[ வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2014, 07:49.26 AM GMT ]
கிளிநொச்சியின் சாந்தபுரம், கிருஸ்ணபுரம், விநாயகபுரம், செல்வாநகர், மலையாளபுரம் போன்ற பகுதிகளுக்கு ஏற்கனவே லண்டன் கற்பக விநாயகர் ஆலயம், சுவிஸ் அன்பே சிவம் அமைப்பு என்பன பா.உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாக குடிநீர் வழங்கலை செய்துவருகின்றன.
இந்தநிலையில் மேலும் உதவியாக இக்கிராமங்களுக்கு அவுஸ்திரேலியா நிரஞ்சன் செல்லத்துரையின் ராசி சேவிஸ் மற்றும் திருவையாறு மகிழகம் சிறுவர் பாடசாலை என்பன இணைந்து தற்போது தேவையாக உள்ள குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.
தண்ணீர் தட்டுப்பாட்டால் அல்லல்படும் உறவுகளின் குறையை தீர்க்க புலம்பெயர் கருணை உள்ளங்கள் செய்துவரும் உதவிக்காக மக்கள் தம் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTYKUjp2.html
எரிபொருள் நிரப்பும் போது முச்சக்கரவண்டி தீப்பற்றியதில் சாரதி படுகாயம்! யாழில் சம்பவம்
[ வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2014, 08:31.50 AM GMT ]
யாழ்ப்பாணம், நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த ரி.சிவதர்சன் (வயது 24) என்பவரே எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார்.
முச்சக்கரவண்டிக்கு எரிபொருள் நிரப்பும் போது, திடீரென தீப்பற்றியது. இதன்போது, அங்கு நின்றவர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுந்துள்ளனர்.
சம்பவத்தில், குறித்த முச்சக்கரவண்டிக்கு பாரிய சேதம் ஏற்படவில்லை என்ற போதிலும் அதன் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTYKUjp3.html
தமிழையும், தமிழ் மக்களையும் நேசித்த உணர்வாளன் நாசா
[ வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2014, 08:34.01 AM GMT ]
கனடாவில் வாழ்ந்தபோதும், கறைபடியாத இதயத்தோடு கடமை என்ற நிலையில் வாழ்ந்து முடிந்த உறுதியுடைய உணர்வாளர் நாகராசா (நாசா) அவர்களின் தாய்மண் வாழ்வு மிகவும் கண்ணியமானது என்பதனை நாம் அறிவோம்.
வரலாற்று ரீதியாக தமிழரின் பூர்வீக மண், எமது சொந்த மண் இன்று அம்பாறை மாவட்டம் என்ற போதும், பட்டிப்பளை என்ற பழந்தமிழ் பெயரோடு இயற்கை எழில் கொஞ்சும் சிற்றூரான மல்லிகைத்தீவு என்ற இவ்வூரில் தாய் மொழி உணர்வோடு, தாய் மண் பற்றோடு வாழ்ந்த குடும்பத்தில் 1946ம் ஆண்டு பிறந்த நாகராசா (நாசா) அவர்கள் தனது இடை நிலைக் கல்வியையும், உயர்கல்வியையும் கல்லடி சிவானந்தா தேசியக் கல்லூரியில் மேற்கொண்டவர்.
நாசா அவர்கள் மட்டக்களப்பில் தனது மூன்று தசாப்தகால வாழ்வில் பல்வேறு தரப்பினராலும் அறியப்பட்டவராகவும், தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டங்களிலும், தமிழ் இளைஞர் பேரவையின் செயல்பாடுகளிலும் பங்களிப்புகளை வழங்கி இருந்தார்.
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பித்தபோது அதனோடு ஒன்றித்து பயணித்து விடுதலைப் புலிகளின் அமைப்போடு தொடர்புகளை ஏற்படுத்தி தன்னிலையின் ஆபத்து தெரிந்தும் தமிழ்த் தேசியத்தின் விடுதலை என்ற மாபெரும் பொது நிலைத் தன்மையோடு செயல்பட்டதனால் தாய் மண்ணைவிட்டு வெளியேறி 1986ம் ஆண்டு பிற்பகுதியில் தமிழ் நாட்டு மண்ணில் வாழ்ந்தபோது தமிழ்த் தேசியத்தின் தலைவரை சந்தித்திருந்தார்.
1987ம் ஆண்டு காலப் பகுதியில் கனடா சென்று வாழ்ந்த வேளையிலும் உணர்வோடு இறுதி வரை தடம் புரளாது இலட்சியத்திற்காக வாழ்ந்த இவரைப் பற்றி தெரியாமல் சிலர் இருந்தாலும் விடுதலைப் போராட்ட காலத்தின் சுவடுகளில் இவருடைய கால்கள் பதிந்திருந்ததை யாரும் மறுப்பதற்குமில்லை மறப்பதற்குமில்லை.
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் வரலாற்றுப்பதிவை நிலை நிறுத்த வரலாற்றுக் கடமையைப் புரியாத பலபேர் முயன்றுள்ள நிலையில் இச்சுயநலக் தன்மைக்கப்பால் பொது நலத்தோடு வாழ்ந்த,வாழ்கின்ற பலபேர் மறைந்து தங்களுடைய பணிகளை புரிந்து கொண்டிருக்கின்றதையும் நாசா அவர்களின் மறைவு எமக்கு வெளிக்காட்டி நிற்கின்றது.
கொள்கையோடு வாழ்ந்து, தாய் மண்ணின் விடுதலை என்ற குறிக்கோளோடு மக்களையும், மண்ணையும் நேசித்த மாபெரும் தமிழ் தேசிய உணர்வாளன் நாசா அவர்களும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தன்னலமற்ற தனது பணி மூலமாக தன்னையும் பதிவு செய்துள்ளார்.
தம்பிராஜா
spstrajah@yahoo.com
spstrajah@yahoo.com
http://www.tamilwin.com/show-RUmsyJTYKUjp4.html
Geen opmerkingen:
Een reactie posten