தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 11 september 2014

சுவாமியின் ஆலோசனையைக் கேட்டால் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும்: தி.வேல்முருகன் எச்சரிக்கை!

மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர்: கூட்டமைப்பினரையும் சந்தித்தார்
[ வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2014, 12:15.06 PM GMT ]
இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் லாரா லேவிஸ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று விஜயம்  செய்துள்ளார்.
இந்த விஜயத்தின்போது, பிரித்தானிய பிரதி  உயர்ஸ்தானிகர் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் யுத்த கால பாதிப்புகள் குறித்து லாரா லேவிஸுக்கு தெளிவுபடுத்தியதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சார்ல்ஸ் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் இன்று பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் நிலவுகின்ற அரசியல் நிலைமைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் சந்திப்பின் போது இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் லாரா லேவிஸூற்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராஜா தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSVKUgu2.html


என்னால் என்ன செய்ய முடியும்? ஊடகவியலாளர்களுக்கு வகுப்பு நடத்திய சந்திரசிறி
[ வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2014, 12:25.21 PM GMT ]
வடமாகாண முதலமைச்சர் நியதிச் சட்டம் இலங்கையின் அரசியலமைப்பிற்கும் மாகாண சபைகள் சட்டத்திற்கும் முரணானதாக உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியிருக்கும் ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, கூட்டமைப்பு மாகாணசபை சட்டத்திற்குட்பட்டு செயற்படுமாயின் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இன்றைய தினம் ஆளுநர் செயலகத்தில் யாழ்.ஊடகவியலாளர்களை சந்தித்த ஆளுநர், தமக்கும், மாகாணசபைக்கும் என்னவாறான அதிகாரங்கள் இருக்கின்றன? தன்னால் என்ன செய்ய முடியும்?
முதலமைச்சரினால் என்ன செய்ய முடியும்? என ஊடகவியலாளர்களுக்கு வகுப்பு நடத்தினார். இதன்போது ஆளுநர் மேலும் கூறுகையில்,
வடமாகாணசபை 3 நியதிச் சட்டங்களை எமக்கு அனுப்பியிருக்கின்றது. அதில் முதலமைச்சர் நிதியம் நியதிச் சட்டம் மற்றய மாகாணங்கள் எவற்றிலும் இல்லாததுடன், அரசியலமைப்பினையும் மாகாணசபைகள் சட்டத்தினையும் மீறுவதாய் உள்ளது.
மேலும் மாகாண சபையில் மாகாணசபை நிதியம், அவசரகால நிதியம் ஆகிய இரு நிதியங்கள் மட்டுமே இருக்க முடியும்.
முதலமைச்சர் நிதியம் என்ற 3வது நிதியம் இருக்க முடியாது. என கூறியதுடன், முதலமைச்சர் நிதியத்தினை ஜனாதிபதியின் கவனத்திற்கு அனுப்பிவைக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் 2 நிதியங்கள் மட்டுமே இருக்க முடியும் என்னும்போது ஆளுநர் நம்பிக்கை நிதியம் எவ்வாறு உருவாக்கப்பட்டது? என கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதிலளிக்காமல் ஆளுநர் நழுவிக்கொண்டார்.
பிரதம செயலாளர் தொடர்பாக,
பிரதம செயலாளர் சட்டத்திற்கு அமைவாக சேவையாற்றும் சிறந்த நிர்வாகி, அவர் யாருக்கும் கீழ்பட்டு சேவையாற்றவேண்டிய அவசியம் இல்லை. அவரை ஜனாதிபதி மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.
எனவே சட்டரீதியான உத்தரவுகளை மட்டும் முதலமைச்சர் கொடுக்க முடியும். அவர் அதனை ஏற்றுக் கொண்டு நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பார். அதற்கு மேல் சட்டத்திற்கு முரணாக அவர் செயற்பட மாட்டார்.
மேலும் ஆளுநர் ஊடகவியலாளர்களுக்கு நடத்திய வகுப்பில் பின்வரும் விடயங்கள் பற்றி கூறினார். 
மாகாண சபை ஆளுனரை நீக்க வேண்டுமாயின்,
1 குறித்த ஆளுனர் அரசியல் அமைப்புக்கு எதிராக செயற்பட்டு இருக்க வேண்டும்.
2 அரச நிதியை கையாடல் செய்திருக்க வேண்டும்.
3 லஞ்சம், ஊழல் செய்திருக்க வேண்டும்.
4 தான் பினபற்ற வேண்டிய ஒழுக்க நெறிகளை கைவிட்டு இருக்க வேண்டும்.
அத்தகைய நேரத்திலையே மாகாண சபை அது பற்றி ஜனாதிபதிக்கு அறிவித்து, ஆளுனரை நீக்க முடியும். அல்லாமல் வேறு எந்த வகையிலும் ஆளுனரை மாகாண சபையினால் நீக்க முடியாது அதற்குரிய தகுதியோ சட்டமோ இல்லை.
அதேவேளை மாகாணத்தில் ஆளுநருக்கு உள்ள அதிகாரம்,
1 மாகாண சபையை ஆரம்பித்து வைக்க முடியும்.
2 முதலமைச்சருடன் கலந்தாலோசித்து எந்தவொரு சபை அமர்வையும் பிற்போட முடியும்.
3 முதலமைச்சருடன் கலந்தாலோசித்து மாகாண சபையை கலைக்கும் அதிகாரம் உண்டு.
4 மாகாண சபை நியதி சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிக்கும் அதிகாரம் உண்டு.
5 முதலமைச்சர், அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து சபை அமர்வில் உரையாற்ற முடியும்.
6 மாகாண நியதி சட்டம் தொடர்பில் தலையிட முடியும்.
7 முதலமைச்சரை, அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் உண்டு.
8 அமைச்சரவை தீர்மானங்களை ஆளுநருடன் கலந்தாலோசித்த பின்னரே அமுல் படுத்த முடியும்.
9 அமைச்சரவை தீர்மானத்தில் தவறுகள் இருந்தால் ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம்.
10 நியதி சட்டத்தை அனுமதிக்கும் அதிகாரம் மற்றும் நியதி சட்டம் இறுதியாக ஆளுநரிடமே ஒப்படைக்கப்பட வேண்டும்.
11 நியதி சட்டத்தில் தவறுகள் இருந்தால் அதனை அதனை சுட்டிக்காட்டி தவறினை திருத்த கோரி மாகாண சபைக்கு ஆளுனர் அனுப்பி வைப்பார்.
12 ஆளுனரால் சுட்டிக்காட்டப்பட்ட தவறுகள் திருத்தப்படாமல் மீண்டும் அந்நியதி சட்டத்தை மாகாண சபை ஆளூனருக்கு அனுப்பி வைத்தால் அதனை ஆளுனர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பார்.
ஜனாதிபதி அதனை மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைப்பார். பின்னர் அந்த நியதி சட்டத்தை மேல் நீதிமன்றம் அனுமதித்தாலே அது அங்கீகரிக்கப்படும்.
மாகாண சபைக்கு எவ்வாறு நிதி கிடைக்கின்றது?
1. மாகாண சபை நிதி நியதி சட்டத்தின் கீழ் வரும் நிதி. அதாவது மாகாண சபைக்கு உட்பட்ட வரிகள் மூலம் வரும் நிதி.
2 மாகாண சபை செயற்பாட்டுக்கு மத்திய அமைச்சு தரும் நிதி. மத்திய அரசு இந்த நிதியினை மானிய அடிப்படையிலையே தரும் அதனை மாகாண சபை திருப்பி செலுத்த தேவை இல்லை.
3 மாகாண சபை திட்டங்களுக்கு மத்திய அரசு தரும் கடன். அதனை மத்திய அரசின் திறைசேரியின் ஊடாகவே பெற்று கொள்ளலாம்.
4 விசேட வேலை திட்டத்திற்கு வெளிநாட்டு நிதி.

இதனை மத்திய அரசின் கொள்கை திட்டத்தின் ஊடாகவே பெற்று கொள்ளலாம். அதேவேளை புலம்பெயர்ந்தவர்கள் நிதி வழங்குவதாயினும் மத்திய அரசின் அனுமதியுடன் கொள்கை திட்டத்தின் ஊடாக திறைசேரி ஊடாகவே பெற்று கொள்ளாலாம்.
5 உள்நாட்டில் இருப்பவர் மாகாண சபைக்கு நிதி அளிப்பதயினும் மாகாண அமைச்சருடன் கலந்துரையாடி ஆளுனரின் அனுமதி பெற்று பிரதம செயலாளரின் ஊடாக மாகாண திறைசேரிக்கே அனுப்ப முடியும்.
மாகாண சபை எவ்வாறான நிதியங்களை வைத்திருக்க முடியும்?
1.மாகாண சபை நிதியம்.
2.அவசரகால நிதியம். இவை இரண்டு தவிர வேறு எந்த நிதியமும் மாகாண சபை வைத்திருக்க முடியாது.
மாகாண சபை கொடுக்கல் வாங்கல்களை உள்ளக கணக்காய்வு மூலமும் அரச கணக்காய்வு நாயகத்தின் திணைக்களத்தின் அதிகாரிகளாலும் கணக்காய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSVKUgu3.html



[ வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2014, 12:52.44 PM GMT ]
தமிழீழத்தில் ஒன்றரை லட்சம் தமிழ் உறவுகளை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளி ராஜபக்ச, தமிழ் நாட்டு மீனவர்களின் படகுகளை விடுவிக்கவே முடியாது திமிர்த்தனமாக கூறியிருப்பதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்து ஆங்கில நாளேட்டின் சிறப்பு செய்தியாளர் சுகாசினி ஹைதர் என்பவர், போர்க்குற்றவாளியான ராஜபக்சவிடம் பேட்டியை எடுத்து வெளியிட்டுள்ளார்.
இந்த சுகாசினி ஹைதர் வேறு யாருமல்ல… பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த உலகத் தமிழினத் துரோகியான சிங்களவனிடம் தமிழர்களைக் காட்டிக் கொடுக்கிற கொடியவன் சுப்பிரமணியன் சுவாமியின் மகள் தான்.
அந்த பேட்டியில் பொய் மூட்டைகளை கட்டவிழ்த்துவிட்டு ஆணவமான கருத்துகளை கொட்டி வைத்திருக்கிறான் ராஜபக்ச.
2009 இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள் பேபி சுப்பிரமணியம், யோகி, கவிஞர் புதுவை ரத்தினதுரை உட்பட பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் போயினர். அவர்களது கதி என்ன என்று தெரியவில்லை.
ஆனால் ராஜபக்சவோ, இராணுவத் தரப்பில் இருந்தும் கூட காணாமல் போயிருக்கின்றனர் என்று கூறியதோடு, மட்டுமல்லாமல் காணாமல் போதல் சம்பவங்களுக்கெல்லாமே தமிழீழ விடுதலைப் புலிகளே பொறுப்பு என பச்சைப் பொய்யை புளுகியிருக்கிறான்.
அதேபோல் தமிழர் வாழும் வடக்கு மாகாணத்தில் யுத்தம் முடிந்து 5 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் அங்குலத்துக்கு அங்குலமாக சிங்கள இராணுவம் நிலை கொண்டிருக்கிறது. ஆனால் ராஜபக்சவோ 90 வீதமான இராணுவம் விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டது என்றும் தன் நாட்டு இராணுவத்தை இந்தியாவிலோ அல்லது வேறு ஒருநாட்டிலா நிறுத்த முடியும் என்றும் கொக்கரித்திருக்கிறான்.
மேலும் வடபகுதியில் சிங்களக் குடியேற்றம் என்பதெல்லாம் எதுவும் இல்லை என்று கூறுகிற ராஜபக்ச இலங்கையின் குடிமகனாக இருப்பவர் நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் குடியேறுகிற உரிமை உண்டு என்று சொல்லி சிங்களக் குடியேற்றத்தை நியாயப்படுத்துகிறான்.
இப்படி தமிழீழத்தின் உண்மை நிலவரத்தை அப்படியே மூடி மறைத்து வடிகட்டிய பொய்களை மட்டுமே கொட்டி பேட்டியளித்துள்ள ராஜபக்ச தமிழக மீனவர்கள் குறித்து ஆணவமாக அகம்பாவத்தின் உச்சாணிக் கொம்பில் நின்று கொண்டு பேட்டியளித்திருக்கிறான்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகவும் பறிமுதல் செய்த படகுகளைத் திருப்பித் தர முடியாது என்றும் அடாவடியாக கூறியிருக்கிறான் ராஜபக்ச.
தமிழ்நாட்டு மீனவர்கள் காலங்காலமாக மீன்பிடித்து வருவது தங்களது பாரம்பரியமான மீன்பிடி பகுதியில்தான்.
இந்திய அரசு சட்டவிரோதமாக கொடுத்திருக்கும் கச்சதீவு தங்களுக்கு சொந்தம் எனவும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள் என்றும் சிங்களப் பேரினவாத அரசு கூறிக் கொண்டு மீனவர்களை சித்திரவதை செய்து படகுகளைப் பறிமுதல் செய்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறது.
இதுநாள் வரை தமிழக மீனவர்களைப் படுகொலை செய்த சிங்கள காடையர்கள் இப்போது அவர்களை உயிரோடு சாகடிக்கும் வகையில் அவர்களது வாழ்வாதாரத்தையே முடக்கும் வகையில் படகுகளை விடுவிக்கவே முடியாது என்று திமிராக கூறியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
இந்த பிரச்சனையில் இந்திய மத்திய அரசு உடனே தலையிட்டு நிரந்தத் தீர்வு காண வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணாமல் கொடுங்கோலன் ராஜபக்ச மற்றும் அவனது இந்திய கூட்டாளியான தமிழினத் துரோகி சுப்பிரமணியன் சுவாமி போன்றோரின் ஆலோசனைகளைக் கேட்டு மத்திய அரசு செயல்படுமேயானால் நிச்சயமாக கடுமையான விளைவுகளையே சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன்.
என குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJSVKUgu4.html

Geen opmerkingen:

Een reactie posten