தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 september 2014

தமிழக மீனவர் விவகாரம்: நான் அப்படிக் கூறவே இல்லை! பல்டி அடித்த சுப்பிரமணியன் சுவாமி!

சஜித் பிரதான பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்பார்: திஸ்ஸ அத்தநாயக்க
[ புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2014, 12:31.29 PM GMT ]
ஊவா மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு நடத்தப்படும் பிரதான பிரச்சாரக் கூட்டங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச கலந்து கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் பதுளையில் எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு விழாவிலும் கலந்து கொள்ள உள்ளதாக சஜித் உறுதிப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மொனராகலை மற்றும் பதுளை மாவட்டங்களில் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பிரதான பிரச்சாரக் கூட்டங்களில் சஜித் பிரேமதாச கலந்து கொள்ள உள்ளார்.
கட்சியினர் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக இந்த ஒற்றுமை ஏற்பட்டுள்ளது.
இதனை தவிர ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சார மேடைகளில் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார் எனவும் அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUkv1.html
தமிழக மீனவர் விவகாரம்: நான் அப்படிக் கூறவே இல்லை! பல்டி அடித்த சுப்பிரமணியன் சுவாமி
[ புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2014, 12:40.24 PM GMT ]
தமிழக மீனவர் படகுகளை விடுவிக்க வேண்டாம் என்று இலங்கைக்கு ஆலோசனை கூறியதாக பேட்டியளித்திருந்த பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, தற்போது தாம் அப்படிக் கூறவில்லை என்று மறுப்புத் தெரிவித்துள்ளார்.
“இலங்கைக்கு தான் சென்று மகிந்த ராஜபக்சவை சந்தித்த போது, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள்.. அவர்கள் தொழிலாளர்கள். அதனால் விடுவித்துவிடுங்கள்.
ஆனால் அவர்களது படகுகளின் உரிமையாளர்கள் பணக்காரர்கள். அதை விடுவிக்க வேண்டாம் என்று சொன்னேன். அதைத்தான் இலங்கை அரசு செய்து கொண்டிருக்கிறது என்று தொலைக் காட்சி ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் சுவாமி தெரிவித்திருந்தார்.
இவரது இந்தக் கருத்திற்கு தமிழகத்தில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது. அத்துடன், தமிழக முதல்வர் ஜெயலலிதா சுவாமியின் கருத்தைக் கண்டித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
மேலும் தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக சுப்பிரமணியன் சுவாமியின் கொடும்பாவி எரித்துப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சுப்பிரமணியன் சுவாமி, தான் மீனவர் படகுகளை விடுவிக்க வேண்டாம் என்று இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவிடம் கூறவே இல்லை என்று பல்டி அடித்திருக்கிறார்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி,
ஜெயலலிதா திரைத்துறையைச் சேர்ந்தவர். அவர் எழுதி வைக்கப்பட்ட கதையைத் தான் படிப்பார். நான் அப்படி எல்லாம் சொல்லவில்லை.
நான் மீனவர்கள் நலனுக்காகத்தான் செயல்படுகிறேன். அதனால் பலருக்கு என்னைப் பிடிக்கவில்லை. இராமேஸ்வரம் மீனவர்கள் என்னை சந்தித்து இலங்கை சிறையில் உள்ளவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவைக் கொண்டு நான் ராஜபக்சேவிடம் கொடுத்தேன். அதனை ஏற்று மீனவர்களை ராஜபக்ச விடுவித்தார். ஆனால் மீன்பிடி இயந்திரப் படகுகளின் உரிமையாளர்கள் படகுகளை மீட்குமாறு என்னிடம் கோரிக்கை விடுவிக்கவில்லை.
ராஜபக்சதான் மீன்பிடி படகுகளை விடுவிக்க முடியாது என்றார் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUkv2.html

Geen opmerkingen:

Een reactie posten