யாழ்ப்பாணத்தில நாளுக்கு நாள் விபத்துக்கள் பெருகி உயிர்ப் பலி அதிகமாகிக் கொண்டு போகுது. யாழ்ப்பாணம் மட்டுமல்ல வடபகுதி எங்கும் இப்படி ஏராளமான விபத்துக்கள் நடக்குது.
இந்த விபத்துக்களுக்கு காரணம் என்ன ? என்பது பற்ற கனபேர் யோசிச்சுக் கொண்டு இருக்கினம். ஆனால் யோசிக்க வேண்டிய பொலிசுக்காரா் பேசாமல் இருக்கினம்.
இதைப் பற்றி ஒருக்கா தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காரா்களுக்கு போட்டுக் கொடுக்க வேணும். அவா்களுக்கு அரசாங்கத்தைப் பற்றி எதிராப் பேசுவதற்கு நல்ல ஒரு பொயின்ஸ் எடுத்துக் கொடுக்க இது ஒரு சந்தா்ப்பம்.
எங்கட முதலமைச்சா் விக்கி ஐயா பிறகு வெளிநாட்டு துாதுவா்களுக்கு இதையும் வடிவாச் சொல்லுவார். அதாவது அரசாங்கம் திட்டமிட்ட முறையில இன அழிப்பை இப்பவும் நடாத்திக் கொண்டுதான் இருக்குது.
வடக்கில இருக்கிற றோட்டுகளை வடிவாப் புனரமைத்துக் கொடுத்து இளைஞா், யுவதிகளை அந்த றோட்டில வேகமா ஓட விட்டு வேடிக்கை பார்த்து விபத்தை ஏற்படுத்தி கொலை செய்யுது.பொலிசுக்காரா்களை றோட்டுப் பக்கம் தலை காட்டாமல் கட்டுப்படுத்தி வைத்திருக்குது. சாகிறது தமிழ் இளம் சமுதாயம் தானே என நினைக்குது.
தென்னிலைங்கையில இருந்து வந்த வாகனக் கம்பனிகள் லீசிங் முறையில வாகனத்தை விற்பதற்கு வழி வகுத்து எல்லா இளைஞா்களுக்கும் ஏதோ ஒரு முறையில வாகனத்தை வாங்கிக் கொடுத்து சவாரி பண்ணச் செய்து கொலை செய்யுது என்டு எடுத்து விடுவார் வெளிநாட்டுத் துாதுவா்களுக்கு…….. இதுலயும் அரசியல் செய்யிறதுக்கு எங்கட ஆக்கள் தயாராத் தான் இருப்பினம்.
சரி எனி விசயத்துக்கு வருவம்.
அந்தக் காலத்தில் சைக்கிள் ஓடப் பழகும் போது என்ர அப்பா எனக்கு அடிக்கிற அடி இப்பவும் ஞாபகத்திற்கு வருகுது. சைக்கிளின் மேல் பார் கூட எனக்கு எட்டாத நிலை. பெடல் கட்கைகள் இரண்டையும் பாருக்குக் கீழால் கால்களை செருகி தெத்தித் தெத்தி ஓடிய காலம். அப்பாட கண்ணுக்கு முன் நின்டுதான் கெஞ்சிக் கூத்தாடி ஒரு பழைய துருப்புடித்த சைக்கிளை வாங்கி தெத்தித் தெத்தி ஓடினது இப்பவும் நினைவில இருக்கு.
ஆனால் இப்போ 15 வயது வந்து குமராக வந்த பெட்டைகள் எல்லாம் தங்கட தொடைகளுக்குள் மோட்டச்சைக்கியிக்கிளைச் செருக்கிப் போடுவாளவை. ஆனால் யாழ்ப்பாணத்தில நடக்கிற பெரும்பாலான விபத்துக்களில் சிக்கிச் சின்னாபின்னமாகிறவை யார் என்டு பார்த்தால் ஆம்பிளைகளாத்தான் இருக்கும். இதுக்குக் காரணம் என்ன.
வீட்டுக்குப் போடுற சோட்டி ( இதுக்கு தமிழ், இங்கிலிசு என்ன என்டு தெரியாது. ) நைட்டிகளுடன் பிளசா்களிலையும், ஸ்கூடிகளிலையும் குமரிகளும் கிழடிகளும் திரிய அந்த அழகைப் பார்க்கிற ஆம்பிளைகள் அட்சிடன் ஆகாமல் என்ன செய்வினம்.
தன்ர புருசனுக்கு காட்டாத கால்களின் அடிப் பகுதிகளை எல்லாம் றோட்டில போற வாற பெடியலுக்கு காட்டுறதுக்கு அவளுகளுக்கு இருக்கிற சந்தோசம் யாருக்கும் இல்ல. அரைப் பாவாடை சட்டையைப் போட்டுக் கொண்டு பிளசரில ஏறினாளவையென்டால் அதன் பின்னா் பாவாடை பறக்குதோ, சிரிக்குதோ என்டு கூடப் பாக்க மாட்டாளவை. இப்படிப் போற பொம்பிளைப் பிள்ளைகளின் மானத்தைக் காப்பது பெரும்பாலும் மோட்டார் சைக்கிளின் முன் பகுதி இறக்கைகள் தான்.
நல்லுாரடியில் நான் கொஞ்சப் பேருடன் நின்டு கதைக்கும் போது என்னைப் போல வயசான ஒன்டு சொல்லுது பொம்பிளைகளின் மோட்டார்சைக்கிள்களுக்கு செட்டை வைக்காவிட்டால் எப்புடி நல்லா இருக்கும் என்டு. சத்தியமாச் சொல்லுறன் பாருங்கோ.. நான் ஒரு நல்ல ஆள்தான். ஆனால் றோட்டால பொம்பிளைப் பிள்ளை ஒன்டு பிளசா்ல போகேக்க என்ர கண்ணும் அவளிட கால்களுக்குக் கீழ தான் பாக்குது. சயிற் பக்கமா பாக்குறதுக்கே பொம்பிளைப் பிள்ளைகளின் அடித் தொடை வரை தெரியுது என்டால் செட்டை இல்லாத மோட்டார் சைக்கிள் ஓடினால் எப்படி இருக்கும்.
யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில மோட்டச்சயி்க்கிள் அட்சிடன்டில வந்து கிடக்கிற பெடியலைக் கேட்டுப் பாருங்கோ. எப்புடி தம்பி நீ விழுந்தனி என்டு. ஒன்றில் அவன் சொல்லுவான் நாய் குறுக்க போச்சுது என்டு. இல்லாடி ஒரு பெட்டை குறுக்க வந்துட்டுது என்டு சொல்லுவான். அப்புடி போட்டுது யாழ்ப்பாணத்து விபத்துக்களின் நிலை.
பொடிப்பிள்ளைகளும் சும்மா இருக்க மாட்டினம். முன்னுக்கு ஸ்கூட்டியில ஒரு பொம்பிளைப் பிள்ளை போனால் எப்பிடியும் அவளை முந்திப் போடவேண்டும் என்டு பறந்து போய் கவிண்டு கிடப்பினம். இது பொடியலுக்கு மாத்திரம் இல்லை. மோட்டார் சைக்கிள் ஓடுற எல்லா ஆம்பிளைகளுக்கும் இந்தக் குணம் இருக்கு….அப்புடி முந்தா விட்டால் ஒரு ஆண்மைப் பிரச்சனை போல் இருக்கும் .
பெட்டை ஒன்டு குறுக்கால மோட்டச்சயிக்கிளை விட்டால் அதுக்குப் போய் ஆப்பிளைகள் இடிக்க மாட்டினம். அந்தப் பெட்டையைக் காப்பாற்ற நினைத்து மதிலிலும் அல்லது மற்றப் பக்கம் போற இன்னொரு அப்பாவி ஆம்பிளையிட சைக்கிளுக்குள்ளும் போய்தான் ஓட்டுவினம். ஏன் என்டால் குறுக்க விட்டது பெட்டையல்லவோ!! அவளவை கெல்மட்டைத் துாக்கி ஒருக்காப் பார்த்து விட்டு ”சொறி” என்டு போட்டுப் போயிடுவாளவை. இங்க அடிபடுறது இரண்டு ஆப்பிளைகளாத்தான் இருக்கும்.
முந்தி சண்டை நடக்கிற காலத்தில றோட்டில தலையில சூட்டுக் காயத்தோட பல சடலங்களைப் பார்க்கும் போது வயத்தைக் கலக்கிக் கொண்டு வரும். இப்ப வாகன விபத்துக்களைப் பார்க்க வயுத்தைக் கலக்குது. ஒவ்வொரு டிப்பா் வாகனமும் ஒரு சுப்பா் சொனிக், கிபிர் ஜெற் போல தெரியிது. எப்ப எதுக்க கொண்டு வந்து செருகுவாங்கள் என்டு தெரியாமல் இருக்குது.
ஒரு புள்ளையைப் பெத்து வளா்த்து ஆளாக்கி பாசத்தைக் கொடுத்துப் பராமரித்துப் பார்க்கிற அப்பன், ஆத்தாள்கள் எல்லாம் அதுகளுக்கு கவட்டுக்குள்ள வைக்கிறதுக்கு ஒரு மோட்டச் சயிக்கிளும் வாங்கிக் கொடுத்து யமனை உடனடியாகவே அழைக்கப் பார்க்குதுகள்.
வெளிநாட்டுகளில இருக்கிற எல்லா புலம்பெயா் உறவுகளுக்கும் இது சமா்ப்பணம். சொல்லுறது எல்லாத்தையும் நல்ல நாகரீக வார்த்தைகளால் இங்கே சொல்லிப் போட்டன். இனியும் உங்கட புள்ளைகள், பொஞ்சாதிமார், புருசன்மாரை றோட்டில ஒழுங்கா ஓடச் சொல்லுங்கள். இல்லாட்டி இந்த இணையத்தளத்தில முகத்தோட போட வேண்டிய நிலைமையை உருவாக்க வேண்டிய தேவை ஏற்படும்.
யாழ்ப்பானத் தம்பி

Geen opmerkingen:
Een reactie posten