தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 11 september 2014

போகுற்றங்கள் நடந்ததை சொல்லக்கூடிய தமிழர்களை நாடுகடத்த தயாராக நிற்கும் விமானம் !

இலங்கை இனப்படுகொலை அரசிற்கு எதிராகச போர்க்குற்ற விசாரணை செய்யப்போவதாக, நாடகமாடும் பிரித்தானிய அரசு கோத்தாபயவின் தனியார் இராணுவத்திற்கு ஆயுதங்களை விற்பனை செய்ததும் இராணுவப் பயிற்சிகளை வழங்குவதும் அறிந்ததே. அதே வேளை பிரித்தானியாவிலிருந்து அகதிககளாக அங்கீகரிக்கக் கோரிய தமிழர்களை இலங்கையை நோக்கித் திருப்பியனுப்புவதாகத் தெரியவருகிறது. ஒரு புறம் ஐ.நா விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துக்கொண்டு, மறுபுறம் இனக்கொலை அரசின் துன்புறுத்தலிருந்து தப்பிவந்து போர்க்குற்ற சாட்சியமளிக்கும் தகமையுள்ள அரசியல் அகதிகளைத் திருப்பி அனுப்புவது திட்டமிட்ட செயலா என அச்சம் தருகிறது.
கொலையாளிகளிடம் கொலைசெய்வதற்கான ஆயுதங்களை வழங்கி அவர்களை நோக்கி அகதிகளையும் அனுப்பி வைக்கும் நாடகம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. பி.பி.சி சிங்கள சேவையின் ஊடகவியலாளர் சரோஜ் பத்திரனவின் ரிவிட்டரில் அகதிகளைத் திருப்பியனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார். பெரும்தொகையான அகதிகளைத் திருப்பியனுப்பும் நோக்குடன் வாடகை விமானம் ஒன்றை பிரித்தானிய குடிவரவுப் போலிஸ் அமர்த்தியுள்ளதாக அவர் தனது ரிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஐ.நா விசாராணைக்கு சாட்சிகளைத் திரட்டும் இவ்வேளையில் சாட்சிகளை அழிப்பதற்கான திட்டமிட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியா இது என்ற சந்தேகங்கள் எழுகின்றன. புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இதற்கு எதிரான போராட்டத்தை நடத்த முற்படாவிட்டால் அவர்கள் நம்பகத்தன்மையை இழந்தவர்கள் ஆகிவிடுவார்கள். பிரித்தானிய அரசின் கொல்லைப்புறத்தில் குடியிருப்பதாகக் கூறும் புலம்பெயர் அமைப்புக்கள் தமது சொந்த அகதிகள் இனக்கொலையாளிகளின், கைகளில் ஒப்படைக்கப்படுவதை நிறுத்த குரல்கொடுக்கவில்லையானால் அவர்களை அரசியல் நீக்கம் செய்க்கோருவதில் தவறிருக்க முடியாது.
http://www.athirvu.com/newsdetail/981.html

Geen opmerkingen:

Een reactie posten