[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 12:34.22 PM GMT ]
இந்த பெண்களிடம் இருந்து 10 தங்க பிஸ்கட்டுகள், 8 வளையல்கள், தங்கச் சங்கிலி, தங்க கைப்பட்டிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பெண்களிடம் இருந்து மூன்று கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றின் பெறுமதி 20 மில்லியன் ரூபா என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் தமது உடல் பகுதியில் மறைத்து இந்த தங்கத்தை சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு கடத்தி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUfvy.html
நண்பனின் காதலியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இலங்கை நபர் துபாயில் கைது
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 01:01.21 PM GMT ]
துபாய் ஜெபல் அலி பிரதேசத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் பணி புரியும் ஹோட்டலில் ஊழியர்கள் தங்கும் அறையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இலங்கை நபர், நண்பனின் காதலின் கழுத்தை கத்தியால் கீறி அந்த பெண்ணை அச்சுறுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கு மேலதிகமாக இலங்கை நபர் மீது சட்டவிரோதமான மதுபானம் அருந்திய குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUfvz.html
சர்வதேச ரீதியில் இலங்கையின் தோல்விக்கு காரணம் என்ன? தயான் ஜயதிலக்க விளக்கம்
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 01:04.56 PM GMT ]
இலங்கையிடம் சரியான வெளிநாட்டுக் கொள்கை இல்லாமையே சர்வதேச ரீதியில் தோல்விக்கு மேல் தோல்வியை சந்திப்பதற்கு பிரதான காரணம் என முன்னாள் வெளிநாட்டு இராஜதந்திரியும், அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
நாளைய ஞாயிறு சிங்கள பத்திரிகையொன்றுக்கு அவர் வழங்கியுள்ள விசேட நேர்காணல் ஒன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைக்கு எதிராக ஐ.நா ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தொடராக கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் தோல்வியடைவதற்கு தகுதியில்லாத வெளிநாட்டுத் தூதுவர்கள் நியமிக்கப்படுவது ஒரு காரணம் மட்டுமே.
இதுபோன்ற பல காரணங்கள் உள்ளன. சரியானதோ, பிழையானதோ பரவாயில்லை. சர்வதேச விவகாரம் தொடர்பிலான வியூகம் ஒன்று இருக்க வேண்டும்.
வெளிநாட்டுக் கொள்கையொன்று இருக்க வேண்டும். இந்த இரண்டும் ஆய்வின் அடிப்படையிலேயே அமையப் பெற வேண்டும். அவ்வாறானதொரு ஆய்வொன்று இருப்பதாக தென்படவில்லை.
இலங்கைக்கு வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் சரியான பார்வையொன்று இல்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUfv0.html
Geen opmerkingen:
Een reactie posten