தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 7 september 2014

மனுஸ்தீவு தடுப்பு முகாமின் மோசமான அவலம்!

ஜனாதிபதி மஹிந்த விரைவில் வத்திக்கானுக்கு விஜயம்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 செப்ரெம்பர் 2014, 05:26.15 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விரைவில் வத்திக்கானுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் வாரத்தில் ஜப்பான் பிரதமரும், சீன ஜனாதிபதியும் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
இரு நாடுகளது தலைவர்களும் தமது இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டதன் பின்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வத்திக்கானுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸை சந்திக்கும் நோக்கில் ஜனாதிபதி வத்திக்கானுக்கு அவசர விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார்.
எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் பாப்பாண்டவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்த விஜயத்திற்கான உத்தியோகபூர்வ அழைப்பினை நேரடியாக விடுக்கும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வத்திக்கானுக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாப்பாண்டவரின் இலங்கை விஜயத்திற்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடாத்தி முடிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyJTbKUit6.html
தண்டவாளத்திலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு - மரணத்தில் சந்தேகம்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 செப்ரெம்பர் 2014, 07:13.08 AM GMT ]
கம்பளை போதலாபிட்டிய பகுதியில் ரயில் தண்டவாளத்திலிருந்து பெண்ணொருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கண்டியிலிருந்து நானுஓயா நோக்கி புறப்பட்ட ரயில் ஊழியர்களால் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மரணம் எவ்வாறு நிகழ்ந்துள்ளது என்பது தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பெண் ரயிலில் மோதுண்டு உயிரிழக்கவில்லை என ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
119 என்ற அவச அழைப்புக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.
குறித்த பெண் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளாரா அல்லது வேறு முறையில் உயிரிழந்துள்ளரா என்பது தொடர்பில் என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTbKUiuy.html
யாழ் - கொழும்பு பேரூந்து சேவையில் குழப்பம்: பெரும் சிரமத்தில் பயணிகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 செப்ரெம்பர் 2014, 07:47.15 AM GMT ]
கொழும்பு - யாழ்ப்பாணத்திற்கான பேரூந்து சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இன்றி கொழும்பு - யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபட்ட பேரூந்துகள் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனையடுத்து அனுமதியுடன் சேவையில் ஈடுபடும் பேரூந்து உரிமையாளர்களுக்கும் அனுமதிப்பத்திரம் இல்லாத உரிமையாளர்களுக்கும் இடையில் தகராறுகள் ஏற்பட்டன.
இதனையடுத்து யாழ். பிரதிப் பொலிஸ் அத்தியட்சகருடன் சந்திப்பு ஒன்றினை பேரூந்து உரிமையாளர்கள் மேற்கொண்டனர்.
இந்த சந்திப்பின் போது, கடந்தாண்டில் யாழ்- கொழும்பு சேவையில் 154 பேரூந்துகள் ஈடுபட்டதாகவும், இந்தாண்டு 48 பேரூந்துகளுக்கு மட்டுமே வழி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதாகவும் அவற்றில் 13 பேரூந்துகள் மட்டுமே சேவையில் ஈடுபடுகின்றன என்றும் முறையிட்டுள்ளனர்.
இதனையடுத்து கடந்த புதன்கிழமை வரையும் சேவையில் ஈடுபட வேண்டாம் என்றும் போக்குவரத்து அமைச்சருடன் பேசி தீர்வு பெற்றுத் தருவதாக பொலிஸ் அத்தியட்சகர் அறிவித்தார்.
எனினும் இன்றுவரை அவர்களுக்கான தீர்வு வழங்கப்படவில்லை. இதனால் தொடர்ந்தும் குழப்ப நிலை உருவாகியுள்ளது. பேரூந்துகள் தாக்கப்பட்டன. இதனால் பயணிகளும் காயங்களுக்கு உள்ளாகி இருந்தனர். இவ்வாறான நிலை கடந்த ஒரு வாரகாலமாக தொடர்வதால் போக்குவரத்து செய்யும் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
சேவையில் ஈடுபடும் சில பேரூந்துகள் பயணிகளால் நிரம்பி வழிவதனால் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்லும் பயணிகள் நின்று கொண்டு செல்ல வேண்டியுள்ளதாகவும் இதனால் பெரும் அசௌகரித்தை சந்திப்பதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே போக்குவரத்து அமைச்சு குறித்த விடயத்திற்கு விரைவில் நடவடிக்கை எடுத்து பயணத்தில் சீரான ஒரு கட்டமைப்பினை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTbKUiuz.html

மனுஸ்தீவு தடுப்பு முகாமின் மோசமான அவலம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 07 செப்ரெம்பர் 2014, 08:37.21 AM GMT ]
மனுஸ்தீவு தடுப்பு முகாம் மிகவும் மோசமான கிருமிகள் தொற்றக் கூடிய முகாம் என அங்கு கடமை புரிந்த அதிகாரி ஒருவர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 ஹமீட்டின் மரணம் பற்றி மனுஸ்தீவு தடுப்பு முகாமில் கடமையாற்றிய அதிகாரி அவுஸ்ரேலியா செய்தி சேவை ஒன்றுக்கு தெரிவித்துள்ளதாவது,
இந்த முகாமிற்குள்ளே நிலவும் மோசமான சுகாதார நிலைமை பற்றி தெரிந்தவருக்கு ஹமீட்டின் மரணம் வியப்பைத் தரமாட்டாது.
இந்த முகாமில் வாயு சீராக்கிகள் இல்லை, கட்டில்கள் நெருக்கமாக போடப்பட்டிருந்தன.
வாழ்வதற்குரிய நிலைமை மோசமானதாகவே இருந்தன, அகதிகள் வாழ்வதற்கான போதிய வசதி காணப்படவில்லை அவுஸ்ரேலிய சிறைகளை விட மிக மோசமாக இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.
இங்கு உள்ளவர்கள் பெரும்பாலும் தங்களின் அன்றாட தேவைகளுக்கு பாவிக்கும் இடங்கள் அனைத்தும் உடைந்து விழும் அபாயத்தை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த மோசமான நிலைமையை தாம் ரகசிய கமராவில் பதிவு செய்திருந்ததாகவும் இதன் காரணமாகவே தான் தனது பதவியையும் இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTbKUiu2.html

Geen opmerkingen:

Een reactie posten