மகளிர் விவகார மற்றும் சிறுவர் அபிவிருத்தி தொடர்பிலான அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவிற்கு எதிராக 101 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நான்கு ஐந்து ஆண்களுடன் தொடர்புகளைப் பேணி வரும் மற்றும் பாலியல் தொழிலை சட்ட ரீதியாக்கக் கோரி வரும் சில பெண்கள் அங்கம் வகிக்கும் அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எனக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர் என அமைச்சர் கரலியத்த தெரிவித்துள்ளார்.
மொத்தமாக எனக்கு எதிராக 101 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மகளிர் விவகார மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சுப் பதவியை வகிப்பதற்கு எதிராகவே இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சு துறைசார் பணிகளை உரிய முறையில் மேற்கொண்டால் அதனை வகிப்பது ஆணா பெண்ணா என்பதில் சர்ச்சை கிடையாது.
அண்மையில் வெளிநாட்டு பெண் ஒருவர், உங்கள் நாட்டில் இந்தப் பதவியை வகிக்க பெண்களே இல்லையா என என்னிடம் கேட்டார்.
ஆண் ஒருவர் கேட்டிருந்தால் நான் நல்ல பதிலளித்திருப்பேன். பெண் என்பதனால் பொறுமையுடன் பதிலளித்தேன்.
எனது தாய் பெண், எனது ஏழு சகோதரிகளும் பெண்கள், எனது மகள்களும் மனைவியும் பெண்கள் என நான் குறிப்பிட்டேன்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சுற்றி பெருமளவிலான பெண்கள் இணைந்துள்ளார்.
பெண்களுக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு உண்மையில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நாரம்மலை நகரசபையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர்லு இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUkr7.html
Geen opmerkingen:
Een reactie posten