தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 8 september 2014

அவுஸ்திரேலியாவின் தொடர் மனித உரிமை மீறல்: புதிய ஆணையாளர் கண்டனம்

கட்சியின் பிரதித்தலைவர் பதவி: பொறுமை காக்கும் ரவி கருணாநாயக்க
[ திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2014, 06:09.55 AM GMT ]
ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித்தலைவராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்படுகின்றமை தொடர்பில் கட்சியின் உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
 இந்நிலையில் சஜித் பிரேமதாஸவின் நியமனம் தொடர்பில்  ஊவா மாகாணசபை தேர்தல் முடியும் வரை தாம் பொறுமை காப்பதாக, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
சஜித் பிரேதமாஸ பிரதித்தலைவராக நியமிக்கப்படுகின்றமைக்கு எதிராக ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தமது எதிர்ப்பை, கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையிலேயே ரவி கருணாநாயக்கவின் கருத்தும் ஆங்கில இதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் பிரதித்தலைவர் பதவி வழங்கப்படும் போது சஜித் பிரேமதாஸவுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.
அண்மையில் பதுளை சம்மேளனக்கூட்டத்தில் வைத்து இந்த விடயத்தை ரணில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJTcKUix5.html
ஊவா தேர்தலில் அரச வளங்களின் பயன்பாடு அதிகரிப்பு: புத்திஜீவிகளின் ஒன்றியம்- ஊவாவில் குடும்பம் ஒன்றுக்கு 2500 ரூபா லஞ்சம் வழங்கும் அரசு: ஜே.வி.பி
[ திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2014, 06:16.11 AM GMT ]
ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரங்களில் அரச வளங்களை பயன்படுத்துவது பெருமளவில் அதிகரித்துள்ளதாக மனித உரிமைகளை பாதுகாக்கும் புத்திஜீவிகளின் ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பு தெரிவித்துள்ளது.
அரச வளங்களை பயன்படுத்துவது, அரச அதிகாரிகளை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துவது, பல்வேறு திட்டங்களை ஆரம்பிப்பது, திறந்து வைப்பது போன்ற சட்டவிரோத தேர்தல் பிரச்சாரங்களை தடுக்க தேர்தல் அதிகாரிகள் தவறியுள்ளனர் எனவும் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, திவிநெகும திணைக்களம், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், சுதேச வைத்திய அமைச்சு, சுகததாச விளையாட்டு மைதானம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, தேசிய லொத்தர் சபை, வனஜீவராசிகள் திணைக்களம் என்பனவற்றின் அதிகாரிகளும், அவற்றின் வளங்களும் தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்தில் அரசாங்கம் குடும்பம் ஒன்றுக்கு 2500 ரூபா லங்சம் வழங்குகின்றது: ஜே.வி.பி
ஊவா மாகாண சபை தேர்தலை முன்னிட்டு இலங்கையின் அமைச்சர் பசில் ராஜபக்சவின் பொறுப்பில் உள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மொனராகலை மாவட்டத்தில் குடும்பம் ஒன்றுக்கு தலா 2500 ரூபாவை லஞ்சமாக வழங்கவுள்ளதாக ஜே. .வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
வறட்சி நிவாரண நிதி என்ற அடிப்படையிலேயே இந்த நிதி தொகை லஞ்சமாக வழங்கப்படவுள்ளதாக அவர் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
2014 செப்டெம்பர் 5ஆம் திகதியிட்டு அமைச்சினால் இது தொடர்பில் மொனராகலை மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தின்படி நாளை 9ஆம் திகதி ஆரம்பிக்க வேண்டிய இந்த நிதிக்கொடுப்பனவு 16ஆம் திகதிக்கு முன்னர் வழங்கிமுடிக்கப்பட வேண்டும் என்று அமைச்சினால் கேட்கப்பட்டுள்ளது என்று விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்காக அமைச்சினால் ஏற்கனவே 200 மில்லியன் ரூபாய்கள் அரசாங்க அதிபரின் கணக்குக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இந்தவகையில் அமைச்சர் பசில் ராஜபக்சவின் கீழ்வரும் திவிநெகும திணைக்கள உத்தியோகத்தர்களே இந்த நிதியை பகிர்ந்தளிக்கவுள்ளதாக விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
மொனராகலையில் கடந்த மாதத்தில் பாரிய வறட்சி நிலை ஏற்பட்டிருந்தது.
அதன்போது இந்த நிவாரண கொடுப்பனவுகள் வழங்கப்பட்டிக்க வேண்டும். எனினும் தேர்தலை மையமாகக்கொண்டு தற்போது அந்த கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாக ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTcKUix6.html
அவுஸ்திரேலியாவின் தொடர் மனித உரிமை மீறல்: புதிய ஆணையாளர் கண்டனம்
[ திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2014, 06:35.43 AM GMT ]
தமது நாட்டில் அடைக்கலம் கோருவோர் தொடர்பில் அவுஸ்திரேலியா தொடரான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசைன் தமது கன்னி உரையில் இந்த விடயத்தை அவர் உள்ளடக்கியுள்ளார்.
ஆணையாளரது உரையின் பிரதிகள் நாளை காலையில் விநியோகிக்கப்படவுள்ளன.
இந்நிலையில் குறித்த உரையில் அவுஸ்திரேலியா அகதிகளை நடத்தும் விதமும், அவர்களை குடியேற்றும் இடங்களில் உரிய வசதிகள் இன்மையும் உட்பட்ட விடயங்களை இளவரசர் ஹுசைன் கண்டித்துள்ளார்.
அத்துடன் எல்லைக்கு அப்பால் வைத்து அகதிக் கப்பல்கள் திருப்பியனுப்பப்படும் செயற்பாட்டையும் ஹுசைன் விமர்சித்துள்ளார்.
சட்டவிரோதமாக அகதிகளை தடுத்து வைத்தல், கொள்கை மற்றும் சொந்தநாடுகளுக்கு திருப்பியனுப்பப்பட்டதன் பின்னர் அவர்கள் சித்திரவதை செய்யப்படுதல் போன்ற செயற்பாடுகளையும் இளவரசர் கண்டித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTcKUhoy.html

Geen opmerkingen:

Een reactie posten