தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 7 september 2014

பிடிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் தொடர்பில் ஸ்பெய்ன் அமைச்சர் மஹிந்தவுக்கு தெரிவித்தது என்ன?



ஸ்பெய்ன் வெளிவிவகார மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு.ஜோஸி மானுவல் கார்சியா-மார்கல்லோ வை. மார்பில், மஹிந்த ராஜபக்‌ஷவை நேற்று அலரி மாளிகையில் சந்தித்தார்.
இரு தேசங்களுக்குமிடையிலான இராஜதந்திர பொருளாதார உறவுகளைப் பலப்படுத்துவது தொடர்பாக இக் கலந்துரையாடல் ஆரம்பித்து தொடர்ந்தது.
பயங்கரவாதத்தோடு மோதுவது தொடர்பான ஸ்பெய்னின் கஷ்டப்பாடுகள் தொடர்பாகவும் திடீரென அமைச்சர் பேசியதோடு தனது நாடும் பயங்கரவாதத்தின் காரணமாக பல ஆண்டுகள் துன்பமுற்றதன் காரணமாக பயங்கரவாதத்தின் தாக்கத்தை புரிந்து கொள்வதாகவும் ஜனாதிபதி ராஜபக்‌ஷவிடம் தெரிவித்தார்.

ஸ்பெய்ன் அமைச்சர் இவ்வாறு தெரிவிக்கையில் குறுக்கிட்டு மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவிக்கையில்,

முன்னாள் எல்ரிரிஈ போராளிகளை மீண்டும் சமூகத்தில் விரைவாக விடுவிக்க அரசாங்கம் முடிவுசெய்துள்ளதாகவும் "அவர்களை சமூகத்தினூடாக புனரவாழ்வளித்து விடுவது மிகச் சிறப்பானது என நான் நம்புகிறேன் " எனத் தெரிவித்தார்.
அதற்கு ஸ்பெய்ன் அமைச்சர் மார்க்கல்லோ, "செல்வதற்கு அதுவே சரியான பாதை ஆனால் அது இலகுவானதல்ல� என உடனேயே பதிலளித்தார்.
மேலும் கண்ணிவெடியகற்றல், மீள்குடியேற்றல், மீள்கட்டுமானம், புனர்வாழ்வு உட்பட வடக்கு கிழக்கின் போருக்குப் பிந்தய உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை எடுத்துக் கொண்ட வெவ்வேறான நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி ராஜபக்‌ஷ விளக்கமளித்தார்.
அத்துடன் நேற்று அலரிமாளிகையில் ஜப்பான் தூதுவர் ஜசூசி அகாசியையும் மஹிந்த சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இருவருக்குமிடையில் என்ன கருத்துக்கள் இடம்பெற்றன என்பது இதுவரையில் தெரியவில்லை.

http://www.tamilwin.com/show-RUmsyJTbKUiu4.html

Geen opmerkingen:

Een reactie posten