தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 8 september 2014

புகலிடக் கோரிக்கையாளர் விடயத்தில் அவுஸ்.மனித உரிமையை மீறுகிறது: செய்ட் அல் ஹுசைன் குற்றச்சாட்டு!

மாவை நெகிழ்வான போக்கைக் கொண்டவர்: பிரபா கணேசனின் வாழ்த்துச் செய்தி
[ திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2014, 04:44.06 PM GMT ]
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்ட யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கொழும்பு மாவட்ட மக்கள் சார்பாகவும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் சார்பாகவும் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்துச் செய்தியில்,
பெரியவர் மாவை சேனாதிராஜா நெகிழ்வான போக்கைக் கொண்டவர். இந்த நெகிழ்வான போக்கினால் பலவிதமான வெற்றிகளையும் கண்டவர் அவர்.
இப்படியான ஒருவருக்கு தமிழரசுக் கட்டியின் தலைமைப் பதவி கிடைத்திருப்பது வடபகுதி மக்கள் செய்த அதிஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.
தமிழரசுக் கட்டியின் தலைமைத்துவம் என்பது சர்வதேச ரீதியாக மட்டுமல்ல, இந்நாட்டின் இன்றைய இன பிரச்சினை தீர்வில் முக்கியமான கட்டமுமாகும். அவருக்கு இந்த தலைமைத்துவத்தை ஏற்று நடத்துவதற்கான அத்தனை தகுதிகளும் பண்பும் உண்டு என்று நான் நினைக்கின்றேன்.
பதவியேற்றவுடனேயே உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக சாத்வீக முறையில் போராடப் போவதாக அறிவித்துள்ளார். இது வரவேற்க வேண்டிய ஒரு விடயமாகும்.
அதே நேரம் சாத்வீகத்தோடு கொஞ்சம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையையும் சேர்த்துக் கொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.
விட்டுக் கொடுப்பதால் ஒன்றும் கெட்டுப் போவதில்லை என்பது மாவைக்கு நன்றாகத் தெரியும். இதனால் வட பகுதி மக்கள் மேலும் பலவிதமான நன்மைகளை அடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTcKUhrz.html

அவுஸ்திரேலிய நூதனசாலையில் இலங்கை அகதிகளின் படகு
[ திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2014, 04:55.59 PM GMT ]
இலங்கை அகதிகளை கடந்த வருடம் அவுஸ்திரேலியாவுக்கு ஏற்றிவந்த மரங்களால் செய்யப்பட்ட படகு ஒன்று மேற்கு அவுஸ்திரேலிய நூதனசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை அகதிகள் 66 பேரை ஏற்றி வந்த இந்த படகு கடந்த வருடம் ஏப்ரல் 9 ஆம் திகதி வடக்கு பேர்த்தை சென்றடைந்தது.
இந்த படகு எல்லைப் படையினரின் கண்காணிப்புக்கு அப்பால் எவ்வாறு சுறுசுறுப்பான கெரால்டன் துறைமுகத்துக்கு வந்தது என்பது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் குறித்த படகை பாதுகாக்க முடியாமையை தொடர்ந்து அதனை நூதனசாலைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTcKUhr0.html

புகலிடக் கோரிக்கையாளர் விடயத்தில் அவுஸ்.மனித உரிமையை மீறுகிறது: செய்ட் அல் ஹுசைன் குற்றச்சாட்டு
[ திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2014, 07:57.11 PM GMT ]
அவுஸ்திரேலியாவில் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை கையாளும் விதமானது தொடர்ச்சியான மனித உரிமை மீறல்களாக அமைந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இளவரசர் செய்ட் அல் ஹுசைன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்களை வசதிகள் இல்லாத நாடுகளில் குடியமர்த்துவதற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கும் திட்டத்தையும் அவர் சாவாலுக்குட்படுத்தியுள்ளார். 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளராகப் பொறுப்பேற்ற பின்னர் ஆரம்பித்திருக்கும் முதலாவது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான அவுஸ்திரேலியாவின் கொள்கையானது மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கக் கூடியது என்பதுடன், பலவந்தமாக தடுத்துவைப்பது மற்றும் அவர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்பிவைக்கும்போது அவர்கள் வதைகளுக்கு உள்ளாகக் கூடிய அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை என்பது வீசா அனுமதி பெற்ற நபர்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதொன்றல்ல. அனைத்துத் தரப்பினருக்கும் மனித உரிமைகள் உள்ளன என்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.


http://www.tamilwin.com/show-RUmsyJTcKUhr1.html

Geen opmerkingen:

Een reactie posten