தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 10 september 2014

போர் இடம்பெற்ற காலத்தில் காணப்பட்ட உத்வேகம் தற்போது இல்லை: விக்டர் ஐவன்!

மஹிந்தவின் ஜப்பான் மீதான ஈடுபாட்டை ஐ.தே.க வரவேற்பு
[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 04:56.55 PM GMT ]
இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஜப்பானுடன் செய்து கொண்டுள்ள அபிவிருத்தி உடன்படிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி வரவேற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா இந்த கருத்தை சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வெளியிட்டுள்ளார்.
பொருளாதார நிபுணராக விளங்கும் ஹர்ச டி சில்வா, ஜப்பானின் இலங்கைக்கான முதலீடுகள் யாவும் சிறப்பான பயன்களை தருபவையாக உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை சீனாவிடம் பெற்ற கடன்களுக்காக 6.5 வீத வட்டியை செலுத்த வேண்டியுள்ளது.
எனினும் ஜப்பானின் முதலீடுகளை பொறுத்தவரையில், அது இலங்கைக்கு நிதியுதவியின் அடிப்படையிலேயே முதலீடுகளை மேற்கொள்வதாக ஹர்ச தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நீண்டகாலமாக இலங்கையின் பொருளாதாரத்துக்கு உதவி வருகிறது. எனினும் புதிய வருகையாளரான சீனா அதற்கு ஈடாக செயற்பட முனைகிறது.
இதன்காரணமாகவே ஜப்பான் இலங்கை விடயத்தில் சில காலம் அக்கறையை வெளிப்படுத்தாமல் இருந்தது என்றும் ஹர்ச குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUgq2.html
போர் இடம்பெற்ற காலத்தில் காணப்பட்ட உத்வேகம் தற்போது இல்லை: விக்டர் ஐவன்
[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 05:03.29 PM GMT ]
போர் இடம்பெற்ற காலத்தில் காணப்பட்ட உத்வேகம் தற்போது கிடையாது என ராவய பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.
போர் இடம்பெற்ற காலத்தில் நாடாளுமன்றிலும் மக்கள் மத்தியிலும் காணப்பட்ட உத்தேகம் குறைவடைந்துள்ளது.
அந்த உத்வேகம் காரணமாகவே 18ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.  உலகின் பல நாடுகளில் ஜனாதிபதியின் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகளுக்கு வரையறுக்கப்பட்டிருக்கும்.
சர்வாதிகார ஆட்சி ஏற்படக் கூடாது என்பதே இதற்கான காரணமாகும்.
இலங்கையிலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும். சுதந்திரத்தின் பின்னர் நாட்டின் ஆட்சி முறைமையானது ஊழல், மோசடிகள் நிறைந்தவை.
மக்களுக்கு கௌரவமளிக்கக் கூடிய ஓர் ஆட்சி முறைமை உருவாக்கப்பட வேண்டும்.
கறுப்புப் பணமுடைய முதலாளிமாரே இன்று நாடாளுமன்றம் செல்கின்றனர். சாதாரண பொதுமக்களினால் அரசியல் நடத்த முடியவதில்லை.
தேர்தல்களின் போது ஊழல் மோசடிகள் இடம்பெறுகின்றன என விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.
சிங்கள இணைய ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUgq3.html

Geen opmerkingen:

Een reactie posten