திருமலையில் எழுதிய ஜெயராசாவின் அதிசய சாதனை
இதன் ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண தவிசாளர் ஆரியவதி கலபதி, எதிர்க்கட்சி தலைவர் சி.தண்டாயுதபானி மற்றும் நகரசபைத் தலைவர் க. செல்வராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 12 மணித்தியாலயங்கள் எழுதிய அனிஸ்டன் ஜெயராவின் உடல் நிலை மிகவும் ஆரோக்கியமாகவுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்
http://www.jvpnews.com/srilanka/80779.html
சந்திரகுமாரின் சகாவிற்கு தர்ம அடி!
முன்னதாக கிளிநொச்சி அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர்கள் தற்போது மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்பாணம் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தாக்குதலாளிகளைக் காவல்துறை தேடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈபிடிபியின் நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரகுமாரின் மதுபானசாலையொன்றின் பினாமியாக கிளிநொச்சியில் செயற்படுத்தி வருகையில் அது தொடர்பான பிணக்கொன்றையடுத்தே தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக்கழகத்தின் வெளியீடான வெளிச்சம் இதழின் ஆசிரியராக இருந்த கருணாகரன் தற்போது ஈபிடிபியின் முக்கிய பிரமுகராகச் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/80783.html
கோட்டை விட்டது கூட்டமைப்பு! ஆப்படித்தது ஆமி…
கூட்டமைப்பின் முன்னேற்பாடற்ற உள்ளக முரண்பாடுகளை தூண்டிவி;ட்டு அதன் மூலம் தமிழ் மக்களது மனங்களை வெல்லும் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி உதய பெரேராவின் நடவடிக்கைகளின் ஒன்றாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பினில் மேலும் தெரியவருகையினில் யாழ் கண்டி நெடுஞ்சாலையில் நாவற்குழி பாலத்திற்கும் யாழ்.வளைவுக்கும் இடையில் உள்ள நன்னீர் தேங்கும் வயல் காணிக்குள் கழிவுகளை கொட்டுவதற்கு நல்லூர் பிரதேச சபை கடந்த வாரம் முயற்சியினை மேற்கொண்டது. அவ் முயற்சிக்கு கமநல சேவைகள் திணைக்களமும் வடமாகாண விவசாய அமைச்சும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், மீறி கழிவுகள் அங்கு கொட்டப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தது. அதனை அடுத்து நல்லூர் பிரதேச சபையினால் அவ் முயற்சி கைவிடப்பட்டது.
நல்லூர் பிரதேச சபை கழிவுகளை கொண்டுவதற்கு முனைந்த காணி தனியார் ஒருவரினால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட 2 ஏக்கர் காணியாகும். குறித்த தனியாருக்கு அப்பிரதேசத்தில் 14 ஏக்கர் காணி உள்ளது ஆனால் அக்hணிகளுக்கு வயல் வரம்புகளே பாதையாக காணப்படுகின்றது. தனது காணிக்கு பாதையினை போடுவதற்காக அவர் பல தடவைகள் முயற்சித்த போதிலும் வயல் காணிக்குள் பாதை போடுவதற்கு கமநல சேவைகள் திணைக்களம் அனுமதி அளிக்கவில்லை
அதனை அடுத்து குறித்த தனி நபர் நல்லூர் பிரதேச சபைக்கு தனது 14 ஏக்கர் காணியின் முடிவில் உள்ள 2ஏக்கர் காணியினை நன்கொடையாக கொடுத்து அக் காணியை பிரதேச சபை பயன்படுத்துமாறு கூறினார். அக் காணியை நன்கொடையாக பெற்றுக்கொண்ட நல்லூர் பிரதேச சபை அக் காணிக்கு 2 மில்லியன் ரூபாய் செலவில் பாதை அமைத்துள்ளது. வயல் காணிக்குள் பாதை அமைக்க கமநல சேவைகள் திணைக்களம் அனுமதி அளிக்காத போதிலும் அதனையும் மீறி நல்லூர் பிரதேச சபை வயல் காணிக்குள் பாதையினை அமைத்தது
2 மில்லியன் ரூபாயில் அமைக்கப்பட்ட அப்பாதையானது கட்டட இடிபாடுகளை கொண்டே அமைக்கப்பட்டுள்ளது அப் பாதைக்கே 2 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபை கூறுகின்றது.
இந் நிலையில் கடந்த 26ம் திகதி செவ்வாய்க்கிழமை அக் காணிக்குள் கழிவுகளை கொட்டுவதற்காக நல்லூர் பிரதேச சபை முயற்சிகளை மேற்கொண்ட வேளை அவ் முயற்சியினை உடனடியாக கைவிடும் மாறு கமநல சேவைகள் திணைக்களமும் வடமாகாண விவசாய அமைச்சும் உத்தரவு இட்டது.
உத்தரவை மீறி அவ் வயல் காணிக்குள் கழிவுகளை கொட்டினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தது அதனை அடுத்து நல்லூர் பிரதேச சபை அவ் முயற்சியை கைவிட்டதுடன் கழிவுகளை கொட்டுவதற்கு இடம் இல்லை என காரணம் கூறி நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட பிரதேசத்தில் கழிவகற்றும் நடவடிக்கையையும் கைவிட்டது.
கடந்த ஒரு வார காலமாக நல்லூர் பிரதேச சபை கழிவகற்றல் நடவடிக்கையில் ஈடுபடாததால் நேற்றைய தினம் சனிக்கிழமை நல்லூர் பிரதேச சபையிடம் திருநெல்வேலி இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் தாம் கழிவகற்றும் பணியில் ஈடுபடுவதகாவும் அதற்காக நல்லூர் பிரதேச சபையின் வாகனத்தை தரும்மாரும் கோரியிருந்தனர்.
அதற்கு நல்லூர் பிரதேச சபை தவிசாளர் கழிவுகளை கொட்டுவதற்கு இடம் இல்லாமையால் தான் தாம் கழிவகற்றும் பணியை இடைநிறுத்தி உள்ளதாகவும் தமக்கு இடம் கிடைத்தும் அப் பணியை மீள தொடருவோம் என கூறியிருந்தார்.
அதற்கு இராணுவத்தினர் உங்களுக்கு இடம் கிடைக்கும் வரை நாம் அந்த பணியை செய்கின்றோம் எமக்கு கழிவுகளை கொட்டுவதற்கு இடம் உள்ளது நாம் அங்கே இவ் கழிவுகளை கொட்டுகின்றோம் என கூறி இன்று (30) ஞாயிற்றுக்கிழமை மாலை நல்லூர் பிரதேச சபையின் வாகனத்தை தருமாறு கோரி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/80786.html
Geen opmerkingen:
Een reactie posten