செல்வா எனப்படும் இன் நபர் அப்படி என்ன வார்தையை கூறி இப்படி அடிவாங்கினார் ?
[ Sep 04, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 10725 ]
செல்வா என்று அழைக்கப்படும் ரொபட்தாஸகே சந்திரதாஸ எனப்படும் இன் நபர், சமீபத்தில் வாரியபொல பகுதியில் யுவதி ஒருவரிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார். இதனை யாரோ வீடியோ எடுத்ததால் அது மீடியாக்களில் வெளியாகி பெரும் பரபரப்பை தோற்றுவித்தது. அடி வாங்கிய செல்வா ஏன் அடிவாங்கினார். அவர் அப்படி என்ன தான் கூறினார் ? குறித்த யுவதி கடை ஒன்றுக்குச் சென்று, மாத விடாய்க்கு தேவையான பொருட்களை வாங்கியுள்ளார். அங்கே வெட்டித்தனமாக நின்றிருந்த செல்வா , அப்பெண்ணை பின் தொடர்ந்து வந்து , மாத விடாய் தொடர்பாக எதோ நக்கல் அடித்துள்ளார். குறிப்பாக சில பெண்கள் இக்காலகட்டத்தில் மன அழுத்தத்தில் அல்லது பரபரப்பாக இருப்பார்கள்.
பெண்ணிடம் பேசக்கூடாத விடையத்தை, அதுவும் பேசக் கூடாத தருணத்தில் இவர் பேசித் தான் செமையாக வாங்கிக்கட்டிக்கொண்டார் என கொழும்பில் இருந்து வெளியாகும், கிசு கிசு செய்திகளை வெளியிடும் ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தேவையா ? அதன்பின் காது வலி எனக்கூறி, இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட யுவதி கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அதன்பின் யுவதி செய்த முறைப்பாட்டுக்கு அமைய இளைஞன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நேற்றைய தினம்(03) செல்வாவையும் பிணையில் செல்ல நீதவான் அனுமதித்துள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/933.htmlதமிழ் பெண்ணை சைட் அடித்துக்கொண்டு சென்ற சிங்கள சிப்பாய் வானுடன் மோதி மரணம் !
[ Sep 04, 2014 06:33:25 AM | வாசித்தோர் : 6475 ]
விபத்தில், குருநாகலை சேர்ந்த ஆர்.டி.சுமிந்தகுமார் (வயது 32) என்ற இராணுவ சிப்பாய், பலியாகியுள்ளார். இவர், கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்துடன் தொடர்புடைய வான் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் வானை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றதாகப் பொலிஸார் மேலும் கூறினார். ஆனால் வான் சாரதி , தனது வாகனத்தில் சிப்பாய் தான் வந்து மோதியதாக கூறியுள்ளார். மேலும் குறித்த சிப்பாய் வீதியில் சென்ற தமிழ் பெண்களை சைட் அடித்தபடி சென்றே விபத்தில் சிக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் தெரிவித்துள்ளார்கள்.
இருப்பினும் சிங்களப் பொலிசார் இதனை ஏற்க மறுத்துவிட்டார்கள். அவர்கள் வான் சாரதியை உடனடியாக கைதுசெய்து பொலிஸ் நிலையம் கொண்டுசென்றுவிட்டதாக, அதிர்வின் விசேட செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
100 கிராம் 200 கிராம் அல்ல 15KG கஞ்சாவை பாத்தது உண்டா ? இதோ யாழ்ப்பாணத்தில் !
[ Sep 04, 2014 06:43:10 AM | வாசித்தோர் : 6365 ]
பற்றைக்குள் கஞ்சா பொதியையொன்று இருப்பதை கண்ட கடற்படையினர், அதனை மீட்டு தம்மிடம் ஒப்படைத்ததாகப் பொலிஸார் கூறினர். இது தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லையெனவும் குறித்த கஞ்சா பொதி, கடல் வழியாக கொண்டு வரப்பட்டு, அவ்விடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர். இது வெறும் 100 கிராம் அல்லது 200 கிராம் கஞ்சா அல்ல. சுமார் 15 கிலோ எடையுடையது என்றால் எண்ணிப் பாருங்கள். இவை யாழில் வினியோகிக்கப்படவுள்ளதா ? இல்லை இங்கிருந்து வேறு இடம் எடுத்துச் செல்லப்படுகிறதா என்று தெரியவில்லை.
http://www.athirvu.com/newsdetail/938.html
Geen opmerkingen:
Een reactie posten