[ புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2014, 04:08.05 PM GMT ]
இது தொடர்பில் நேற்றைய தினமே மணிலாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த அலுவலகம் ஓகஸ்ட் 29ம் திகதி மூடப்பட்டு விட்டதாக வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த அலுவலகம் மூடப்பட்டமைக்கான காரணம் குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சு மணிலாவின் தகவலை எதிர்ப்பார்த்திருப்பதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் பங்களாதேஸில் உள்ள பிலிப்பைன்ஸின் தூதரகம், பிலிப்பைன்ஸுக்கு செல்லும் இலங்கையர்கள் வீசாவுக்காக பங்களாதேஸில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகத்துக்கு விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
வருகை விசாவில் பிலிப்பைன்ஸுக்கு செல்வோர் தூதரகத்தின் இணையத்தளத்தை பார்க்குமாறும் பங்களாதேஸில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகம் அறிவித்துள்ளது.
இதேவேளை இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான உறவு திருப்திகரமாகவே உள்ளது என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUkw0.html
இலங்கை கடற்படையினருக்கு எதிராக தமிழக சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்!
[ புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2014, 04:33.29 PM GMT ]
கைதுசெய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க மத்திய அரசாங்கம் விரைந்து நடவடிகை எடுக்க வேண்டும் என்று சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.
இந்தநிலையில் தமது ஆலோசனையின்பேரிலேயே இலங்கை அரசாங்கம், தமிழக மீனவர்களின் படகுகளை தடுத்து வைத்துள்ளதாக ஜனதாக் கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ள கருத்துக்கும் சட்டத்தரணிகள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் மோதி மூழ்கடிக்கப்பட்ட இரண்டு படகுகளில் இருந்த 15 தமிழக மீனவர்களை கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.
இதேவேளை குறித்த மீனவர்களை விடுவிக்க இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மீனவர்களை இந்தியா கையளித்தது
இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 இலங்கை மீனவர்களும் அவர்களின் நான்கு படகுகளும் இன்று இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்திய- இலங்கை சர்வதேச கடல் எல்லையில் வைத்து இலங்கை மீனவர்கள் கையளிக்கப்பட்டனர்.
கடந்த 29 ஆம் திகதியன்று இந்திய கடற்படை கப்பலான விஸ்வாஸ்ட் கப்பலால் கைது செய்யப்பட்டு ஆந்திர பிரதேஸில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மீனவர்களே இன்று இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUkw1.html
Geen opmerkingen:
Een reactie posten