[ வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2014, 07:41.20 AM GMT ]
யாழ்ப்பாணம் - மன்னார் சோலைநிலா சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஏழு வயதான பாடசாலை மாணவர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த அவரை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளார்.
விதியைக் கடக்க முற்பட்ட போது லொறி ஒன்றில் மோதுண்டே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்துடன் தொடர்புடைய லொறி சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சாரதியை கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவன் இரண்டாம் வகுப்பில் கல்வி பயிலும் சு. தழிழ்மாறன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முச்சக்கரவண்டி விபத்து - ஒருவா் வைத்தியசாலையில்
அம்பேவெலயிலிருந்து நோர்வூட் பிரதேசத்திற்கு பால் ஏற்றிச் சென்ற பௌஸருடன் டிக்கோயாவிலிருந்து, டிக்கோயா வைத்தியசாலைக்கு சென்ற முச்சக்கரவண்டி பௌஸர் மீது மோதியதில் முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்து டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹற்றன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹற்றன் பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா வனராஜா பகுதியில் வைத்து இன்று காலை 11 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் அதிக வேகமாக சென்ற முச்சக்கரவண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து பௌஸரில் மோதியுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஹற்றன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேற்படி முச்சக்கரவண்டியில் பயணித்த ஏனைய இரண்டு பேருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லையென பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹற்றன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புகையிரதம் தடம் புரண்டதால் பயணிகள் சிரமம்
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற பொடி மெனிக்கே ரயில் தடம் புரண்டதால் பயணிகளுக்கு பல சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.
இங்குருஓயா கலபொட புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இந்த ரயில் தடம் புரண்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்தள்ளது.
இன்று அன்று காலை 10.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தடம் புரண்ட புகையிரத்தை வழமைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவிக்கின்றது.
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் ரயில் ஹற்றன் புகையிரத நிலையத்திலும் கொழும்பிலிருந்து பதுளை நோக்கி செல்லும் ரயில் நாவலப்பிட்டி புகையிரத நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டு பயணிகளை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தில் ஏற்றிச் சென்று இரு புகையிரதத்திற்கும் மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTYKUjp0.html
அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக வழக்கு?
[ வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2014, 07:48.44 AM GMT ]
தம்மை இழிவுபடுத்தியதாகத் தெரிவித்து கடுவெல நகரசபையின் தலைவர் ஜீ.எச்.புத்ததாச வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
2014ம் ஆண்டில் விமலின் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியினால் பிரசுரிக்கப்பட்ட பத்திரிகையொன்றில் தம்மை இழிவுபடுத்தி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பஞ்சாயுதம் என்ற பெயரில் இந்த பத்திரிகை பிரசுரமாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமது நற்பெயருக்கு களங்கம் எற்படுத்தியமைக்காக அமைச்சர் விமல் வீரவன்ச ஐந்து கோடி ரூபா நட்ட ஈடு வழங்கப்பட வேண்டுமென புத்ததாச கோரியுள்ளார்.
கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இன்று இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச கட்சியின் செயலாளர்ப பிரியன்ஜன் விதாரனகே ஆகியோருக்கு எதிராக இவ்வாறு நட்ட ஈடு கோரி நகரசபைத் தலைவர் புத்ததாச வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTYKUjp1.html
Geen opmerkingen:
Een reactie posten