தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 4 september 2014

12 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த நபர் கைது



சஷீந்திர ராஜபக்ஷவின் சுவரொட்டிகளை ஒட்ட உதவும் பொலிஸார்: புத்திஜீவிகளின் ஒன்றியம்
[ வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2014, 06:32.57 AM GMT ]
ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் சஷீந்திர ராஜபக்ஷவின் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு பொலிஸாரின் உதவி பெறப்பட்டுள்ளதாக மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான புத்திஜீவிகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தமது தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பிடம் இது குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன எனவும் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
பொலிஸாரின் பாதுகாப்புடன் கடந்த முதலாம் திகதி அதிகாலை 2 மணியளவில் படால்கும்புர பிரதேசத்தில் சஷீந்திர ராஜபக்ஷவின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
பதுளை வின்சன் டயஸ் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் செயற்பட்டதுடன் இதன் போது சட்டத்தை அமுல்படுத்த பொலிஸார் தவறியுள்ளனர்.
இதன் மூலம் ஊவா மாகாண சபைத் தேர்தலில் அரசியல் கட்சியின் பிரச்சாரத்திற்கு பொலிஸாரை பயன்படுத்தி, அதிகாரம் கொண்ட ஒரு தரப்பின் தேர்தலாக மாற்ற முயற்சித்து வருவதாகவும் மனித உரிமைகளை பாதுகாக்கும் புத்திஜீவிகளின் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTYKUjo3.html

12 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த நபர் கைது
[ வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2014, 07:02.42 AM GMT ]
12 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்குட்படுத்தி கர்ப்பணியாக்கியதாக கூறப்படும் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புத்தளம் ஏத்தாலை - ஆலங்குடா பிரதேசத்தில் வசித்து வரும் சிறுமியே இவ்வாறு துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அதே பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் சிறுமி தனிமையில் இருந்த போது அங்கு சென்ற சந்தேக நபர் சிறுமியை அச்சுறுத்தி இந்த குற்றச் செயலை மேற்கொண்டுள்ளார்.
சம்பவம் குறித்து எவருக்கும் கூறவேண்டாம் என சிறுமியை எச்சரித்துள்ளார்.
இதனால் சிறுமி சம்பவம் பற்றி எவருக்கும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
சிறுமியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு வந்ததை தொடர்ந்து பெற்றோர் விசாரித்த போது சிறுமி தனக்கு நேர்ந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
சிறுமி தற்போது கல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், வைத்திய பரிசோதனையில் சிறுமி கர்ப்பமுற்றிருப்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கல்பிட்டி பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முச்சக்கரவண்டி விபத்து - ஒருவா் வைத்தியசாலையில்
அம்பேவெலயிலிருந்து நோர்வூட் பிரதேசத்திற்கு பால் ஏற்றிச் சென்ற பௌஸருடன் டிக்கோயாவிலிருந்து, டிக்கோயா வைத்தியசாலைக்கு சென்ற முச்சக்கரவண்டி  மோதியதில் முச்சக்கரவண்டியின் சாரதி படுங்காயமேற்பட்டு டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா வனராஜா பகுதியில் வைத்து 04.09.2014 அன்று காலை 11 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் அதிக வேகமாக சென்ற முச்சக்கரவண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து பௌஸரில் மோதியுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேற்படி முச்சக்கரவண்டியில் பயணித்த ஏனைய இரண்டு பேருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லையென பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புகையிரதம் தடம் புரண்டதால் பயணிகள் சிரமம்
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற பொடி மெனிக்கே ரயில் தடம் புரண்டதால் பயணிகளுக்கு பல சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.
இங்குருஓயா கலபொட புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இந்த ரயில் தடம் புரண்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்தள்ளது.
04.09.2014 அன்று காலை 10.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தடம் புரண்ட புகையிரத்தை வழமைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவிக்கின்றது.
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் ரயில் அட்டன் புகையிரத நிலையத்திலும் கொழும்பிலிருந்து பதுளை நோக்கி செல்லும் ரயில் நாவலப்பிட்டி புகையிரத நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டு பயணிகளை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தில் ஏற்றிச்சென்று இரு புகையிரதத்திற்கும் மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTYKUjo4.html

Geen opmerkingen:

Een reactie posten