தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 10 september 2014

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை: இந்தியா!

ஆசியத் தலைவர்களின் வருகையால் மேற்குலக நாடுகளின் பார்வையிலிருந்து தப்புமா இலங்கை?
[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 12:17.18 AM GMT ]
உலகத் தலைவர்களின் விஜயமானது இலங்கை தொடர்பான மேற்குலக நாடுகளின் பார்வையிலிருந்து விடுபடுவதற்கு வழிவகுத்திருப்பதாக பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
ஜப்பான் பிரதமர் இலங்கை வந்து சென்றுள்ளார். அடுத்து சீன ஜனாதிபதி வரவுள்ளார்.
உலகில் பொருளாதார ரீதியில் பலம்மிக்க நாடுகளின் தலைவர்களின் இலங்கை விஜயமானது நாடு தொடர்பாக மேற்குலக நாடுகள் கொண்டிருக்கும் பார்வையிலிருந்து விடுபடுவதற்கு வழிவகுத்துள்ளது.
இலங்கை தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற போதும் அவற்றை மாற்றியமைக்கும் வகையிலேயே இந்த உலகத் தலைவர்களின் இலங்கை விஜயம் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பான் பிரதமரின் இலங்கை விஜயமானது பொருளாதார ரீதியில் மாத்திரமன்றி நாட்டுக்கு பல்வேறு வகையில் உறுதுணையாக அமைந்துள்ளது. இவ்வாறான உலகத் தலைவர்களின் விஜயமானது நாட்டுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இந்த விஜயங்களை விமர்சிப்பவர்கள் சற்றுச் சிந்திக்க வேண்டும். வீணான விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கு ஊவா மாகாண சபைத் தேர்தலில் மக்கள் நல்லதொரு தீர்ப்பை வழங்குவார்கள்.
தேர்தல்களை நடத்தி மக்களின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட்டு வருவதாக தெரிவித்தள்ளார்.
இதனாலேயே வடமாகாண சபைக்கான தேர்தலையும் அரசு நடத்தியிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கு ஆட்சியைக் கைப்பற்றியதும் பலர் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். ஆனால் தற்போது வடமாகாணசபையின் செயற்பாடுகள் மங்கிய நிலையிலேயே காணப்படுகிறது என்றார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இந்த கருத்துக்களை முன்வைத்தார்.
ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சி பாரிய வெற்றியீட்டும்
ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சி பாரிய வெற்றியீட்டும் என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் தெரிவித்துள்ளார்.
நாடு போரினால் பாரியளவு பாதிப்புக்களை எதிர்நோக்கியது. போரினால் ஏற்பட்ட பாதிப்புக்களை சரி செய்வதற்கு வலுவான ஓர் அடித்தளம் இடப்பட வேண்டும் என்பதனை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
அரிசி இறக்குமதி குறைக்கப்பட்டுள்ளதனால் விவசாயிகள் நன்மை அடைந்துள்ளனர்.
வீதிகள் பெருந்தெருக்கள் நாட்டின் முதுகெலும்பாக கருதப்பட முடியும். வீதிகளின் ஊடாகவே உற்பத்திகளை போக்குவரத்து செய்ய முடியும்.
இதன் மூலம் அதிகளவு பயனை வடக்கு கிழக்கு மக்களே அனுபவிக்கின்றனர் என அவர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUhv7.html
மக்களை பாதுகாக்க வேண்டுமாயின் ராஜபக்ச அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும்: ரணில்
[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 12:53.59 AM GMT ]
மக்களை பாதுகாக்க வேண்டுமாயின் ராஜபக்ச அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் விவசாயிகள், இளைஞர் யுவதிகள், மத்திய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என சமூகத்தின் பல்வேறு மட்டத்தைச் சேர்ந்தவர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
இலங்கையின் அடையாளத்தை உறுதி செய்து அனைத்து இன மக்களையும் சமமாக நடத்தும் ஆற்றல் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மட்டுமே உண்டு.
ராஜபக்ச விரோத சக்திகளை ஒன்று திரட்டி ராஜபக்ச அரசாங்கத்தை விரட்டியடிப்போம்.
புதிய அரசாங்கமொன்றின் கீழ் மக்களுக்கு நன்மைகளை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் வைத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை நேற்று பெற்றுக் கொண்டார்.
அதன் போதே ரணில் விக்ரமசிங்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
புத்தளம் நகரசபையின் முன்னாள் நகரசபைத் தலைவரும் தற்போதைய நகரசபை உறுப்பினருமான எம்.நிசார்மொஹமட் நஸ்மீ என்பவரே இவ்வாறு ஆளும் கட்சியிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUhwy.html
போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும்: ஜே.சிறிரங்கா
[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 01:16.50 AM GMT ]
போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சிறிரங்கா தெரிவித்துள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட ஜப்பான் எவ்வாறு அபிவிருத்தி செய்யப்பட்டதோ அதேபோன்று, இலங்கையிலும் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு போன்ற பிரதேசங்கள் இன்னமும் உரிய அபிவிருத்தி இலக்குகளை எட்டவில்லை.
போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்யாது மக்களை அபிவிருத்தி செய்ய முடியாது.
நீதி அமைச்சர் காணி உரிமைகள் தொடர்பில் எதேச்சாதிகார சட்டமொன்றை அமுல்படுத்த முயற்சிக்கின்றார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
நுவரெலியா, பதுளை போன்ற பிரதேசங்களில் 70 வீதமான காணிகள் அரசாங்கத்திற்கு சொந்தமானவை.
இங்கு வாழும் மக்களுக்கு பத்து பேர்சஸ் காணியேனும் வழங்கப்பட வேண்டுமென குறித்த பிரதேசங்களை பிரதிநிதித்துவம் செய்யும் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் கோருதில்லை என சிறிரங்கா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்று நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUhwz.html
இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை: இந்தியா
[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 01:37.48 AM GMT ]
இலங்கைக்கு எதிரான விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது, இந்திய பிரதிநிதி இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போர் குற்றச் செயல் விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என இந்திய பிரதிநிதி அறிவித்துள்ளார்.
போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் உள்ளக ரீதியான விசாரணைகளே நடத்தப்பட வேண்டும். அந்த விசாரணைகளுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம்.
கடந்த அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானத்தின் அடிப்படையில் புதிய ஆணையாளர் செயட் அல் ஹூசெய்ன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய பிரதிநிதி கோரியுள்ளதாக சிங்களப் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUhw0.html

Geen opmerkingen:

Een reactie posten