அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சென்றவர்களை அவுஸ்திரேலியா அங்கிருந்து தனது அண்மைத் தீவுகளுக்கு அனுப்பியிருந்தது. அந்த தீவுகளில் நாளுக்கு நாள் நடக்கும் துன்பகரமான விடயங்கள் தற்போது கசிந்த வண்ணம் உள்ள நிலையில் தற்போது அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மனுஸ் தீவு புகலிடக் கோரிக்கையாளர் முகாம்களில் நாள்தோறும் குழப்ப நிலைமைகள் ஏற்பட்டு வருவதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம் கோரி படகு மூலம் சென்றடையும் இலங்கையர்கள் உள்ளிட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் மனுஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்படுகின்றனர்.
இவ்வாறு தடுத்து வைக்கப்படும் புகலிடக் கோரிக்கையாளர்கள் பல்வேறு துன்பியல் அனுபவங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுய காயப்படுத்தல்கள், தற்கொலை முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு பாரிய சம்பவங்கள் மனுஸ் தீவு முகாம்களில் நாள்தோறும் பதிவாகின்றன.
புகலிடக் கோரிக்கையாளர்கள் ஒருவரை ஒருவரை தாக்கிக்கொள்ளல், பாதுகாவலர்களை தாக்குதல், தற்கொலை முயற்சி என பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புகலிடக் கோரிக்கையாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் தடுத்து வைக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகள் அவர்களின் உளவியல் சுகாதாரத்தைப் பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுஸ் தீவுகளில் புகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தப்படுவது குறித்து மனித உரிமை அமைப்புக்கள், ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் முறைப்பாடு செய்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTZKUjs3.html
Geen opmerkingen:
Een reactie posten