[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2014, 07:02.36 AM GMT ]
இலங்கை மன்றக்கல்லூரியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அந்த காலத்தில் கைச்சின்னத்தை தவிர வேறு சின்னத்தில் போட்டியிடுவதில்லை எனக் கூறி தோல்வியடைந்த சிலர் இருந்தனர்.
யானைச் சின்னத்தை தவிர வேறு சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனக் கூறி தோல்வியடையும் நபர்கள் இன்றும் உள்ளனர்.
1993 ஆம் ஆண்டளவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்த சிலர், கை அல்ல காலையாவது சின்னமாக வைத்து வெல்ல வேண்டும் என எண்ணினர்.
இதனடிப்படையில் 1994 ஆம் ஆண்டு மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது. இதனால், கடந்த காலத்தை எண்ணி அழுது கொண்டிருக்க வேண்டாம்.
முன்னோக்கி பாருங்கள், எதிர்காலத்தை பாருங்கள் என நான் யோசனை கூறுகிறேன்.
இது சிரமமான வேலை எனினும் எம்மால் செய்ய முடியும். இம்முறை தவறினால், எதிர்கால சந்ததி எம்மை சபிக்கும் எனவும் ஜயம்பதி விக்ரமரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSWKUgx5.html
தாய்லாந்தில் இருந்து ஒக்கிட் பூக்கன்றுகளுடன் வந்த ஒருவர் கைது
[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2014, 07:17.26 AM GMT ]
குறித்த நபர் நேற்று நள்ளிரவு சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து கொண்டுவரப்பட்ட 400 அந்தூரியம் மற்றும் ஒக்கிட் பூக்கன்றுகள் மீட்கப்பட்டதாக சுங்கப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அவற்றின் பெறுமதி 2 லட்சம் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட வெலிவேரிய பிரதேசத்தைச் சேர்ந்த நபரிடம் இருந்த பூக்கன்றுகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் 10 ஆயிரம் ரூபா அபராதத்தில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த வாரமும் தாய்லாந்தில் இருந்து அந்தூரியம் பூக்கன்றுகளை கொண்டுவந்த ஒருவர் கைது செய்யப்பட்டு, 10 ருபா அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJSWKUgx6.html
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தலில் போடியிட முடியாது: சட்டத்தரணிகள் சங்கம்
[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2014, 07:26.14 AM GMT ]
மூன்றாவது முறையாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிட முடியாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மூன்றாம் தவணைக்காக ஜனாதிபதி தேர்தலில் போட்யிடுவது குறித்து உச்ச நீதமன்றில் சட்ட விளக்கம் அளிக்கும் போதே சட்டத்தரணிகள் சங்கம் இவ்வாறு சுட்டிக் காட்டியுள்ளது.
மேலு மக்களின் கருத்து கவனத்திற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாம் தவணைக்காக தேர்தலில் போட்டியிட முடியாது என்பதே தமது நிலைப்பாடு எனவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது அரசியல் சாசனத்திற்கு புறம்பானது எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJSWKUgx7.html
கோத்தபாய அரசியலுக்கு வரும் தகுதியை பெற்றுள்ளார்: கொழும்பு மாநகர மேயர்
[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2014, 07:35.48 AM GMT ]
கொழும்பு மாநகர சபைக்கு வாகனங்கள் மற்றும் இயந்திர உபகரணங்களை வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச பிரதமராக தெரிவாகும் முன்னர், நகர அபிவிருத்தி அதிகாரச் சபை மற்றும் வீடமைப்பு அமைச்சை கோரினார்.
இந்த நிறுவனங்கள் ஊடாகவே மக்களிடம் நெருங்கி செல்ல முடியும்.
அரசியலுக்கு வருவதற்கு முன் தகுதியை ஏற்படுத்திக்கொள்ளவே கோத்தபாய ராஜபக்ஷ நகர அபிவிருத்தி அமைச்சை பொறுப்பேற்றார்.
அவர் அரசியலுக்கு வர தகுதியை பெற்றுள்ளதாக தான் எண்ணுவதாகவும் முஸ்ஸாமில் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSWKUfoy.html
பளை- யாழ் ரயில் நிலையங்களுக்கான ஊழியர்கள் நியமிக்கப்படவில்லையெனக் குற்றச்சாட்டு
[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2014, 07:43.16 AM GMT ]
பளை இருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை இந்த மாதம் 24 ஆம் திகதி திறந்து வைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், 10 ரயில் நிலையங்களை கொண்ட இந்த ரயில் பாதையில் நிலைய பொறுப்பதிகாரிகள், ஊழியர்கள், ரயில் சாரதிகள், பாதையை பராமரிக்கும் தொழிற்நுட்ப அதிகாரிகள் உட்பட எவரும் நியமிக்கப்படவில்லை என சங்கத்தின் செயலாளர் எஸ்.பி. விதானகே தெரிவித்தார்.
மேலதிகமாக உள்ள ரயில் நிலையங்களுக்கு தேவையான ஊழியர்களை நியமிக்காது, ஏற்கனவே இருக்கும் ஊழியர்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கான 243 வெற்றிடங்களும், பராமரிப்பு தொழிற்நுட்ப மற்றும் தொழிற்நுட்பமற்ற ஊழியர்களுக்கான 3 ஆயிரம் வெற்றிடங்களும் கட்டுப்பாட்டாளர்களுக்கான 300 வெற்றிடங்களும் நிலவுகின்றன.
ஏற்கனவே இவ்வாறு ஊழியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படும் நிலையில், இருக்கும் ஊழியர்களை வடக்கு ரயில் பாதையில் உள்ள ரெயில் நிலையங்களுக்கு நியமிப்பதன் மூலம் ஊழியர்களுக்கான தட்டுப்பாடு மேலும் உக்கிரமடையும் எனவும் விதானகே குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSWKUfoz.html
Geen opmerkingen:
Een reactie posten