தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 september 2014

மத்தல விமான நிலையத்திலும் தங்கம் பிடிபட்டது- நீதிமன்றத்திற்குள் துப்பாக்கியுடன் செல்ல முயன்ற நபர் கைது


வேலையற்ற மலையக இளைஞா்களை விளையாட்டு மைதானங்களாக்கி அரசியல் விளையாட்டை நடத்துவதை அனுமதிக்க முடியாது: கணபதிகனகராஜ்
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 06:28.37 AM GMT ]
பயிற்சி ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் பதவிக்குமுள்ள வேறுபாட்டை விளங்கிக்கொள்ள முடியாதவர்களாக மலையக அரசியல்வாதிகளாக இருப்பது நகைப்புக்குறியது என மத்தியமாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
ஹப்புதளையில் ஆசிரியர் உதவியாளர் போட்டிப் பரீட்சைக்கு தயாராகும் விண்ணப்பதாரிகளுக்கு இலவச உசாதுணை கை நூல்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.
இந் நிகழ்வில் அவர் மேலும் பேசியபோது,
நடத்தப்படவிருக்கின்ற ஆசிரியர் உதவியாளர் போட்டிப் பரீட்சைக்கு தோற்றவிருக்கின்றவர்களுக்கு உதவும் நோக்கில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் அனுசரனையோடு நாடளாவிய ரீதியில் இலவசமாக பயிற்சிகளையும், அதற்கு தேவையான கற்றல் உபகரணங்களையும் வழங்கிவருகின்றோம்.
ஆனால் சில அரசியல்வாதிகள் ஆசிரிய உதவியாளர்கள் தொடர்பில் சரியான விளக்கங்களை பெற்றுக்கொள்ளாமல் வெறுமனே விதன்டாவாதங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இவர்கள் குறுகிய அரசியல் நோக்கத்தை அடைவதற்கு உபாயம் தேடும் இழிவான வழிமுறையை ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு மனசாட்சியோடு சிந்தித்தால் தற்போதைய நிலையில் ஒரே முறையில் 3000 மலையக இளைஞர்கள் அரசதுறையில் இணையப்போகிறார்கள் என்ற சமூகசந்தோசத்தை உணர்வார்கள்.
மலையகத்தில் சிலர் தமது அரசியல் விளையாட்டுக்கு எமது இளைஞர்களை மைதானங்களாக பயன்படுத்த முயற்சிக்காமல் தமது அரசியல் அந்தஸ்த்தை மைதானங்களாக்கி இளைஞர்களுக்கு களம் அமைத்து கொடுக்க வேண்டும்.
நமது நாட்டில் ஆசிரியர் தொழிலிற்கு அடிப்படை தகுதியாக ஒன்றில் பல்கலைக்கழக பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கல்வியல் கல்லூரிகளில் டிப்ளோமா பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
இதைக்கூட அறியாமல் தொடர் அறிக்கை விடுகிறார்களா? அல்லது தமது அரசியல் இருப்பிற்காக அறிக்கை விடுவதை தவிர வேறு வழி இல்லை என்பதனால் நாடகமாடுகிறார்களா?
ஆசிரிய உதவியாளர் என்பது பயிற்சி காலத்திலேயே பட்டதாரிகளாக அல்லது ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களாக மாற்றி அவர்களை ஆசிரிய சேவைக்கு உள்வாங்க செய்யும் வேலைத்திட்டமாகும்.
தற்போது ஆசிரிய உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க இருப்பவர்களில் பெரும்பாண்மையானோர் பல்கலைக்கழகத்திற்கோ அல்லது கல்வியியல் கல்லூரிகளுக்கோ செல்வதற்கு போதுமான இசெட் புள்ளிகளை பெற்றிருக்காதவர்கள் இவர்களுக்கு கல்வியல் கல்லூரிகளுக்கு சென்று ஆசிரியராக வருவதற்கு ஒப்பான மாற்று வழிதான் இந்த ஆசிரியர் உதவியாளர் நியமனமாகும்.
ஆசிரியர் உதவியாளர்களுக்கு 6000 ரூபா கொடுப்பனவாக வழங்கப்படவிருப்பதை பலர் கொச்சைப்படுத்தி பேசுகின்றனர்.
இது ஆசிரிய பதவிக்கான சம்பளம் அல்ல. அவர்கள் பயிற்சியை முடிப்பதற்கான உதவுதொகை மட்டுமே. பயிற்சியின் பின்னர் இவர்கள் அரசாங்க ஆசிரியர் சேவையில் உள்ள சம்பளத்திற்கு உரித்துடையவர்களாவார்கள்.
பயிற்சியை முடிப்பதற்கான அதி உச்ச காலம் 5 வருடங்களாகும். ஆனால் ஆசிரியர் பயிற்சியை இரண்டு வருடங்களில் கூட முடிக்க முடியும்.
இதில் பலர் பல்கலைகழகங்களில் படித்துக்கொண்டு வெளிவாரி பட்டங்களை பெற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கின்றனர்.
தற்போது நாட்டில் கூடுதலான ஆசிரிய நியமனங்கள் கல்வியியல் கல்லூரிகளில் டிப்ளோமா பயிற்சியை முடித்தவர்களுக்கே வழங்கப்படுகிறது.
கல்வியியல் கல்லூரிகளுக்கு அனுமதிப்பெற கூடுதலான இசெட் புள்ளிகளை பெற்றிருக்க வேண்டும். இது பல்கலைக்கழக அனுமதிக்கு ஒப்பானது. இந்த முறையில் 3000 பேருக்கு ஆசிரியர் நியமனத்தைப்பெற 15 வருடங்கள் செல்லும்.
அத்துடன் கல்வியியல் கல்லூரிகளில் பயிலுபவர்களின் பயிற்சி காலம் 3 வருடங்களாகும். இதில் 2 வருடங்கள் உள்ளக பயிற்சியும், 1 வருடம் கள பயிற்சியும் வழங்கப்படுகிறது. கள பயிற்சி காலத்தில் மட்டும் ஒரு பயிற்சியாளருக்கு 2500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
பயிற்சி முடிந்து சுமார் ஒரு வருடங்கள் நியமனத்திற்கு காத்திருக்க வேண்டும். அதுவும் நியமனத்திற்கான உத்தரவாதத்தை அரசாங்கம் வழங்காது.
அப்படியென்றால் இலங்கையில் கல்வியியல் கல்லூரிகளில் டிப்ளோமா பயிற்சியை பெறும் அனைவரும் நான்காம் தர பிரஜைகளா?
எமது சமூகத்தை இழிவுபடுத்தி இன்பம் காண்பதில் பெருமைகொள்ளும் மன நோயாளர்களின் கருத்துக்களை புறந்தள்ளி மலையக இளைஞர்கள் சாதனைப்படைத்து காட்டவேண்டும்.
பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறுபவர்களுக்கு அரசாங்கம் சம்பளத்தையோ வேலை உத்தரவாதத்தையோ வழங்குவதில்லை.
நாட்டில் பெரும்பாலான பட்டதாரிகள் வருடக்கணக்கில் வேலையற்றிருக்கின்றனர்.
அந்தவகையில் ஆசிரிய உதவியாளர் நியமனம் 6000 ரூபா உதவு தொகையுடன் வேலை உத்தரவாதத்தையும் வழங்குகிறது.
இது மலையகத்திற்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மூலம் கிடைத்த வரபிரசாதமாகும்.
ஆசிரியர் உதவியாளர் நியமனம் தொடர்பான சில அரசியல்வாதிகள் உண்மைக்கு புறம்பான தகவல்களை விதைத்து சமூகத்தை பிழையாக வழிநடத்த முற்படுகின்றனர்.
ஆனால் வினைவிதைத்தவர்கள் அதையே அறுவடை செய்வார்கள் என்பதை கடந்த காலம் பலமுறை பாடம்புகட்டி காட்டியிருக்கிறது.
எமது சமூகம் மிக புத்திசாதூரியமானது எனவும் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.
பதுளை நகரில் வா்த்தக நிலையமொன்று திடீரெ ன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
பதுளையில் வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட தீ சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பதுளை நகரில் தேவாலய வீதியில் அமைந்துள்ள வர்த்தக கட்டடமொன்றில் 30.08.2014 அன்று நள்ளிரவு 1.30 மணியளவில் தீ பரவியுள்ளது.
தீயால் கட்டடத்தின் கீழ் மாடி முற்றாக சேதமடைந்துள்ளதுடன், இரண்டு மாடிகளில் சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 
இரு மாடியிலுள்ள இலட்சக்கணக்கான பெறுமதிமிக்க பொருட்களும், உடமைகளும் சேதமாகியுள்ளன.
இச்சம்பவத்தின் போது கடையை திறந்து முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுக்க முயற்சித்த அதன் உரிமையாளா் உடற் பகுதிகளில் தீக்காயங்களுடன் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
எனினும் தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இச்சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சவுதி விபத்துக்களில் இரு இலங்கையர்கள் பலி
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 06:31.30 AM GMT ]
சவுதி அரேபியாவின் கிழக்கு பிராந்தியமான தமாம் நகருக்கு அருகில் இரு பிரதேசங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த வாரத்தில் இந்த விபத்துக்கள் நடந்துள்ளன.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒருவர் அம்பலாந்தெட்ட களுவாவில, பெலிகல்கொட வீதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 29வயதான எச்.ஏ. கயான் பிரியங்கர என்பவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமாம் முதலாவது தொழிற்பேட்டையில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் உள்ள இயந்திரம் ஒன்றில் கழுத்து இறுக்கியத்தில் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் இவர் உயிரிழந்தார்.
தமாம் தல்ல என்ற பிரதேசத்தில் தொழில் புரிந்து வந்த மினுவங்கொடையைச் சேர்ந்த 45 வயதான ஹெட்டியாராச்சி குமார கித்சிறி என்பவர் திடீர் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக சவுதிக்கான இலங்கை தூதரகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUlt1.html


மத்தல விமான நிலையத்திலும் தங்கம் பிடிபட்டது- நீதிமன்றத்திற்குள் துப்பாக்கியுடன் செல்ல முயன்ற நபர் கைது
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 06:41.32 AM GMT ]
சட்டவிரோதமாக தங்கத்தை கடத்தி வந்த ஒருவர் மத்தல, ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து 232 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் பெறுமதி சுமார் 60 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தவிர சந்தேக நபரிடம் இருந்து 60 கையடக்க தொலைபேசிகள் அதற்கு பயன்படுத்தப்படும் மின் கலங்களையும் தாம் கைப்பற்றியதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் வெலிகம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் டுபாய் நாட்டில் இருந்து நேற்றிரவு இலங்கை வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்திற்குள் துப்பாக்கியை எடுத்துச் செல்ல முயன்ற நபர் கைது
கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்குள் துப்பாக்கியை எடுத்துச் செல்ல முயற்சித்த ஒருவரை நீதிமன்றத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் வாழைத்தோட்டம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கியை எடுத்துச் சென்ற நபர் யார், துப்பாக்கி எந்த ரகத்தை சேர்ந்தது போன்ற தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிறந்த சிசுவை விற்பனை செய்த 6 பேர் கைது
கொழும்பு முகத்துவாரம் பிரதேசத்தில் பிறந்து 8 நாட்களே ஆன ஆண் குழந்தையை 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரான பெண் கடந்த 24 ஆம் திகதி ராகம வைத்தியசாலையில் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.
இந்த பெண்ணின் விருப்பத்துடன் முகத்துவாரத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் குழந்தையை உஸ்வெட்டகொய்யாவ பிரதேசத்தை சேர்ந்த திருமணமான தம்பதிக்கு விற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குழந்தையின் தாய், தந்தை, பணத்தை கொடுத்து குழந்தை பெற்ற தம்பதி மற்றும் குழந்தையை விற்பனை செய்ய உதவி இரண்டு பெண்களை முகத்துவாரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUlt2.html



Geen opmerkingen:

Een reactie posten