தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 9 september 2014

கீரிமலை காணி அபகரிப்பில் அதிகாரிகள்…

செட்டிக்குளத்தில் காணி அபகரிப்பு முறியடிப்பு…

இந்த நிலையில் குறித்த 24 குடும்பங்களும் தமது காணியினை துப்பரவு செய்து மீள் குடியேருவது தொடர்பாக செட்டிக்குளம் பிரதேசச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்த நிலையில் கடந்த மாதம் 15 ஆம் திகதி குறித்த 24 குடும்பங்களுக்கும் பிரதேச செயலாளரினால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் வழங்கப்பட்ட ஒரு ஏக்கர் காணியை துப்பரவு செய்து வேலி அமைத்து குடியமர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்தக் காணிகளின் சொந்தக்காரர்கள் தமது காணிகளை துப்பரவு செய்து வந்த நிலையில் அங்கு வந்த இராணுவத்தினர் இக்காணி இராணுவத்திற்கு சொந்தமானது.இங்கு எவரும் துப்பரவு செய்யக்கூடாது என தெரிவித்து மக்களை வெளியேற்றியுள்ளனர். பின் அங்கு சென்ற வன இலாகா அதிகாரிகள் குறித்த காணிகளை துப்பரவு செய்து எல்லைக்கற்களை அமைத்து வருகின்றனர்.
இது தொடர்பாக குறித்த காணியின் உரிமையாளர்கள் மீண்டும் அங்கு சென்று வன இலாகா அதிகாரிகளிடம் இது தொடர்பாக கேட்ட போது இக்காணிகள் அனைத்தும் வன இலாகாவுக்குச் சொந்தமானது. இக்காணியை துப்பரவு செய்து மரம் நடும் திட்டத்திற்கு எமக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த காணியில் நேற்றுக்காலை வன இலாகா அதிகாரிகள் மூன்று பேர் உள்ளடங்களாக கூலி ஆட்களை வைத்து குறித்த காணிகளை துப்பரவு செய்து எல்லைக்கள் அமைத்து வந்தனர். இது தொடர்பாக பாதீக்கப்பட்ட மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மற்றும் செட்டிக்குளம் பிரதேச சபை உறுப்பினர் சிவம் ஜெகதீஸவரன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இதன் போது பாதீக்கப்பட்ட மக்களுடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மற்றும் செட்டிக்குளம் பிரதேச சபை உறுப்பினர் சிவம் ஜெகதீஸவரன் ஆகியோர் குருக்கள் புதுக்குளம் கிராமத்திற்குச் சென்றனர். இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் அங்கிருந்த வன இலாகா அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
எனினும் மேலிடத்தில் இருந்து தமக்கு வழங்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாகவே தாம் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக அவர்கள் தெரிவித்தனர். எனினும் இக்காணி 24 குடும்பங்களுக்கு செட்டிக்குளம் பிரதேசச் செயலாளரினால் வழங்கப்பட்டதோடு,இக்காணியில் துப்பரவு பணியினையும், ஏனைய வேலைத்திட்டங்களையும் மேற்கொள்ள அந்த மக்களுக்கு பிரதேசச் செயலாளர் அனுமதி வழங்கியுள்ளதையும் பாராளுமன்ற உறுப்பினர் வன இலாகா அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார்.


உடனடியாக குறித்த துப்பரவு பணிகளை நிறுத்துமாறும்,குறித்த காணி மக்களுக்குச் சொந்தமானது, வன இலாகாவுக்கு இங்கு காணி எவையும் இல்லை எனவும், பின் பகுதியில் உள்ள சுமார் 150 ஏக்கர் காணிகள் மக்களுக்கே சொந்தமானது என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். இந்த நிலையில் வன இலாகா அதிகாரிகள் மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளை கைவிட்டுச் சென்றனர்.vono-mp-stopvono-mp-stop-01
http://www.jvpnews.com/srilanka/81419.html

குருநாகலில் சிறுமி கடத்தல்!

குறித்த சிறுமி வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளை ஜன்னல் வழியாக உள்நுழைந்த சிலரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என்றும், இதுதொடர்பில் குருநாகல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர் என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. பமாரா கேஷானி என்ற சிறுமியே கடத்தப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/81423.html

தமிழக மீனவர்கள் 6 பேர் தலைமன்னாரில் கைது!


அவ்வாறு சென்ற படகுகளில் ஒன்று பழுதடைந்ததால் கச்சதீவு அருகே அது தத்தளித்துக்கொண்டிருந்தது என்றும் இதன்போது அங்குவந்த இலங்கைக் கடற்படையினர் அதிலிருந்த 6 பேரைக் கைது செய்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களை கடற்றொழில் நீரியல் வளதிணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மன்னார் கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே இலங்கைச் சிறையில் 15 மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதுindian fish
http://www.jvpnews.com/srilanka/81428.html

கீரிமலை காணி அபகரிப்பில் அதிகாரிகள்…


இந்த நிலையில் கடற்படையினரின் தேவைக்காக சுமார் 144 ஏக்கர் தனியார் காணியை கையகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகத் தெரியவருகிறது. குறிப்பாக கீரிமலைப் பகுதியில் அளவீடு செய்வதற்ககான செயற்பாடுகளை நில அளவைத் திணைக்களத்தினர் மேற் கொள்கின்றனர் என்று அந்தத்திணைக்கள தெிகாரி ஒருவர் தெரிவித்தார். இன்னும் இரண்டொரு நாட்களில் இந்தப் பணிகள் பொலிஸாரின் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்படவுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.keerimalai-Land
http://www.jvpnews.com/srilanka/81431.html

Geen opmerkingen:

Een reactie posten