தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 8 september 2014

இலங்கை சர்வதேச இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் மையமாக மாறலாம்: ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை!

சர்வதேச ரீதியில் அல்-கெய்தா அமைப்பின் மையமாக இலங்கை மாற இடமிருப்பதால், தெற்காசியா, மேற்குலக நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ராஜதந்திர அரசியல் மற்றும் இராணுவ புலனாய்வு  சார்ந்த தெளிவான இணக்கப்பாடுகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியுள்ளது.
அல்-கெய்தா அமைப்பின் தலைவர் ஐய்மன் அல் ஜவாஹிரியினால் அண்மையில் வெளியிடப்பட்ட காணொளியின் மூலம் பௌத்த நாடுகளுக்கு ஏற்பட்டு வரும் இஸ்லாம் அடிப்படைவாதத்தின் தாக்கங்கள் குறித்து தெரியவந்துள்ளது என ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
நிலைமை பாரதூரமாக இருக்கும் சந்தர்ப்பத்தில் இலங்கை அரசாங்கம் அந்த விடயம் தொடர்பில் அமைதியாக இருந்து வருகிறது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் அழுத்தங்கள் காரணமாக இலங்கையின் வீசா நடைமுறைகளிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.
பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான் நாடுகள் ஊடாக இலங்கைக்கு வருபவர்கள் குறித்தும் பொருட்கள் இறக்குமதி தொடர்பாகவும் கடைபிடிக்கப்படும் கொள்கைகளில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.
இணையத்தள வழியாக வீசாவை பெற்று இலங்கைக்கு வரும் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், ஆப்கானியர்கள், நைஜீரியர்கள், சிரியர்கள் குறித்து அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
இலங்கையின் மத நல்லிணக்கத்திற்கு தடையாக இருக்கும் இவர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTcKUhoz.html

Geen opmerkingen:

Een reactie posten