வணக்கம்! JVP NEWS
நான் உங்களுடைய வாசகர்களில் ஒருவர்
தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகம் யாழ்ப்பாணம் எனும் பெயர் பலகையை வெளியே போட்டு விட்டு, உள்ளே நடப்பது என்ன? சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு லேணர்ஸ் க்குப் போனால், அவர்கள் மெடிக்கல் எடுக்க வேண்டும் என்று சுலபமாக சொல்லி விடுவார்கள்.
ஆனால் மெடிக்கல் எடுக்க, தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகம் யாழ்ப்பாணம் போனால் அங்கே வேலை செய்யும் ஊழியர்களின் கதைகளும், அவர்கள் கேட்கும் கேள்விகளும், வைத்தியர் இரத்தம் பரிசோதிப்பதற்கு குத்தும் வலியை விட பல மடங்காக உள்ளது. இன்று நான் நேரில் கண்ட சம்பவம் ஒன்று இங்கே…
மெடிக்கல் எடுக்க வருபவர்களில் பெண்களே அதிகமானவர்கள், இவர்கள் உள்ளே சென்று தங்களுடைய விபரங்களை பதிவு செய்த பின் புகைப்படம் எடுக்க அனுப்புகின்றனர், படம் எடுத்த பின் உடல் நிறையை அளக்க அனுப்புகின்றனர். அங்கே தான் பெண்களுக்கு கொடுமை நடக்கின்றது. அந்த இடத்திலே தேவைக்கு அதிகமாக 3 ஆண்கள்.
முதலில் 2,3 ஆண்கள் நிறை அளக்க வந்தார்கள் அவர்களிடம் எது வித பேச்சும் இன்றி தங்களுடைய வேலையை செய்கின்றார்கள் அந்த 3 ஆண்களும். பின்பு ஒரு பெண் வருகிறார் அவருக்கு ஒரு 24,25 வயது இருக்கும். அவரிடம் நிறை அளப்பவர் கேட்ட கேள்விகள்
1.நீங்கள் எந்த இடம்?
2.உங்களிடம் போண் இருக்கா?
3.உங்கள் நம்பறை தாங்க?
உடனே அந்த பெண்;- ஏன் இதெல்லாம் கேட்குறிங்க?
ஆண்;- உங்களுக்கு மெடிக்கல் வேண்டாமா?
பெண்;- வேணும்
ஆண்;- அப்போ நம்பறை தாங்க
பெண் நம்பரை கொடுத்து விட்டு வெளியெ வந்து அவர்களை திட்டிய வார்த்தைகள் கொஞ்சம் இல்லை. நான் அந்த பெண்னைப் பார்த்து நம்பரை கொடுத்து விட்டு இப்ப ஏன் திட்டுகிறீங்கள் என்று கேட்டேன் அதற்கு அந்த பெண் தலையை குனிந்து கொண்டு “என்ன செய்வது மெடிக்கல் எடுக்க வேண்டும்” என்று சொன்னார்.
1.நீங்கள் எந்த இடம்?
2.உங்களிடம் போண் இருக்கா?
3.உங்கள் நம்பறை தாங்க?
உடனே அந்த பெண்;- ஏன் இதெல்லாம் கேட்குறிங்க?
ஆண்;- உங்களுக்கு மெடிக்கல் வேண்டாமா?
பெண்;- வேணும்
ஆண்;- அப்போ நம்பறை தாங்க
பெண் நம்பரை கொடுத்து விட்டு வெளியெ வந்து அவர்களை திட்டிய வார்த்தைகள் கொஞ்சம் இல்லை. நான் அந்த பெண்னைப் பார்த்து நம்பரை கொடுத்து விட்டு இப்ப ஏன் திட்டுகிறீங்கள் என்று கேட்டேன் அதற்கு அந்த பெண் தலையை குனிந்து கொண்டு “என்ன செய்வது மெடிக்கல் எடுக்க வேண்டும்” என்று சொன்னார்.
2வது பெண் வருகிரார் இவர் திருமணமானவர், நிறை அளப்பதற்கு பாதணியை களற்றுகிறார்.
அவரிடம் நிறை அளப்பவர் கேட்ட கேள்விகள்
1.ஏன் செருப்பை கழற்ரினீர்கள்?
2.நீங்கள் எந்த இடம்?
3.திருமணம் முடித்து விட்டீர்களா?
4.கணவர் வெளிநாட்டிலயா?
5.இரவில் எப்படி தனியே தூங்குவீர்கள்?
6.உங்கள் போண் நம்பறை தாங்க?
உடனே அந்த பெண்;- ஏன் இதெல்லாம் கேட்குறிங்க?
ஆண்;- உங்களுக்கு மெடிக்கல் வேண்டாமா?
பெண்;- வேணும்
ஆண்;- அப்போ நம்பறை தாங்க
அவரிடம் நிறை அளப்பவர் கேட்ட கேள்விகள்
1.ஏன் செருப்பை கழற்ரினீர்கள்?
2.நீங்கள் எந்த இடம்?
3.திருமணம் முடித்து விட்டீர்களா?
4.கணவர் வெளிநாட்டிலயா?
5.இரவில் எப்படி தனியே தூங்குவீர்கள்?
6.உங்கள் போண் நம்பறை தாங்க?
உடனே அந்த பெண்;- ஏன் இதெல்லாம் கேட்குறிங்க?
ஆண்;- உங்களுக்கு மெடிக்கல் வேண்டாமா?
பெண்;- வேணும்
ஆண்;- அப்போ நம்பறை தாங்க
இதற்கிடையில் முதலிலே அந்த பெண் செருப்பை கழற்றுவதை பார்த்த நிறை அழப்பவர் அருகில் இருக்கும் உதவியாளரிடம் “உடுப்பையும் கழற்றி விட்டு வந்தால் நல்லம்” என்று சிங்கள மொழியிலே சொல்கிறார். இதை விட காதால் கேட்க முடியாத வார்த்தைகளை எல்லாம் அவர்கள் சிங்களத்திலே கதைக்கின்றார்கள். இந்த விடயம் எல்லாம் வைத்தியருக்கும் தெரியுமா? அல்லது தெரிந்தும் தெரியாமல் இருக்கின்றார என்பது தான் கேள்விக்குறி?
இங்கே வருகின்ற பெண்கள் எந்த வருத்தம் இல்லாமல் வந்தாலும், போகும் போது மன வருத்தத்துடன் போகின்ரார்கள். இப்படியே போனால் நமது அக்கா, தங்கையின் நிலமை?
இன்று எனக்கு, நாளை உங்களுக்கும் தான்……! தயவு செய்து இந்த செய்தியை பிரசுரிக்கவும். சம்மந்தப் பட்டவர்க இத்துடன் திருந்திக்கொள்ள வேண்டும்.
இன்று எனக்கு, நாளை உங்களுக்கும் தான்……! தயவு செய்து இந்த செய்தியை பிரசுரிக்கவும். சம்மந்தப் பட்டவர்க இத்துடன் திருந்திக்கொள்ள வேண்டும்.
நன்றி
இவர்களால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தம்பி
http://www.jvpnews.com/srilanka/81663.html
Geen opmerkingen:
Een reactie posten