தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 15 september 2014

இரண்டு இதிகாசங்களின் முடிவு எங்கள் நாட்டிலும் நிஜமாகும்!

இலங்கையைச் சேர்ந்த பாக்கிஸ்தான் உளவாளியை சந்தித்த மர்ம நபர்கள்
[ திங்கட்கிழமை, 15 செப்ரெம்பர் 2014, 05:48.28 AM GMT ]
சென்னை வடபழனி சாலி கிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் தங்கி இருந்த அருண்செல்வராசனை பலர் சந்தித்து பேசியுள்ளதாகத் தெரிவிக்கபப்டுகிறது. 
இதனால் அப்பகுதியில் சந்தேக நபர்கள் பலர் நடமாடியுள்ளனர். இதுபற்றி அறிந்ததும் இந்து முன்னணி அமைப்பினர் பொலிஸாருக்கு முன் கூட்டியே தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் சென்னை மாநகர பொதுச் செயலாளர் இளங்கோவன் தனது பேஸ் புக்கில் தகவல்களை பரிமாறியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது,
இலங்கையை சேர்ந்த பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி,  தங்கியிருந்த பகுதியில் தான் நான் வசித்து வருகிறேன். எனது வீட்டில் இருந்து 2 வீடுகள் தள்ளியே அவர் வசித்து வந்த குடியிருப்பு உள்ளது.
அந்தப் பகுதியில் புதிதாக மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக பலமுறை இந்து முன்னணி பொறுப்பாளர்கள் காவல் துறையின் உளவு பிரிவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் கட்டுப்பாட்டு அறை எண்ணான 100–க்கும் போன் செய்து கூறியிருக்கிறார்கள். ஆனால் பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இப்படி புகார் கூறியவர்களிடம் உங்கள் வீட்டு வாசலில் கேமரா வைத்துக் கொள்ளுங்கள் என உளவு பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுத்திருந்தால் பாகிஸ்தானுக்கு பல தகவல்கள் செல்வது தடுக்கப்பட்டிருக்கும். இனிமேலாவது இது போன்ற தகவல்களை தந்தால் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்குமா?
இவ்வாறு பேஸ் புக்கில் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுபற்றி அவர் தெரிவிக்கும் போது, இந்து முன்னணி சார்பில் விருகம்பாக்கம் பொலிஸ் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSZKUer5.html
இரண்டு இதிகாசங்களின் முடிவு எங்கள் நாட்டிலும் நிஜமாகும்!
[ திங்கட்கிழமை, 15 செப்ரெம்பர் 2014, 05:57.02 AM GMT ]
இராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்கள் இந்த உலகில் மனிதவாழ்வு எப்படி அமையவேண்டும் என்பதற்கான படைப்புகளாகும். மேற்குறிப்பிட்ட இரண்டு இதிகாசங்களின் முடிவு எங்கள் நாட்டிலும் நிஜமாகும் என்பது சர்வ நிச்சயம்.
இரண்டு இதிகாசங்களையும் எடுத்த நோக்கும் போது, இரண்டிலிலுமே நல்லவர்கள் முதலில் கஷ்டங்களை அனுபவித்துள்ளனர் என்பது தெரியவரும்.
இராமாயணத்தில் இராமன் அவதார புரு­ராக போற்றப்படுகின்றான். கோசலையின் மகனான இராமனை பாசத்தோடு வளர்த்தவள் கைகேயி.
இருந்தும் மந்தரை என்ற கூனியின் சூழ்ச்சி காரணமாக இராமன் காட்டிற்கு செல்லும் துன்பம் நிகழ்கிறது.
14 ஆண்டுகள் காடு சென்றிருந்தாலும் பரவாயில்லை. காடு சென்றவேளை சீதையை இராவணன் கடத்திச் சென்ற சம்பவம் இருக்கிறதே! அது இராமனுக்குப் பெருந் துன்பத்தைக் கொடுத்தது.
இராமன் துன்பப்பட்டுக் கொண்டிருந்தபோது இராவணன் செருக்கோடு இருந்தான். சீதையை அடைய முடியும் என்ற இன்பக்கனவில் அவன் வாழ்வு கழிந்தது.
ஆனால் இராவணனின் செயல் அவனுக்கு அழிவைத் தரப் போகிறது என்பதை இராவண குலத்தில் சிலர் சிந்தித்திருந்தனர். ஆயினும் பலர் அந்த உண்மையை உணர்வதாக இல்லை.
சீதையை கடத்தியதன் காரணமாக இராவண குலம் அழியப் போகிறது என்ற உண்மையை அறிந்த கும்பகர்ணன், அண்ணா சீதையை விட்டுவிடு என்று பல தடவைகள் இராவணனுக்கு எடுத்துக்கூறியும் அவன் கேட்பதாக இல்லை.
ஈற்றில் இராமர் தொடுத்த போரில் இராவண குலம் அழிந்து போகிறது. இப்போது இராவணனின் அழிவு அவன் தரப்பில் துன்பத்தை ஏற்படுத்த, இராமபிரானின் தரப்பில் மகிழ்வு உண்டாகிறது.
இதேபோன்றது தான் மகா பாரதமும். ஆரம்பக்கட்டத்தில் துரியோதனனின் கொடுமையால் பாண்டவர்கள் பெருந்துன்பப்பட்டனர்.
பாண்டவர்களுக்குக் கொடுக்க வேண்டிய உரிமையை கொடுக்க மறுத்தது மட்டுமன்றி, திரெளபதியின் துகிலை உரிந்து மிகப்பெரும் நட்டாமுட்டித்தனங்களும் பாண்டவர்களுக்குச் செய்யப்பட்டன.
இச் சம்பவங்கள் நடந்த போதெல்லாம் துரியோதனுக்குப் பலரும் புத்திமதி கூறினர். துரியோதனா!  பாண்டவர்களை உன் சகோதரர்களாக நினைத்துக் கொள்.
இந்த நாடு உனக்கென்று மமதை கொள்ளாதே! இது அவர்களுக்கு உரியது. இவ்வாறாகப் பலரும் கூறியும் துரியோதனன் கேட்பதாக இல்லை.
புத்திமதி கூறியவர்கள் அனைவரும் துரியோதனனைக் காப்பாற்றும் நோக்கோடு கூறியிருந்தனர்.
ஆனால் சகுனி, துச்சாதனன் உள்ளிட்டவர்கள் துரியோதனனின் செயலுக்கு ஊக்கம் கொடுத்ததன் காரணமாக, ஈற்றில் கெளரவர் சேனை முற்றாக அழிந்து போயிற்று. பாண்டவர்கள் ஆட்சி அமைத்தனர்.
ஐந்து ஊர் தாருங்கள் என்று கேட்டபோது அதைக் கொடுக்க மறுத்த துரியோதனன் இப்போது முழுநாட்டையும் பாண்டவர்கள் ஆள்வதற்குக் கொடுத்துவிட்டு பாவலோகம் சென்றுவிட்டான்.
பாண்டவர்கள் ஆரம்பத்தில் பட்ட துன்பங்கள் போயகல இன்பம் அவர்களை ஆட்கொள்கிறது.
இது போன்ற நிலைமைகள் யாருக்கும் ஏற்படலாம். குறிப்பாக நம்நாட்டு ஆளுந்தரப்புகள் இந்த இரு இதிகாசங்களையும் கவனமாகப் படிக்க வேண்டும்.
ஐ.நா விசாரணைக்கு ஒத்துழைப்புத் தாருங்கள் என்று கேட்பதும், தமிழர்களின் உரிமையை கொடுங்கள் என்று கூறுவதும் கெளரவர் சேனைக்குக் கூறப்பட்ட புத்திமதி போன்றது எனக் கருதலாம்.
எல்லாவற்றையும் தூக்கியெறிந்தால், மேற்குறிப்பிட்ட இரண்டு இதிகாசங்களின் முடிவு எங்கள் நாட்டிலும் நிஜமாகும் என்பது சர்வ நிச்சயம்.
http://www.tamilwin.com/show-RUmsyJSZKUer6.html

Geen opmerkingen:

Een reactie posten