தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 5 september 2014

இலங்கைக்கு விளையாட்டு வீரர்களை அனுப்பியதால் இருவர் தமிழகத்தில் பணி நீக்கம் !

இலங்கையில் நடந்துவரும் ஆசிய அளவிலான ‘யூத் கரப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் 2014’ போட்டிகளில் இந்திய அணி சார்பில் விளையாட இரு தமிழக வீரர்களை அனுப்பியதால், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கரப்பந்தாட்ட பயிற்சியாளர் மற்றும் மேலாளர் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் விளையாடச் சென்ற இரு தமிழக வீரர்களும் திரும்பி வர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து விளையாட்டுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கையில்,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் பல்வேறு விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. இதில் தமிழ்நாடு கரபந்தாட்ட கழகத்தின் வீரர்களும் பயிற்சி பெறுகின்றனர். இங்கு பயிற்சி பெறும் வீரர்களின் கனவே இந்திய அணியில் இடம் பெற்று, உலகளாவிய போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பதுதான்.
இந்த நிலையில் தற்போது இலங்கையில் ஆசிய அளவிலான யூத் கரப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டிகள் நாளை ஆரம்பமாகின்றன.
இதற்காக இருவர் இலங்கையில் நடக்கும் போட்டியில் இந்திய அணிக்காக விளையாட அனுப்பப்பட்டுள்ளனர்.
இவர்களை எப்படி இலங்கைக்கு அனுப்பலாம் என்று கூறி உயர் அதிகாரிகள் சிலர் கரப்பந்தாட்ட பயிற்சியாளர் ஆண்டனியையும், மேலாளர் நாகராஜனையும் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளனர்.
ஆனால், விஷயம் வெளியே கசிந்துவிடக் கூடாது என்பதற்காக இதை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட நாகராஜன், வேலூரில் பளு தூக்கும் பயிற்சியாளராக 24 ஆண்டுகள் இருந்து, 6 மாதங்களுக்கு முன்புதான் சென்னைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார்.
இது குறித்து விளையாட்டு வீரர்கள் கருத்து தெரிவிக்கையில்,
தற்போது விளையாட்டுத் துறை அலுவலர்களை தற்காலிக பணிநீக்கம் செய்தது மட்டுமின்றி, இலங்கைக்கு சென்ற இரு வீரர்களையும் உடனடியாக திரும்பி வர உத்தரவிட்டுள்ளனர்.
அவர்கள் இன்று சென்னைக்கு திரும்புகின்றனர். அந்த இரு வீரர்களின் விளையாட்டு வாழ்க்கையுமே கேள்விக்குறியாக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அவர்களை காப்பாற்றுங்கள். உங்கள் அரசியலுக்கு எங்களை பலியிடாதீர்கள்..” என தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTZKUju3.html

Geen opmerkingen:

Een reactie posten