தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 13 september 2014

தமிழர்களுக்கு தீர்வு வழங்க வேண்டுமென்ற எண்ணமே அரசாங்கத்திடம் இல்லை: த.கலையரசன்!



ஊவாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரம்- மக்கள் ஆர்ப்பாட்ட​ம்
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 01:09.04 PM GMT ]
ஊவாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இன்று பதுளை பிரதேசத்தில் நடைபெற்றது.
அந்த வகையில் ஸ்பிரிங்வெலி, மாயாமலை, நல்லமலை மற்றும் கிலனல்பின் ஆகிய தோட்டப் பிரிவுகளில் பிரசாரக் கூட்டங்கள் நடாத்தப்பட்டது.
இக் கூட்டத்தில் அமைச்சர் உள்ளிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பொருளாதார பிரதி அமைச்சருமான முத்துசிவலிங்கம், அம்பகமுவ பிரதேச சபை தலைவர் வெள்ளையன் திணேஷ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்கள் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கருத்து தெரிவிக்கையில்..
இந்த தேர்தல் காலங்களில் தோட்டங்களின் பெயர்களை தெரியாதவர்கள் கூடவந்து வாக்கு கேட்பார்கள். இதன்போது நீங்கள் தீர்மானிக்க வேண்டியது சமூக ரீதியாக சேவை செய்ய கூடியது பலம் யாரிடம் இருக்கின்றது என்று எண்ணி வாக்களிக்க வேண்டும்.
அரசு தொழில்களான பொலிஸ், ஆசிரியர், தொடர்பாடல், கிராம சேவகர் சமூக உத்தியோகஸ்தர்கள், தபால் உத்தியோகஸ்தர்கள், உதவி ஆசிரியர்கள் ஆகியவற்றை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொடுத்தது இலங்கை தொழிலாளர் காங்கிரஸே சாரும்.
எமது சமூகத்திற்கு பிரஜா உரிமை அரச தொழில்வாய்புகளை யாரிடமும் தேவையான என்று கேட்டு பெற்றுக்கொடுக்கவில்லை. அக்காலங்களில் தேவைக்கேற்றவாறு தமது உரிமைகளை பெற்றுக்கொடுத்திருக்கின்றது.
அரசாங்கத்துடன் எமது தேவைகளை பெற்றுக்கொள்ள பேரம்பேசும் பொழுது தனிநபராக இருந்து எதையும் சாதிக்க முடியாது. ஒரு ஸ்தாபனத்தினூடாகவே பேரம்பேச முடியும்.
அத் ஸ்தாபனம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மட்டும் தான் என்பது இதன்போது தெரிவித்துக்கொள்வதுடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸான ஸ்தாபனத்தை பலப்படுத்த தங்களது வாக்குகளை வெற்றிலை சின்னத்திற்கும் இலக்கம் 02,11,12என்ற இலக்கத்திற்கு வாக்களிக்குமாறு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இப்பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.
மதுபான கடையை அகற்றுமாறு கோரி மக்கள் ஆா்ப்பாட்ட​ம்
வட்டவளை ரொசல்ல புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள பியர் கடையை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு அப்பிரதேச மக்கள் இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நேற்று வரை பியர் கடையாக இருந்த இந்த கடை இன்று மதுபான விற்பனை கடையாக மாறியுள்ளது. எனவே உடனடியாக இவ்விடத்திலிருந்து அகற்றுமாறு கோரி குறித்த கடைக்கு முன்பாக பொதுமக்கள் உட்பட கிராமப்புர மக்களும் பாதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.
மதுபான கடையாக மாறியுள்ளதனால் பல சிரமங்கள் ஏற்படுவதோடு, சமூதாய சீர்கேடுகளும் ஏற்படுவதுடன் மாணவர்களுக்கும் குடி பழக்கம் ஏற்படும் அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
இதன்போது மதுபான கடை உரிமையாளரை வினாவியபோது,
தாங்கள் சட்டரீதியான அனுமதியை பெற்றுள்ளதுடன் இம் மதுபான கடையை தொடர்ந்து நடாத்தி செல்ல முடியும் என கூறியமையும் குறிப்பிடத்தக்கது.
இதற்கான முடிவை மலையகத்தின் அரசியல் பிரமுகர்கள் முன்வந்து இந்த சமூதாய சீர்கேடுகளை தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUfv1.html

தமிழர்களுக்கு தீர்வு வழங்க வேண்டுமென்ற எண்ணமே அரசாங்கத்திடம் இல்லை: த.கலையரசன்
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 03:35.34 PM GMT ]
தமிழர் பிரச்சினைக்கு தீர்வினை வழங்க வேண்டும் என்ற நல்ல சிந்தனை இந்த அரசாங்கத்திடம் இல்லையென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்துள்ளார்.
கனடாவில் இருந்து வாழவைப்போம் அமைப்பினரால் வழங்கப்பட்ட ஒரு தொகை பணத்தினை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வானது, பொத்துவில் குண்டு மடு பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன், மாநகர சபை உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.பாஸ்கரன், ஆலயத் தலைவர், மாகாணசபை உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் பா.புவிராஜா மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர்,
அம்பாறை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசமாக பொத்துவில் உள்ளது. இங்கு வாழ்ந்த மக்கள் யுத்த சூழ்நிலை காரணமாகவும், சுனாமி அனர்த்தம் காரணமாகவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏனைய இரண்டு சமூகங்களினாலும் ஆக்கிரமிக்கப்பட்டு வாழும் சமூகம் இவ்வாறு இன்னல்பட்டு வாழும் தமிழ் சமூகத்திற்கு இந்த நாட்டு அரசாங்கத்தினால் எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. மாறாக அவர்கள் வாழும் இடங்களை சூறையாடுவதிலும், அவர்களை தன்மானத்துடன் வாழவிடாமல் தடுப்பதிலுமே குறியாக இருந்து செயற்பட்டு வருகின்றார்கள்.
வடகிழக்கு மாகாணங்களிலே எமது உறவுகள் சொல்ல முடியாத துன்பதுயரங்களை தாங்கிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்த நாட்டிலே தமிழர்கள் தமிழர்களாக வாழமுடியாது என்ற நிலைமையை உருவாக்கியது இந்த அரசாங்கம். இதற்காகவே நாங்கள் போராட்ட வடிவங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை எழுந்தது.
ஆனால் எந்தத் தீர்வினையும் வழங்க வேண்டும் என்ற நல்ல சிந்தனை இந்த அரசாங்கத்திடம் இருக்கவில்லை.
அதனால்தான் த.தே.கூட்டமைப்பு இன்று ஜனநாயக ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் போராட்ட வடிவங்களை முன்னெடுத்துக் கொண்டு வருகின்றோம்.
இந்த நாட்டு அரசாங்கத்திடம் தமிழர்களுக்கான முழுமையான எந்தத்தீர்வினையும் வழங்குவதற்கான எந்தத்தீர்வுத்திட்டமும் இல்லை. எப்படியாவது காலத்தை இழுத்தடித்து தமிழர்களது இருப்பை இல்லாமல் செய்வதே இவர்களது முழு நோக்கமாக இருக்கிறது.
தமிழர்கள் இந்த நாட்டிலே பூர்வீகமாக வாழ்ந்தவர்கள் என்பதனை மறைப்பதற்காக வேண்டி பல வேலைத் திட்டங்களை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. ஏனைய சமூகங்கள் அனுபவிக்கும் அனைத்தையும் எமது சமூகமும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே நாங்களும் ஜநனாயக ரீதியாக பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
கிழக்கு மாகாணசபை மூன்று சமூகங்களையும் உள்ளடக்கியது என்றும் வாயளவில் பேசுகின்றார்கள். ஆனால் தமிழினத்திற்கு அநீதியான விடயங்களே இங்கு நடக்கின்றன.
மாகாணசபையிலே நடந்து கொண்டிருப்பதெல்லாம் அவர்களது இனம் சார்ந்த, கட்சிசார்ந்த முன்னெடுப்புக்களே அன்றி, எங்களுடைய பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக எந்த விடயத்தினையும் மாகாண சபையினூடாக அவர்கள் தயாரில்லை என்பதனை அவதானிக்க முடிகின்றது.
மாகாண சபைகளினூடாக எந்த ஒரு வேலைத் திட்டத்தினையும் முன்னெடுப்பதற்கு இந்த அரசாங்கம் முன்வரவில்லை என்பது யதார்த்தமான உண்மை என்பதனை அவர்களே வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.
வடமாகாண சபையினை எடுத்துக்கொண்டால் இங்குள்ள முதலமைச்சர் எந்த அதிகாரமும் அற்றவராகவே இருந்து கொண்டிருக்கின்றார். இதுதான் இந்த நாட்டின் ஜநனாயகம்.
பிரதேச செயலகங்களூடாக பல அபிவிருத்திகளை முன்னெடுத்திருந்தாலும், தமிழ்ப் பிரதேசங்களை பொறுத்த வரையில் மாற்றான் மனப்பாங்கோடுதான் சகல விடயங்களையும் கையாண்டு கொண்டிருக்கின்றார்கள்.
இந்த நிலைமையை அரசாங்கம் மாற்ற வேண்டும் அப்போதுதான் சகல இனங்களும் நிம்மதியாக இந்த நாட்டிலே வாழ முடியும்.
தமிழர்கள் தமிழர்களாக வாழவேண்டும் என்பதற்காகவே த.தே.கூட்டமைப்பு இன்று அரசியல் செய்து கொண்டிருக்கின்றது. எங்களது இனத்தின் விடுதலைக்காக உழைத்துக் கொண்டிருப்பவர்களின் கரத்தினை பலப்படுத்துவது உங்களது கடமையாகும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUfv2.html

Geen opmerkingen:

Een reactie posten