[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 08:26.00 PM GMT ]
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மொனராகல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை மின்சார சபைக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடைக்கால தடை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் என்றும் இல்லாதவாறு உறவுகள் பலப்பட்டுள்ளன.
பயங்கரவாதம் தொடர்பிலான சகல அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்கும் ஆற்றல் இலங்கையில் காணப்படுகின்றது.
அல் கொய்தா இயக்கம் ஓர் பயங்கரவாத அமைப்பு என்பதனை இந்த உலகமே அறியும். தென் ஆசிய நாடுகளில் ஊடுருவப் போவதாக அறிக்கைகள் வெளியிட்டிருந்தன.
நாட்டின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் தெளிவான தந்திரோபாயத் திட்டங்களை வகுத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சு இந்த தந்திராபயத் திட்டங்களை அமுல்படுத்துகின்றது.
எந்தவொரு பயங்கரவாத அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல் இலங்கை இராணுவத்திடம் காணப்படுகின்றது. உள்நாட்டு வெளிநாட்டு ரீதியான பயங்கரவாத அழுத்தங்களை எதிர்நோக்க இலங்கை எப்போதும் தயார்.
ஆனாலும் இலங்கையில் அல் கொய்தா அச்சுறுத்தல்கள் ஏற்படக் கூடிய வாய்புக்கள் குறைவு என ருவான் வணிகசூரிய பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUgq4.html
மொனராகல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திடீர் இடமாற்றம்?
[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 11:48.31 PM GMT ]
மொனராகல பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக எச்.ஜீ.டபிள்யூ.எல். தேசப்பிரிய இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசப்பிரிய இதுவரையில் தபகல்ல பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மொனராகல பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்த எம்.ஏ.பீ. அபேரட்ன, தம்பகல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
என்ன காரணத்திற்காக தேர்தல் காலத்தில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார் என்பது தெளிவாகவில்லை.
தேர்தல் நடைபெறும் காலங்களில் பொதுவாக இவ்வாறான இடமாற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அமைதியான முறையில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோன், தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் உறுதியளித்துள்ளார்.
தேர்தல் வன்முறைகளைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUgq5.html
நுரைச்சோலை அனல் மின்சார நிலையத்துக்கு எதிரான மனு தாக்கல்
[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 11:56.10 PM GMT ]
புத்தளம் வாவியின் ஊடாக இலங்கை மின்சார சபை மேற்கொள்ளவுள்ள மின்சார பரிமாற்ற பணிகளை நிறுத்தக்கோரி, அந்தப் பகுதி மீனவர்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை மின்சாரசபை எடுத்துள்ள இந்த தீர்மானத்துக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
புத்தளம் வாவியின் மூலம் 1500- 2000 குடும்பங்கள் பயன்பெறுகின்றன.
இலங்கை மின்சாரசபையின் புதிய திட்டத்தின் காரணமாக, அந்தப் பகுதியில் வாழும் குடும்பங்கள் பாதிப்பை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
நுரைச்சோலை அனல் மின்சார நிலையத்தில் இருந்து அநுராதபுரத்துக்கான மின்சார இணைப்புத்திட்டத்தையே இலங்கை மின்சார சபை, புத்தளம் வாவியின் ஊடாக மேற்கொள்ளவுள்ளது
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUgq6.html
சீனாவை பகைத்துக்கொள்ளும் வகையில் இலங்கை - ஜப்பான் உறவில் நெருக்கம்
[ வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2014, 12:04.26 AM GMT ]
இந்தநிலையில் ஜப்பானுக்கு எதிரான சீனா மேற்கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில், ஜப்பானுக்கு இலங்கை தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.
கிழக்கு சீன கடலில் வான் மற்றும் கடல்பகுதி பயணங்களுக்கு சீனா ஏனைய நாடுகளுக்கு கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி வருகிறது.
இதன்காரணமாக ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையில் முறுகல் நிலவி வருகிறது.
இந்தநிலையில் அண்மையில் இலங்கைக்கு ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே விஜயம் மேற்கொண்ட போது, இலங்கையும் ஜப்பானும் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டன.
அந்த அறிக்கையில், கிழக்கு சீனக் கடல் பகுதியில் சுதந்திரமான நடமாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று இரண்டு நாடுகளும் இணக்கம் வெளியிட்டுள்ளன.
இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்துக்கொள்வதற்காகவும் அதன் வர்த்கத்தை பெருபிக்கும் வகையிலேயே இலங்கை இந்த விடயத்தில் ஜப்பானுடன் இணைந்த நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJSVKUgq7.html
Geen opmerkingen:
Een reactie posten