[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 06:53.45 AM GMT ]
ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சட்டத்துறையில் தற்போது வாதம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதுகுறித்து அரசாங்கம் அச்சத்தில் உள்ளது.
நாட்டில் சட்ட விளக்க கட்டளைச் சட்டம் ஒன்றுள்ளது. அந்த கட்டளைச் சட்டத்தின் அடிப்படையில் இறந்த காலத்திற்கு சட்டங்களை அமுல்படுத்த முடியாது.
18வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் என்பது நாட்டின் ஜனநாயகத்தை குழித்தோண்டி புதைத்த, சட்டத்தை புறந்தள்ளிய திருத்தச் சட்டமாகும்.
இந்த சட்டம் கொண்டு வரப்பட்ட போது ஒன்றை மறந்து விட்டனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 17வது திருத்தச் சட்டத்திற்கு அமையவே இரண்டாவது முறைக்கான பதவிப் பிரமாணத்தை செய்து கொண்டார்.
இதன் காரணமாக அரசியல் அமைப்புச் சட்டத்தின் 31.2 கீழ் இரண்டாம் தவணைக்கு மாத்திரமே அவர் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும்.
இதனால், மூன்றாவது முறையாக அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது கேக் துண்டை வெட்டியது போன்று தெளிவானது.
தற்போதைய ஜனாதிபதி மூன்றாவது முறையாகவும் போட்டியிட முடியாது. மகிந்த ராஜபக்ஷவே மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக தெரிவாகுவார் என அரசாங்கத்தில் உள்ளவர்கள் எதிர்பார்த்திருந்தால் அது சட்டரீதியாக பாரதூரமான தவறாகும்.
இதனால், நாட்டு மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கிறோம்.
சட்டத்தையும், ஜனநாயகத்தையும் குழித்தோண்டி புதைத்துள்ள அரசாங்கம், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணாகவே செயற்பட பார்க்கின்றது.
அமுலில் உள்ள சட்டம் மிக தெளிவானது என்பதால், சர்வஜன வாக்கெடுப்புக்கும் செல்ல முடியாது.
இப்படியான சட்டரீதியான காரணத்திற்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்த முடியாது என அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது எனவும் சுனில் வட்டகல குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUlt3.html
ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏற்றுக்கொண்டு, ஊவா மாகாணசபைக்கான ஐதேக தேர்தல் பிரச்சார கூட்டங்களிலும், பதுளை மாவட்டத்தில் எதிரணிக்கு ஆதரவாக சுதந்திர மேடை அமைப்பு ஏற்பாடு செய்துவரும் கூட்டங்களிலும் கலந்துகொள்ளவுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சட்டத்துறையில் தற்போது வாதம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதுகுறித்து அரசாங்கம் அச்சத்தில் உள்ளது.
நாட்டில் சட்ட விளக்க கட்டளைச் சட்டம் ஒன்றுள்ளது. அந்த கட்டளைச் சட்டத்தின் அடிப்படையில் இறந்த காலத்திற்கு சட்டங்களை அமுல்படுத்த முடியாது.
18வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் என்பது நாட்டின் ஜனநாயகத்தை குழித்தோண்டி புதைத்த, சட்டத்தை புறந்தள்ளிய திருத்தச் சட்டமாகும்.
இந்த சட்டம் கொண்டு வரப்பட்ட போது ஒன்றை மறந்து விட்டனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 17வது திருத்தச் சட்டத்திற்கு அமையவே இரண்டாவது முறைக்கான பதவிப் பிரமாணத்தை செய்து கொண்டார்.
இதன் காரணமாக அரசியல் அமைப்புச் சட்டத்தின் 31.2 கீழ் இரண்டாம் தவணைக்கு மாத்திரமே அவர் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும்.
இதனால், மூன்றாவது முறையாக அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது கேக் துண்டை வெட்டியது போன்று தெளிவானது.
தற்போதைய ஜனாதிபதி மூன்றாவது முறையாகவும் போட்டியிட முடியாது. மகிந்த ராஜபக்ஷவே மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக தெரிவாகுவார் என அரசாங்கத்தில் உள்ளவர்கள் எதிர்பார்த்திருந்தால் அது சட்டரீதியாக பாரதூரமான தவறாகும்.
இதனால், நாட்டு மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கிறோம்.
சட்டத்தையும், ஜனநாயகத்தையும் குழித்தோண்டி புதைத்துள்ள அரசாங்கம், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணாகவே செயற்பட பார்க்கின்றது.
அமுலில் உள்ள சட்டம் மிக தெளிவானது என்பதால், சர்வஜன வாக்கெடுப்புக்கும் செல்ல முடியாது.
இப்படியான சட்டரீதியான காரணத்திற்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்த முடியாது என அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது எனவும் சுனில் வட்டகல குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUlt3.html
மனோ கணேசன் ஊவா தேர்தலில் ஐதேகவுக்கு ஆதரவாக பிரசாரம்!
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 07:00.22 AM GMT ]
இவ்வரிசையில் முதற்கூட்டமாக சுதந்திர மேடை அமைப்பு, பௌர்ணமி விடுமுறை தினமான 8ம் திகதி காலை, பதுளை பஸ் நிலையத்துக்கு எதிரில் தபால் நிலைய மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் மனோ உரையாற்றவுள்ளார்.
இன்று காலை ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஜமமு தலைவர் மனோ கணேசனுக்கும் இடையில், ரணில் விக்கிரமசிங்கவின் ஐந்தாம் ஒழுங்கை பிரத்தியேக இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மனோ கணேசன் கூறியதாவது,
ஊவா மாகாணசபை தேர்தலில், தமது கட்சிக்கு ஆதரவாக பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தலைமைத்துவ சபை தலைவர் கரு ஜயசூரிய ஆகியோர் எமக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த அழைப்புகளை ஏற்றுக்கொண்டு ஆளும் அரசுக்கு எதிராக தமிழ் மக்களின் வாக்குகளை அணிதிரட்டும் முயற்சியில் நாம் ஈடுபட விரும்புகின்றோம். தமிழ் வாக்குகளை சிதறடிக்ககூடாது என்ற அடிப்படையில் நாம் இந்த தேர்தலில் நேரடியாக போட்டியிடுவதை தவிர்த்துக் கொண்டோம்.
கடந்த காலங்களில் எதிரணி, அரசு தரப்பு என்ற வித்தியாசங்களையும் மறந்து, தமிழ் பிரதிநிதித்துவம் என்ற நல்லெண்ண நோக்கில் நாம் சப்ரகமுவ மாகாணசபை தேர்தலின் போது அரசில் அங்கத்துவம் கொண்டுள்ள கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டோம்.
எனினும் எமது நல்லெண்ண நோக்கை முன்னெடுத்து செல்ல இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தவறிவிட்டது. அத்துடன், அக்கட்சியினர், கொழும்பு மாவட்டத்தில் பொறுப்பில்லாமல் போட்டியிட்டு, தமிழ் பிரதிநிதித்துவத்துக்கு ஊறு விளைவித்தார்கள்.
தமிழ் பிரதிநிதித்துவம் என்ற நல்லெண்ண நோக்கில் தமிழ் கட்சிகள் இன்று இணைந்து செயல்பட முடியாமைக்கு இதொகா முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எனவே தமிழ் மக்கள் மத்தியில், எதிரணி, அரசு தரப்பு என்று இரண்டு தரப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாத ஒரு நிலைமை இன்று உருவாகிவிட்டது. இந்த அராஜக இனவாத, மதவாத அரசாங்கத்துக்கு சார்பாக வாக்களிக்க தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எந்த ஒரு காரணமும் கிடையாது.
இந்த அரசுக்கு எதிராக ஊவா தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். இது தொடர்பாக நமது கட்சியின் அரசியல் குழு எதிர்வரும் வியாழக்கிழமை நான்காம் திகதி மாலை கொழும்பில் கூடி உரிய முடிவுகளை எடுக்கவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUlt4.html
பாகிஸ்தான் அகதிக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தக் கூடாது எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பாகிஸ்தான் அகதியின் கோரிக்கை மனுவை நீதிமன்றம் நிராகரிப்பு
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 07:04.17 AM GMT ]
அனிலா இம்ரான் என்ற பாகிஸ்தான் பெண் அகதிக் கோரிக்கையாளரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நாடு கடத்த அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், பாகிஸ்தான் அகதிக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த தடையில்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பவர்களை நாடு கடத்தும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இருப்பதாக சட்ட மா அதிபர் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாகிஸ்தான் பிரஜைகள் நாடு கடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்திருந்த இடைக்கால தடையுத்தரவு நீக்கப்பட்டுள்ளது.
நீதியரசர் உபாலி அபேரட்னவினால் அகதிக் கோரிக்கையாளர் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUlt5.htmlநாடு கடத்த அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், பாகிஸ்தான் அகதிக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த தடையில்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பவர்களை நாடு கடத்தும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இருப்பதாக சட்ட மா அதிபர் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாகிஸ்தான் பிரஜைகள் நாடு கடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்திருந்த இடைக்கால தடையுத்தரவு நீக்கப்பட்டுள்ளது.
நீதியரசர் உபாலி அபேரட்னவினால் அகதிக் கோரிக்கையாளர் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten