தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 13 september 2014

சென்னையில் கைதான பாக்கிஸ்தான் உளவாளிக்கு "புலிகள் "சாயம் பூச சிங்கள ஊடகங்கள் முயற்ச்சி !

சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானிய உளவாளி ஒர் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் என, கொழும்பு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அண்மையில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவுப் பிரிவின் சார்பில் உளவுப் பணிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்திய தேசிய விசாரணை முகவர் நிறுவன அதிகாரிகள் குறித்த இலங்கையரை கைது செய்திருந்தனர். அருண் செல்வராஜன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.
இவர் குறித்த விசாரணைகளை இந்திய தேசிய புலனாய்வு நிறுவனங்கள் தீவிரமாக முன்னெடுத்துள்ளன. எனினும் இது வரை அருண் செல்வராஜனின் பூர்வீகம் குறித்தோ அல்லது அவரது முழுமையான பின்னணி குறித்தோ இந்திய தமிழக அரசாங்கங்கள் மற்றும் புலனாய்வு மையங்கள் எந்த தகவல்களையும் வெளியிட்டு இருக்கவில்லை. இது குறித்து தமிழகத்தின் முக்கிய ஊடகவியலாளர் ஒருவரை கொண்டு விசாரித்த போது அருண் செல்வராஜனுக்கும் முன்னாள் இன்னாள் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக இந்தியாவின் எந்த ஊடகங்களும் தகவல்களை வெளியிடவில்லை எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் கொழும்பின் ஊடகங்கள் அருண் செல்வராஜனை தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என, உறுதியாகக் கூறுவதன் பின்னணியில் இலங்கை பாதுகாப்பு அமைச்சும் புலனாய்வுப் பிரிவும் முக்கிய பங்கு வகிக்கலாம் என்ற சந்தேகத்தை வெளியிட்டு உள்ளார். இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் புலனாய்வு மையங்கள் பாகிஸ்தானுடன் நெருங்கிப் பணியாற்றுவதும், அதன் பின்னணியில் அருண் செல்வராஜனுக்கும் இலங்கைப் புலனாய்வு மட்டங்களுக்கும் உள்ள தொடர்பு இருக்கும் பட்சத்தில் அதனை திசைதிருப்புவதற்கான நடவடிக்கையாக இந்த செய்திகள் அமையலாம் எனவும் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு அவர் தெரிவித்தார்.
http://www.athirvu.com/newsdetail/987.html

Geen opmerkingen:

Een reactie posten