லெபனானில் தொழில் புரிந்து வரும் இலங்கை பெண் மற்றும் அவரது 13 வயதான மகன் ஆகியோர் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
லெபனானுக்கு செல்லும் வெளிநாட்டவர்களின் பாதுகாப்பு சம்பந்தமாக செயற்படும் லெபனான் பாதுகாப்பு முகவர் அமைப்பு வெளியிட்ட அறிக்கைக்கு அமைய இவர்களை அங்கிருந்து நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடு கடத்தப்பட்டவர்கள் இலங்கை வந்துள்ளனர். லெபனான் பாதுகாப்பு முகவர் அமைப்பின் அதிகாரிகள் அங்கு வாழும் வெளிநாட்டு தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு தொடர்ந்தும் லெபனானில் தங்கியிருக்க வீசா வழங்க முடியாது என அறிவித்ததுடன் இரண்டு நாட்களுக்கு நாட்டில் இருந்து வெளியேறுமாறு அறிவித்ததாக நாடு திரும்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் தாயும் மகனும் கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதுடன், தந்தை தொடர்ந்தும் லெபனானில் வசித்து வருவதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நாடு கடத்தப்பட்ட 13வயதுச் சிறுவன் கூறுகையில்,
தனக்கு லெபனான் குடியுரிமை இருப்பதாகவும் இதற்கு முன்னர் தான் இலங்கை வந்ததில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தனது தாய் இலங்கையில் தொழில் ஒன்றை பெற முடியாத நிலையில், மீண்டும் லெபனான் செல்லும் எதிர்பார்ப்பில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
லெபனானில் வாழும் தொழிலாளர்களின் பிள்ளைகள் நாடு கடத்தப்படுவது அவர்களின் மனித உரிமைகளை மீறும் செயல் என மனித உரிமை கண்காணிப்பகம் மேலும் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUkv4.html

Geen opmerkingen:
Een reactie posten