[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 03:55.40 AM GMT ]
இந்த சட்டமூலத்தின்படி இலங்கையின் ஜனாதிபதி ஒருவர் எத்தனை தடவைகளும் போட்டியிடலாம் என்றுள்ளது.
எனினும் அந்த சட்டமூலத்தில் உள்ள சில விடயங்களின் அடிப்படையில் மூன்றாவது முறையாக ஒரு ஜனாதிபதிக்கு போடடியிட முடியாது என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரன் என் சில்வா உட்பட்ட பலர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில் இது தொடர்பில் ஆளும் கட்சியின் அங்கத்துவ கட்சிகள் தமது நிலைப்பாட்டை வெளியிட தயக்கம் தெரிவித்துள்ளன.
அமைச்சர்களான திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் தமது கட்சி எவ்வித தீர்மானத்துக்கும் வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUhxz.html
கோத்தபாயவின் கோரிக்கையை பரிசீலிக்கும் கூட்டமைப்பு
[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 05:37.02 AM GMT ]
இது குறித்து கருத்து வெளியிட்ட வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பாதுகாப்பு செயலாளரது அழைப்பு கட்சித் தலைமையின் கலந்தாலோசனையில் உள்ளதாகத் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வடக்கு மாகாண முதலமைச்சரை சந்திப்பதற்கு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் ஊடாக தூது அனுப்பியிருந்தார்.
கொழும்பு அரசுக்கும் வடக்கு மாகாண சபைக்கும் இடையிலான கருத்தியல் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு அரச தரப்பின் சார்பில் தாம் பேசுவதற்கு தயார் என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டிருந்தார்.
இச் சந்திப்புக்காக கோத்தபாய யாழிற்கு வரவும் தயாராக உள்ளதாக மனோகணேசன் தெரிவித்திருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUhx3.html
கோத்தபாய நேரடியாக பேச்சுவார்த்தைக்கு என்னை அழைக்கவில்லை: விக்னேஸ்வரன்
[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 01:26.31 PM GMT ]
இன்று வட மாகாண சபை அமர்வு முடிந்து வந்தபோது மனோ கணேசன் மூலம் கோத்தபாய ராஜபக்ஷ தங்களை சந்திக்கவிருப்பதாக வெளிவந்த செய்தி தொடர்பில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
மனோ கணேசனின் தாயாரின் மரணச் சடங்கில் கலந்து கொண்ட பாதுகாப்பு செயலாளர், என்னை சந்திக்க தயாராக இருப்பதாக மனோ கணேசனிடம் தெரிவித்துள்ளார. மாறாக தூது விடவில்லை.
கோத்தபாய ராஜபக்ஷவிடமிருந்து எந்தவிதமான அழைப்பும் இதுவரை கிடைக்கவில்லை. அப்படி கிடைத்தால் எமது கட்சியுடன் பேசி முடிவெடுப்பேன்.
தேசிய பாதுகாப்பு சம்பந்தமாக கேட்ட கேள்விக்கு பதில் கூறும் போது, நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தேசிய பாதுகாப்பில் பங்கம் விளைவிக்கின்றனர் என இராணுவப் பேச்சாளர் கூறினால் அதற்கு பதில் அளிக்க தயாராக உள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUgp2.html
Geen opmerkingen:
Een reactie posten