[ வெள்ளிக்கிழமை, 05 செப்ரெம்பர் 2014, 01:38.55 PM GMT ]
நாவற்குழி, யாழ்.வரவு பகுதியில் கழிவு பொருட்களை கொட்டும் நல்லூர் பிரதேச சபையின் மிக மோசமான திட்டத்திற்கு வடமாகாணசபை அரசாங்கம் முழுமையான மறுப்பினை தெரிவித்திருந்தது.
கடந்த 2 வாரங்களாக நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவு அகற்றும் நடவடிக்கைகளை படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக பலாலி வீதி மற்றும் ஆடியபாதம் வீதி ஆகிய பகுதிகளில் பூ மரங்களை நாட்டும் படையினர், அந்தப் பகுதியை தாம் அழகுபடுத்தப் போவதாக கூறியுள்ளதுடன், தினசரி பெருமளவு படையினரைக் கொண்டு துப்புரவு பணிகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.
நேற்றைய தினம் திருநெல்வேலி பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்குச் சென்ற படையினர் வர்த்தக நிலையங்களின் பெயர் பலகைகள் முழுமையாக அழகான பெயர் பலகைகளாக மாற்றப்பட வேண்டும் எனவும் சுவரொட்டிகளை முறையில்லாமல் ஒட்ட முடியாதெனவும், வர்த்தக நிலையங்கள் பூட்டிய பின்னர் அனைத்து வர்த்தக நிலையங்களுக்கும் ஒரே நிறத்தில் ஒரே மாதிரியான பூட்டுக்கள் போடப்பட வேண்டும் எனவும் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் திருநெல்வேலி வர்த்தகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும் பிரதேச சபையின் இயாலாமை, இதனால் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வர்த்தகர்கள் விசனம் தெரிவித்திருக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTZKUjwz.html
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் வழிக்காட்டலின் கீழ் ஊவா மாகாணத்தில் தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள அரச புலனாய்வு சேவையினர் பாரதூரமான பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 2 வாரங்களாக நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவு அகற்றும் நடவடிக்கைகளை படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக பலாலி வீதி மற்றும் ஆடியபாதம் வீதி ஆகிய பகுதிகளில் பூ மரங்களை நாட்டும் படையினர், அந்தப் பகுதியை தாம் அழகுபடுத்தப் போவதாக கூறியுள்ளதுடன், தினசரி பெருமளவு படையினரைக் கொண்டு துப்புரவு பணிகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.
நேற்றைய தினம் திருநெல்வேலி பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்குச் சென்ற படையினர் வர்த்தக நிலையங்களின் பெயர் பலகைகள் முழுமையாக அழகான பெயர் பலகைகளாக மாற்றப்பட வேண்டும் எனவும் சுவரொட்டிகளை முறையில்லாமல் ஒட்ட முடியாதெனவும், வர்த்தக நிலையங்கள் பூட்டிய பின்னர் அனைத்து வர்த்தக நிலையங்களுக்கும் ஒரே நிறத்தில் ஒரே மாதிரியான பூட்டுக்கள் போடப்பட வேண்டும் எனவும் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் திருநெல்வேலி வர்த்தகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும் பிரதேச சபையின் இயாலாமை, இதனால் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வர்த்தகர்கள் விசனம் தெரிவித்திருக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTZKUjwz.html
ஊவாவில் அசௌகரியங்களை எதிர்நோக்கும் கோத்தபாயவின் புலனாய்வாளர்கள்
[ வெள்ளிக்கிழமை, 05 செப்ரெம்பர் 2014, 01:50.38 PM GMT ]
பணியில் ஈடுபட்டுள்ள புலனாய்வு அதிகாரிகளின் அன்றாட செலவுகளை சமாளிப்பதில் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பஸ் கட்டணங்கள், தங்குமிட செலவுகள், உணவு செலவுகள் போன்றவற்றுக்கு எவ்வித மேலதிக கொடுப்பனவுகளும் வழங்கப்படுவதில்லை.
ஊவா மாகாண சபைத் தேர்தலில் புலனாய்வு தகவல்களை திரட்டுவதற்காக பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சுமார் ஆயிரம் புலனாய்வாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி உட்பட ராஜபக்ஷ குடும்பத்தினர் கலந்து கொள்ளும் கூட்டங்கள் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் இருந்தே பாதுகாப்பு நிலைமைகள் குறித்து அறிக்கை வழங்க வேண்டும்.
இதனால், ஓய்வின்றி பணியில் ஈடுபட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
வெளியிடங்களை சேர்ந்த புலனாய்வாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், அவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTZKUjw0.html
காரைதீவு பிரதான முச்சந்தியிலுள்ள விபுலானந்த சதுக்கத்தின் அருகாமையிலுள்ள அரசடிச்சந்திக் காணியில் சாய்ந்தமருது முஸ்லிம்கள் கருங்கற்களைக் குவித்ததையடுத்து வெள்ளிக்கிழமை காலை அப்பகுதியில் பதட்டம் நிலவியது.
பஸ் கட்டணங்கள், தங்குமிட செலவுகள், உணவு செலவுகள் போன்றவற்றுக்கு எவ்வித மேலதிக கொடுப்பனவுகளும் வழங்கப்படுவதில்லை.
ஊவா மாகாண சபைத் தேர்தலில் புலனாய்வு தகவல்களை திரட்டுவதற்காக பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சுமார் ஆயிரம் புலனாய்வாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி உட்பட ராஜபக்ஷ குடும்பத்தினர் கலந்து கொள்ளும் கூட்டங்கள் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் இருந்தே பாதுகாப்பு நிலைமைகள் குறித்து அறிக்கை வழங்க வேண்டும்.
இதனால், ஓய்வின்றி பணியில் ஈடுபட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
வெளியிடங்களை சேர்ந்த புலனாய்வாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், அவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTZKUjw0.html
காரைதீவில் பதற்றம்! முஸ்லிம்கள் கல் குவித்ததையடுத்து இனமுறுகல்! பொலிஸார் குவிப்பு - சமரசக் கூட்டத்தில் அமளி துமளி
[ வெள்ளிக்கிழமை, 05 செப்ரெம்பர் 2014, 02:11.30 PM GMT ]
பள்ளிவாசல் காணிக்கு எல்லை போடுவதற்காக கற்களைக் கொட்டியதாக அவர்கள் தெரிவித்த போதிலும் அதற்கான ஆதாரம் எதுவுமில்லை இவ்விடத்தில் எதுவும் கட்டமுடியாது என தமிழர் தரப்பினரும் ஏட்டிக்குப் போட்டியாக நின்றதால் பதட்டம் நிலவியது.
சம்மாந்துறைப் பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து அமைதி காத்தனர். பின்பு காரைதீவு பிரதேச செயலகத்தில் சமரசக் கூட்டம் இடம்பெற்றது.
2ம் இணைப்பு
காரைதீவு சமரசக் கூட்டத்தில் அமளி துமளி: இறுதியில் சமரச தீர்வு: அரச அதிபரின் முடிவு கிடைக்கும் வரை காணிக்குள் யாரும் செல்லக்கூடாது!
காரைதீவு முச்சந்தியிலுள்ள அரசடிச்சந்திக்காணியில் கற்கள் கொட்டப்பட்டதையடுத்து ஏற்பட்ட இனமுறுகல் பதட்டத்தைத் தடுக்க காரைதீவு பிரதேச செயலகத்தில் சமரசக்கூட்டமொன்று காரைதீவு பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் தலைமையில் நேற்று 11மணியளவில் நடைபெற்றது.
காரைதீவு பிரதான முச்சந்தியிலுள்ள விபுலானந்த சதுக்கத்தின் அருகாமையிலுள்ள அரசடிச்சந்திக் காணியில் சாய்ந்தமருது முஸ்லிம்கள் கருங்கற்களைக் குவித்ததையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை காலை அப்பகுதியில் பதட்டம் நிலவியது.
பள்ளிவாசல் காணிக்கு எல்லைபோடுவதற்காக கற்களைக்கொட்டியதாக அவர்கள் தெரிவித்தபோதிலும் அதற்கான ஆதாரம் எதுவுமில்லை இவ்விடத்தில் எதுவும் கட்டமுடியாது என தமிழர் தரப்பினரும் ஏட்டிக்குப்போட்டியாக நின்றதால் பதட்டம் நிலவியது.சம்மாந்துறைப்பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து அமைதிகாத்தனர். பின்பு 11மணியளவில் சமரசக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் காரைதீவு தமிழ் பிரதிநிதிகளும் சாய்ந்தமருது முஸ்லிம் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினம் எச்.எம்.எம்.ஹரீஸ் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான த.கலையரசன் மு.இராஜேஸ்வரன் முன்னாள் உறுப்பினர் சோ.புஸ்பராஜா பிரதேசசபைத் தவிசாளர் வை.கோபிகாந் உதவி தவிசாளர் உறுப்பினர்கள் மற்றும் ஊர்ப் பிரதிநிதிகள் சாய்ந்தமருது பள்ளிவாசல் செயலாளர் மஜீத் வர்த்தக சங்க மற்றும் ஊர்ப்பிரமுகர்கள் பௌத்த மதகுருவான வண.தந்திந்திரிய தேரர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோன் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தஹநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின்போது வாதப்பிரதிவாதங்கள் இருதரப்பினருக்குமிடையே தலைதூக்கிய தையடுத்து சபையில் அமளிதுமளி ஏற்பட்டது. பொலிஸ் அதிகாரிகள் தலையிட்டு அமைதியை இருமுறை நிலைநாட்டினர்.
பிரஸ்தாப சர்ச்சைக்குரிய அரசடிச்சந்திக் காணியை பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் அரசகாணியென்றும் பிரதேசசபைத் தவிசாளர் வை.கோபிகாந் பிரதேசசபைக்குரிய காணியென்றும் பள்ளிவாசல் செயலாளர் மஜீத் பள்ளிவாசல் காணியென்றும் கூறினர்.
சபையில் தமிழ் முஸ்லிம் இருதரப்பினரும் கருத்துக்களை ஆக்ரோசமாக தெரிவிக்க முற்பட்ட வேளையில் அமளி துமளி ஏற்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அங்கு கூறுகையில்,
பிரஸ்தாப காணியில் பொலிஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்தே தமது காணியை எல்லையிட கற்களை சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகத்தினர் கொட்டியுள்ளனர்.
எனினும் அரசாங்க அதிபரின் முடிவு ஒரு வாரத்தினுள் கிடைக்கவிருக்கிறது.மற்றும் த.தே.கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜா எதிர்வரும் 10ஆம் திகதி இருதரப்பினரும் கூடிப்பேசி முடிவெடுப்பது என்றும் கூறியிருக்கிறார். அது வரை யாரும் எந்த செயற்பாட்டையும் இக்காணியில் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்தால் நல்லது. இரு சமூகங்களும் ஒற்றுமையாகவே வாழவேண்டும். என்று தெரிவித்தார்.
தவிசாளர்; வை.கோபிகாந் தெரிவிக்கையில்,
இரு தரப்பினரும் கலந்துரையாடி நல்லதீர்வை எட்டவேண்டும். எமது கட்சியினர் எந்தசந்தர்ப்பத்திலும் இக்காணியை தாரைவார்த்துக்கொடுப்பதாக கூறவில்லை. இது காரைதீவுக்குரிய காணி.அதனை நாம் பார்த்துக்கொள்வோம்.
கல்முனையில் த.தே.கூட்டமைப்பு உயர்பீடநிருவாகிகளுக்கும் ஸ்ரீல.மு.கா.உயர்பீடத்தினருக்குமிடையில் 03மாதங்களுககு முன்னர் புரிந்துணர்வுக் கூட்டம் நடைபெற்ற போது இக்காணிப்பிரச்சினை பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டது. புதிய தவிசாளர் விரைவில் நியமிக்கபட்டு அவருடாக பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும் என மாவை சேனாதிராஜா ஜயா சொல்லியிருந்தார்.
அதன்படி நான் தெரிவாகியபின்னர் இரு தடவைகள் பள்ளிவாசல் நிருவாகிகளை அழைத்து கதைத்துள்ளேன். அதற்குள் இன்று காலை எனக்குத்தெரியாமல் அந்தக்காணியினுள் கற்களைக் கொட்டி இனமுறுகல் நிலைமையைத் தோற்றுவித்திருப்பது நல்லதல்ல. சரி ஹரீஸ் எம்.பி. கூறியதுபோல் முடிவுகள் எட்டப்படும்வரை இக்காணியினுள் யாரும் செல்லக்கூடாது எந்தவேலையும் செய்யக்கூடாது என்பதில் உடன்படுகிறேன்.என்றார்.
பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் இறுதியாகக் கூறுகையில்;:
நான் அரச அதிகாரி என்றவகையில் அரசகாணிக்குரிய சட்டதிட்டங்களினடிப்படையில் சில நடவடிக்கைகளை மேற்கொள்வேன். இன்னும் ஒரு வார காலத்தினுள் நிலஅளவை செய்து அரசஅதிபருக்கு வரைபடத்தையும் அறிக்கையையும் சமர்ப்பிப்பேன்.
அதன்பிறகு இக்காணி யாருடைய காணி என்பது பற்றி அரச அதிபர் அறிவிப்பார். அதுவரை எவரும் சண்டைபோட வேண்டிய அவசியமில்லை.காணி அளப்பதற்கு யாரும் இடையூறுசெய்யமுடியாது. அப்படிசெய்யமுனைந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டிவரும்.
மேலும் தேவையானால் இருதரப்பினரையும் அரசஅதிபர் முன்னிலையில் கூட்டிகலந்துரையாடவைக்கவும் முடியும். உங்களது உணர்வலைகளை அறிக்கையாக நான் அரச அதிபரிடம் சமர்ப்பிப்பேன்.எனவே அதுவரை பொறுமையாக இருங்கள்.
எனவே போட்ட கற்களை தயவுசெய்து அப்புறப்படுத்தி விடுங்கள் .இல்லாவிடில் அந்தக்கல்லை வைத்தே பிரச்சினையை மீள எழுப்புவார்கள். என்றார். இறுதியில் நண்பகல் 12மணியளவில் கூட்டம் சமரசமாக கலைந்தது.

Geen opmerkingen:
Een reactie posten