இலங்கையின் மனித உரிமை பிரச்சினையை, ஏனைய நாடுகளுடன் ஒத்துப்பார்ப்பது நீதியற்ற செயல் என அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க் டைம்ஸின் ஆசிரியர் தலையங்கத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கே அவர் தமது பதிலை வழங்கியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் சர்வதேச விசாரணையை தமது நாடு நிராகரித்தமைக்கு காரணம், ஐ.நா வரையறைக்கு அப்பாற்பட்ட நிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றமையே காரணம் என்று காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணை இலங்கையின் இறைமை மற்றும் சர்வதேச அடிப்படை சர்வதேச சட்டங்களை மீறுகின்றது.
ஏற்கனவே இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் அரசியல் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளநிலையில் இது அவசியமற்றது.
1931 ஆம் ஆண்டில் இருந்து ஜனநாயக வழியில் சென்றுக்கொண்டிருக்கும் நிலையில் போரின் பின்னர் வடக்கு மாகாணத்திலும் ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையின் மனித உரிமைகளை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுவது நீதியற்ற செயல் என்றும் பிரசாத் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று வருடங்களாக இலங்கையில் நிகழ்ந்த போரின் போது விடுதலைப்புலிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி கண்டன.
இதனால் இலங்கையின் அனைத்து மக்களும் பிரச்சினைகளை எதிர்நோக்கினர்.
தற்போது இலங்கையில் பொறுப்புக்கூறக்கூடிய பொறிமுறை ஒன்று வலுப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது ஐக்கிய நாடுகளின் விசாரணைகான முனைப்புகள் இதனை கேள்விக்குறியதாக்கி விடும் என்று பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUks0.html
Geen opmerkingen:
Een reactie posten