன்படி சென்னை சேப்பாக்கத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொது செயலாளர் சுப.வீரபாண்டியன், முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் நூற்றுக்கணக்கான திமுகவினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண அனைவரும் இணைந்து போராட வேண்டும் என தி.மு.க தலைவர் கருணாநிதி, ஆர்பாட்டத்தில் வலியுறுத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
http://www.jvpnews.com/srilanka/80960.html
யாழ். பல்கலைக்கழகத்தில் நிகாப் அணியத் தடையாம்
இருந்தும், இந்த அறிவிப்பு உத்தியோகபூர்வமாக இல்லாமல், மாணவிக்குத் தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இது தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பதிவாளரைத் தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை.
http://www.jvpnews.com/srilanka/80964.html
முன்னேஸ்வர பூசகரை தூக்கிய இருவர்
ஆண்டி அம்பலமவில் அமைந்துள்ள புஞ்சி முன்னேஸ்வரம் கோயிலின் பிரதான பூசாரியான வர்ணகுலசூரிய கம்கானாம்லாகே மனோஜ் துலாஞசன் என்பவரே கடத்தப்பட்டவராவார்.
இது தொடர்பாக பூசாரியின் மனைவியான மல்காந்தி என்பவர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் மேலும் தெரிய வருவதாவது,
தேவாலய வேலைகள் முடிவடைந்தும் எங்களது இரண்டு குழந்தைகளுடன் நானும் கணவரும் எங்கள் வாகனத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தோம்.
தேவாலய வேலைகள் முடிவடைந்தும் எங்களது இரண்டு குழந்தைகளுடன் நானும் கணவரும் எங்கள் வாகனத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தோம்.
அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்திருந்த நபர்கள் வாகனத்தை இடைநடுவில் வைத்து மறித்தனர். அதன்போது எனது கணவர் ( பூசகர்) வாகனத்தின் கதவை திறந்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் கறுப்பு நிற உடை அணிந்திருந்தனர்.
அவ்விருவரும் எனது கணவனை பிடித்து வாகனத்திற்கு வெளியே இழுத்தனர். நாங்கள் கூச்சலிட்டோம். எங்களையும் அச்சுறுத்திவிட்டு தாம் வந்த மோட்டார் சைக்கிளிலேயே அவர்கள் கணவனை கடத்திச் சென்றுவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
கடத்தப்பட்ட நபருக்கு, காணி மற்றும் பணம் தொடர்பான பிரச்சினைகள் இருப்பதாகவும் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது என்று தெரிவித்த நீர்கொழும்பு பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
http://www.jvpnews.com/srilanka/80967.html
கிளிநொச்சியில் இராணுவச் சிப்பாய் பலி!
இயக்கச்சி இராணுவ முகாமில் கடமை புரியும் குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.டி.சுமிந்தகுமார (33 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய வான் சாரதி கைது செய்யப்பட்டு இன்று கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பளை பொலிஸார் குறிப்பிட்டனர்.
http://www.jvpnews.com/srilanka/80970.html
Geen opmerkingen:
Een reactie posten