தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 7 september 2014

லெபனான் வீரர் தலை துண்டித்து படுகொலை! ஐ.எஸ்.ஐ.எஸ்ன் அட்டூழியம்!

லெபனான் வீரர் ஒருவரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தலைதுண்டித்து படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை இணைத்து தனி இஸ்லாமிய நாடு அமைப்பதற்காக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுமட்டுமின்றி செய்திகளை சேகரிக்க சென்ற அமெரிக்க நிருபர்கள் ஜேம்ஸ் போலே, ஸ்டீவன் சாட்லாப் ஆகியோரை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றதுடன், தலை துண்டித்தும் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது லெபனான் நாட்டைச் சேர்ந்த போர் வீரர் ஒருவரை தலையை துண்டித்து தங்கள் வெறிச்செயலை மீண்டும் நிறைவேற்றியுள்ளனர்
கடந்த மாதம் லெபனான் எல்லைப்பகுதியான ஆர்சால் நகரில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும், லெபனான் படை வீரர்களுக்கும் இடையே கடும்சண்டை ஏற்பட்டது.
அப்போது லெபனான் படை வீரர்கள் 19 பேரை தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வந்தனர். அவர்களில் அலி அல்-செய்யது என்பவரை கடந்த வாரம் தலையை துண்டித்து கொலை செய்தனர்.
இதன்தொடர்ச்சியாக நேற்று மற்றொரு வீரர் அப்பாஸ் மெட்லிஜ் என்பவர் தப்பி செல்ல முயற்சித்தபோது தீவிரவாதிகளால் தலையை துண்டித்து கொல்லப்பட்டார்.
இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
http://world.lankasri.com/view.php?20360882200nnBd44eaAmOll4cbbM6AAdddcoSMQUdbccHlOOee43BBnZ2e033E80023

Geen opmerkingen:

Een reactie posten