[ புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2014, 01:24.43 AM GMT ]
கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையிலேயே அவர் மரணமானார்.
75 வயதான முன்னாள் இராணுவ வீரரான அவர், ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டார் என்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே தமக்கு தாமே தீமூட்டிக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
தீமூட்டிக் கொண்ட அவர் உடலின் பெரும்பாலான பாகங்கள் எரியுண்ட நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
தீமூட்டிக் கொண்டதும் அவர் பொலிஸாருக்கு வெளிட்ட தகவலில் தாம் கொள்ளுப்பிட்டியில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாகவே தீமூட்டிக் கொள்ள ஆயத்தமானதாகவும், பொலிஸார் அங்கிருந்து செல்லுமாறு தம்மை விரட்டியமையால் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் தீமூட்டிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUksz.html
மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும்!
[ புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2014, 01:23.22 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் இரண்டு தடவைக்கு மேல் தேர்தலில் போட்டியிட முடியாது என வெளியிடப்படும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது.
எத்தனை தடவையும் பதவி வகிக்கக் கூடிய வகையில் அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டள்ளது.
ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைக்கு மேல் வகிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் அரசியல் அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாம் தடவையாகவும் ஜனாதிபதிப் பதவியை வகிப்பது அரசியல் அமைப்பிற்கு விரோதமானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளர்.
பெற்றி வீரக்கோன் முன்னாள் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாம் தடவையாக ஜனாதிபதி பதவியை வகிக்க முடியாது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச
ராஜபக்ச மற்றும் ஜே.வி.வி. உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுனில் வட்டகல ஆகியோர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUksy.html
மோடியைப் பயன்படுத்தி வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற சம்பந்தன் மேற்கொண்ட முயற்சி தோல்வி
[ புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2014, 12:33.51 AM GMT ]
நரேந்திர மோடியைப் பயன்படுத்தி வடக்கின் 15 படையணிகளை விலக்கிக்கொள்ள முயற்சிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் 5000 சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளதாகவும் படையினருக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சம்பந்தன், இந்தியப் பிரதமரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
கிண்ணியா வெந்நீர் ஊற்று பகுதியையும் அரசாங்கம் கைப்பற்றிக் கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இவை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு நரேந்திர மோடியிடம் கோரியுள்ளார்.
அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வரும் ஊடகமொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUkr5.html
Geen opmerkingen:
Een reactie posten