லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுகலை தோட்டத்தைச் சேர்ந்த யோகநாதன் சிவதர்ஷன் என்ற சிறுவனைக் காணவில்லை என, கடந்த 04ம் திகதி இரவு 11.00 மணியளவில், பெற்றோர் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இந்தநிலையில் குறித்த சிறுவன் இன்று காலை தலவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் சடலமாக மிதந்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
அத்தோடு லிந்துலை பொலிஸ் நிலையத்திலும் முறைபாடு செய்திருந்தும் பொதுமக்களால் சடலத்தை கண்டுப்பிடிக்கும் வரை லிந்துலை பொலிஸார் எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என கோரி பொதுமக்களால் இன்று காலை 9 மணிமுதல் தற்போது வரை தலவாக்கலை நகரசபைக்கு முன்னால் அட்டன் நுவரெலியா பிரதான வீதியை மறித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனா். இதனால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
குறித்த சடலம் நீதவானின் மரண விசாரணைக்காக அதே இடத்தில் வைக்கபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற விசாரணைகளையும் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு திருப்பெருந்துறையில் கட்டப்பட்டுள்ள மதுபானக் களஞ்சியசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வெள்ளக்கிழமை மாலை களஞ்சிய சாலைக்கு எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுற்றுச் சுவரை உயரமாகக் கட்டப்பட்டுள்ள குறித்த வளாகத்தினுள் வெள்ளிக்கிழமை மாலை மதுபானங்களுடன் வந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லொறிகளை வெளியேற்றக் கோரியே ஆர்ப்பாட்டக்காரர்கள் குரல் எழுப்பினர்.
மர்மமான முறையில் கட்டிடம் நிர்மாணிக்கப்படுகின்றது என ஊர் மக்கள் கையெழுத்திட்ட பிரதிகளை மாநகர சபை, பிரதேச செயலகம் மற்றும் அரச அதிபர் ஆகியோருக்கு 30.06.2014 ஆம் திகதி கடிதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ் அறிவித்தலுக்கமைய மாநகர சபை காணி உரிமையாளருக்கு களஞ்சியம் அமைப்பதற்கு அல்ல வதிவிடம் மற்றும் அலுவலகம் அமைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது என 09.07.2014 கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
பிரதேச செயலகம் மதுவரி ஆணையாளர் ( வருமானம்), இலங்கை மதுவரித் திணைக்களம் என்பவற்றிக்கு மதுபான களஞ்சியம் அமைக்க மாநகர சபை அனுமதியளிக்கவில்லை என அறிவித்துள்ளது.
அரச அதிபர் அவரது பதவிக் காலத்திலிருந்து எதுவித மதுபான சாலையோ மற்றும் களஞ்சியமோ அமைக்க அனுமதியளிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பொலிஸார் வந்து குறித்த லொறிகளையும் அனுமதிப் பத்திரத்தினையும் பரிசோதனை செய்து மதுபானங்களுடன் இருந்த லொறியை களஞ்சியத்தை விட்டு வெளியே அனுப்பிதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyJTaKUio7.html#sthash.8XoVyDsI.dpuf
காணாமற்போன சிறுவன் ‘சிவதர்ஷன்’ சடலமாக மீட்பு; இதோ அதிரும் புகைப்படங்கள் !
[ Sep 06, 2014 01:39:48 PM | வாசித்தோர் : 2375 ]
லிந்துலை மட்டுகலை தோட்டத்தில் மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாக கூறப்படும் சிறுவன் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளான். லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுகலை தோட்டத்தைச் சேர்ந்த 16 வயது யோகநாதன் சிவதர்ஷன் என்ற சிறுவனைக் காணவில்லை என, கடந்த 4ஆம் திகதி பெற்றோர் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
குறித்த சடலம் இன்று காலை 7.30 அளவில் பிரதேச மக்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள குறித்த சிறுவன் காணாமல் போனமை தொடர்பில் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.
மீட்கப்பட்ட சடலம் நீர்த்தேக்கத்திற்கு அருகில் காணப்படுவதாகவும் நீதவான் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இதேவேளை, சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஹட்டன் நுவரெலியா வீதியை மறித்து பிரதேச மக்கள் தலவாக்கலை நகர சபைக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten