தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 september 2014

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் 6 மாணவர்கள் கடத்தல்!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 6 மாணவர்களை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நேற்று கடத்திச் சென்றதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கடத்திச் சென்ற மாணவர்களிடம் பல்கலைக்கழகத்தின் வாடி வீட்டில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர் எனவும் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
மேற்படி 6 மாணவர்கள் விரிவுரைகள் முடிந்து நேற்று மாலை விடுதிகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது விடுதிகளுக்கு அருகில் காத்திருந்த பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் அவர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சமூக மற்றும் மொழி பீடத்தின் முதலாம் ஆண்டில் பயின்ற தமிழ் மாணவர் மீது தாக்குதல் நடத்தி அச்சுறுத்தும் வாசகங்கள் எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தாகவும் அத்துடன் விடாது அந்த பீடத்தை சேர்ந்த யோகராஜா நிரோஷன் என்ற மாணவரை கைது கடத்திச் சென்ற பயங்கரவாத விசாரணைப் பிரிவினரை அவரை தடுத்து வைத்தனர் எனவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கூறியுள்ளது.
மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களை அடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார். எனினும் அதற்கு முன்னர் தாக்குதலுக்கு உள்ளான தமிழ் மாணவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைது செய்து கடந்த 23 நாட்களாக தடுத்து வைத்துள்ளனர்.
அரசாங்கத்தின் இந்த மாணவர் அடக்குமுறைக்கு பல்கலைக்கழக நிர்வாகம் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள அனைத்து பல்லைக்கழக மாணவர் ஒன்றியம், அரசாங்கம் மிலேச்சத்தனமாக மாணவர் அடக்குமுறையை மேற்கொண்டு பல்கலைக்கழகங்களுக்குள் இனவாதத்தை தூண்டும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUkt7.html

Geen opmerkingen:

Een reactie posten